
ஒரு இந்து எஸ் சி தன்னுடைய தாய் மதத்திலிருந்து கிறிஸ்தவராகவோ,முஸ்லிமாகவோ மாறினால் அவருக்கு இந்து கிறிஸ்தவ எஸ்சி என்று சான்று வழங்க முடியாது உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்துள்ளது.

மேலும், மற்ற மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அந்த எஸ்.சி சான்றிதழ் கொடுக்கலாம். எஸ் ஐ பட்டியலில் உள்ளவர்கள் கிறிஸ்தவராகவோ, முஸ்லிமாகவோ மதம் மாறினால் பட்டியலின மக்கள் பி சி எம். பி. சி.பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
அவர்களுக்கு எஸ்.சி. சான்று அளிக்க முடியாது. என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை கொடுத்துள்ளது.மேலும்,கிறித்தவ ஆதிதிராவிட பெற்றோருக்குப் பிறந்தவர்கள், இந்து, பெளத்தம் அல்லது சீக்கிய மதத்துக்கு மாறினால், அவர்களை அந்த மதத்தினர் ஏற்றுக் கொண்டால், மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சான்றிதழ் வழங்க வேண்டும் என்று 2009ம் ஆண்டு அரசாணையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அரசாணை ! ஒரு மதத்தில் இருந்து மதம் மாறியவர்கள் மீண்டும் தங்களுடைய தாய் மதத்துக்கு(இந்து மதத்திற்கு) திரும்பினால் மட்டுமே அந்த அரசாணை பொருந்தும் என்று தமிழகத்தில் இருக்கிறது. வேறு மதத்திற்கு மாறியவர்கள் எஸ்சி சாதி சான்றிதழ் பெற இயலாது. அவர்கள் மதம் மாறியிருந்தால், அதன்படியே பி.சி, எம்பிசியாக மாறிவிடுவார்கள். கிட்டத்ததட்ட எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடைமுறையாக உள்ளது.
இது தெரியாமல் பல லட்சம் பேர் மதம் மாறி இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் தங்களை எஸ்சி என்றுதான் சொல்லிக் கொள்கிறார்கள். மேலும் மதம் மாறிய பிறகு
அவர்களுடைய நிலை என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. இனியாவது பட்டில் இன மக்கள் மதம் மாற்றும் கும்பலிடம் உஷாராக இருப்பது நல்லது . இந்தப் பிரச்சனை கூட அரசு வேலைக்காக தங்களுடைய சான்றிதழ் கேட்கும்போது அரசாங்கம் அது கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக வருவாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போதுதான் இப்ப பிரச்சனையை சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றம் வரை கொண்டு செல்லும் போது அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தெளிவாக மதம் மாறியவர்களுக்கு எஸ் சி சான்றிதழ் வழங்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது .