மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகளை  முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் எல்லை காவல்துறை அதிகாரிளை இரண்டாவது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்க, தமிழ்நாடு சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை.

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

நாட்டில் நடக்கும் மணல் கொள்ளைக்கும், சவுடு மண் கொள்ளைக்கும்,மலை மண் தாது மணல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கனிமவளத்துறை அதிகாரிகள் ,நீர்வளத் துறை அதிகாரிகளை  முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக அந்தந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அந்தந்த எல்லை காவல் நிலைய ஆய்வாளர்களை இரண்டாவது குற்றவாளியாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இந்த வழக்கில் சேர்த்தால் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி  வைக்க முடியும் என்று தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கை

மேலும் ,இப்படி சேர்த்தால் நாட்டில் மணல் கொள்ளைக்கும் தாது மணல் கொள்ளைகளுக்கும் ,சவுடு கொள்ளைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த கனிம வள கொள்ளைகள் தடுக்க முடியும் இது எதனால் ஏற்ப்படுகிறது ? இந்த கொள்ளைகள் அனைத்தும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எடுக்கப்படுகிறது.

 மேலும் பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருந்து கொண்டு, ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இவர்கள் இருப்பதால் இந்த மணல் கொள்ளை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது .கடந்த காலங்களில் மக்களுக்கு அவ்வளவு விவரம் தெரியவில்லை. தெரிந்த பிறகு தற்போது விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், சமூக நல பத்திரிகையாளர்களும், இந்த கனிம வள கொள்ளைகளுக்கு எதிராக போராட வேண்டி உள்ளது. இப்படி போராடும்போது அவர்களுக்கு எதிராக போடப்படும் பொய் வழக்குகள், ஆட்சியாளர்களின் மறைமுக அதிகார துஷ்பிரயோகம்.இதை தடுக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தால் மட்டுமே முடியும்.

மேலும் ,சட்டப்படி மணல் எடுத்தால் தவறு இல்லை. ஆனால், இதுவரை எந்த மணல் குவாரிகளும், சவுடு குவாரிகளும் நாட்டில் சட்டப்படி நடந்ததில்லை. அதனால்தான் இந்த விஷயத்தில் அமலாக்க துறையே உள்ளே வந்துள்ளது. தவிர, கனிம வளத் துறை அதிகாரிகள் , நீர்வளத்துறை அதிகாரிகள்  ஒரு யூனிட் மணலுக்கு அல்லது மண்ணுக்கு எத்தனை அடி நீள அகலம்,  எத்தனை அடி ஆழம் என்பதை அந்தந்த பகுதி கிராம மக்கள் முன்னிலையில் அல்லது சமூக ஆர்வலர்கள் அல்லது பத்திரிகையாளர்கள் கேட்டால் அதைப் பற்றி விவரமாக தெரிவித்து ,அந்தப் பகுதியில் மண் எடுக்கும் போது அல்லது மணல் எடுக்கும் போது அங்கே போர்டு வைக்க வேண்டும் .

தவறான முறையில் அதிகப்படியாக எடுத்தால் , அதை அளப்பதற்கு சமூக ஆர்வலர்களோ அல்லது கிராம மக்களோ அல்லது சமூக நல பத்திரிகைகளோ அப்பகுதியை அளக்க காவல்துறை பாதுகாப்பு தர வேண்டும் .மேலும், இது சம்பந்தமாக கிராம மக்கள் தட்டி கேட்டால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது அல்லது வேறு வழியில் பழிவாங்க ஏதாவது திட்டம் தீட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டால், சட்டம் அவர்களுக்கு எதிராக கடமை தவறிய காவல் அதிகாரிகள் பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு நீதிமன்றம் இதற்கான பொதுநல வழக்கில் இவர்களை எல்லாம் சேர்த்து மணல் கொள்ளை விசாரணையில் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வரும்போது நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இதில் அதிகப்படியாக மணல் எடுத்தால் அதற்கு பைன் போட்டு கனிமவளத் துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் அது தவறு. அவர்களுக்கு நீதிமன்ற தண்டனை வழங்க வேண்டும். ஏனென்றால் இறுதியாக எல்லா கோப்புகளிலும், ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்பவர்கள் கனிமவளத் துறை அதிகாரிகள். அவர்கள் சரியான முறையில் கண்காணிக்காமலோ அல்லது காசு வாங்கிக்கொண்டு கண்காணிக்காமலோ இருப்பதால், மணல் கொள்ளைகள் நாட்டில் ஏற்படுகிறது .

அது மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு நாளும் இந்த மணல் எடுக்கும் போது அல்லது சவுடு மண் எடுக்கும் போது எத்தனையூனிட் மணல் ஒரு நாளைக்கு அந்தந்த குவாரிகளில் எடுத்தார்கள் என்பதை அவருக்கு அதன் விவரம் தெரிவிக்க வேண்டும் .இவ்வாறு கனிமவளத்துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ,இருவரும் தனித்தனியாக ஆய்வுகளை மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்க வேண்டும் .அப்படி கொடுத்தால் நிச்சயம் இந்த கனிம வள கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது உறுதி.

 அதனால், கனிம வள கொள்ளையில் மேற்படி அதிகாரிகளை முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாகவும் நீதிமன்றம் சேர்த்தால் நாட்டில் மணல் கொள்ளை என்பது இருக்காது  என்பதை தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *