மார்ச் 11, 2025 • Makkal Adhikaram

விடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்களும் நர்சும் எப்போது வருகிறார்கள்? எப்போது போகிறார்கள்? என்பது விடையூர் கிராம மக்களுக்கும், சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் தெரியவில்லை என்கிறார்கள். மேலும், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றி உள்ள ஒரு 10 கிராமங்களுக்கு இதுதான் மையமாக இருந்து வருகிறது .
இங்கே, டாக்டர் எந்த நேரத்திற்கு வருகிறார்? எந்த நேரத்திற்கு போகிறார்? அதுவும் தெரியவில்லை என்கிறார்கள். மேலும், நர்ஸ் எப்போதும் டூட்டி மாறி, மாறி இருக்க வேண்டியவர்கள், அவர்கள் இஷ்டத்துக்கு வருவதாக தெரிவிக்கின்றனர். இது பற்றி அங்கு இருந்த நர்ஸ் ஒருவரை கேட்டால் அதற்கு அவர் சொல்லும் பதில், இந்த ஊருக்கு என்று தனியாக யாரையும் நியமிக்கவில்லை .நாங்கள் வேறு இடத்தில் வேலை செய்கிறோம் .எங்களை இந்த இடத்தில் வேலை செய்ய சொல்கிறார்கள்.
மேலும், அவர்கள் சொல்லும் பதில் இந்த ஊருக்கு போக்குவரத்து வசதி இல்லை. சில பேருக்கு டூவீலர் வண்டி ஓட்ட தெரியாது. அதனால், அவர்கள் டூவீலர் கை போட்டு தான் வர வேண்டும் என்கிறார்கள். இப்படி காரணங்களை சொல்வதற்கு வேலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இதை திருவள்ளூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய துணை இயக்குனர் தான் இதற்கு பொறுப்பேற்று சரியான முறையில், இங்கே டாக்டர்களையும், நர்ஸ்யும், நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அது மட்டும் அல்ல,
இங்கிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரம் வந்தால் தான், திருவள்ளுவருக்கு வந்து மருத்துவம் பார்க்க முடியும். அதுவரை ஒரு முதலுதவி செய்யக்கூடிய ஒரு மருத்துவம், ஒவ்வொரு மனிதருக்கும், அவசியம் தேவை .கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் நாய் கடி ,பாம்பு கடி ,தேள் கடி ,இப்படி போன்ற விஷ ஜந்துக்கள் மத்தியில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு இதுபோன்ற உடனடி சிகிச்சை அவசியம் தேவை .
அது மட்டுமல்ல, பக்கத்தில் இருக்கக்கூடிய விலங்குகள் மருத்துவமனையும், கடம்பத்தூருக்கு சென்றால்தான் முடியும். அந்த மருத்துவர்களும், கிராமங்களுக்கு சென்று பணி செய்வதில்லை. அதனால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால்,ஸ்டாலின் அரசாங்கம் மக்களை தேடி மருத்துவம் என்கிறார் .இங்கே மக்கள் தேடினாலும் மருத்துவம் கிடைக்கவில்லை.