மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram

புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு 

கதிரவனை வணங்கும் இத் திருநாளில்  உழவர் பெருமக்கள் 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 

உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான  சூரியனே! 

உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே 

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே! 

தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் ஆத்மாக்களுக்கு அருள் புரிவாய் ஆண்டவனே! உனக்காக கொண்டாடும் இந்நாளில்! 

முன்னோர்களை வணங்கி, அவர்கள் ஆசி பெறும் பொங்கல்

 திருநாளாக கொண்டாடும் மக்களுக்கு இறைவன் இன்பத்தை அளித்து 

ஆத்ம சந்தோஷத்தை அளித்திட வேண்டும். 

நாட்டில் அறமற்ற ஆட்சி அழிந்திட, தர்மத்தின் ஆட்சி கொடுக்கும் புதிய அரசியல் உருவாக்கி, நாட்டு மக்களை காத்திடுவாய்! 

வஞ்சக சூழ்ச்சியில், வாழ்பவர்களை வதைத்திடு கதிரவனே! 

நல்லறத்துடன் வாழ்பவர்களை துணை நின்று காத்திட சித்தர்கள், 

மகான்கள் உலக நன்மைக்காக கருணையுடன் இச்செயல் புரிய வேண்டுகிறேன் இறைவா…..! 

இந்த இனிய பொங்கல் திருநாளில் !

எமது பத்திரிக்கை, இணையதளம், youtube சேனல் சார்பாக 

அரசுத்துறை அதிகாரிகள்,நண்பர்கள், எமது பத்திரிக்கை நண்பர்கள், மக்கள் அதிகாரத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், காவல்துறையினர், மற்றும் மக்கள் அதிகாரத்தின் இனிய வாசகர்கள், அனைவருக்கும் மக்கள் அதிகாரம் சார்பில் எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

 என்றும் மக்கள் நலனில் மக்கள் பணியில் மக்கள் அதிகாரம் – ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *