இஸ்ரேல் சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியத்தில் முக்கிய நாடுகளுடன் இந்தியா இணக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியா ஒரு முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதை பிராந்தியத்தின் மிகவும் சுவாரஸ்யமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றாக இப்ப பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நாடுகள் இந்தியாவுடன் உறவு விருப்பமும், ஆர்வமும் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதில் அமெரிக்க எதுவும் செய்வதற்கு இல்லை என்பதுடன் முரண்பாடான வழியில் கூட பயனடைய வாய்ப்பில்லை என்று கட்டுரை ஆசிரியர் ஸ்டீபன் ஏ குக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு கூட்டாளி நாடுகள், அந்நாட்டுக்கு மாற்றம் தேட விரும்பினால் ,அதில் இந்தியா சிறந்த தேர்வாக இருக்கும்.
தவிர, அமெரிக்கா இனி இப்பகுதியில் இணையற்ற ஆதிக்க சக்தியாக இருக்க முடியாது. மத்திய கிழக்கில் இந்தியா தனது இருப்பை விரிவுபடுத்தும் வரை, ரஷ்யாவோ அல்லது சீனவோ கூட அந்த இடத்துக்கு வர முடியாது என தெரிவித்துள்ளார் .மேலும், ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கட்டுரையாசிரியர் இந்தியாவுக்கு வந்த போது, இந்தியர்கள் மத்திய கிழக்கில் ஒரு பெரிய பங்கை வகிக்க விரும்பவில்லை என்று கருதியதை நினைவு கூர்ந்துள்ளார். தற்போது பயணத்தின் 10 ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார் .
மேலும், அமெரிக்க அதிகாரிகளும், அரசியல் ஆய்வாளர்களும், சீனா எடுக்கும் ஒவ்வொரு ராஜதந்திர நடவடிக்கைகளிலும், மத்திய கிழக்கில் சீன முதலீட்டு சந்தேகத்துடன் கண்காணித்து வந்த அதே நேரத்தில், இப்ராந்தியத்தில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது என்ற சுவாரசியமான புவிசார் அரசியல் முன்னேற்றங்களில் ஒன்றை அமெரிக்கா பல ஆண்டுகளாக கவனிக்க தவறிவிட்டது என்று குக் தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடாவைப் பொறுத்தவரை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகியவை இந்தியாவுடன் உறவை விரிவு படுத்துவதற்கான வழிகளை தீவிரமாக தேடி வருகின்றன என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளும் குறிப்பாக பாகிஸ்தான் உடன் உறவு வைத்திருக்கும், சவுதி அரேபியா இதில் இணைந்திருப்பதால், அது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும் .இது இந்தியாவுக்கான முன்னோக்கு இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், ஒரு பொதுவான ஆர்வத்தில் இருந்து உருவாகிறது. இதில் பெரும் பகுதி பொருளாதாரமும் அடங்கியுள்ளது.
மேலும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவு குறித்து கட்டுரையில், பிராந்தியத்தில் அந்த நாடு மிகவும் வளர்ந்த நாடு என குறிப்பிட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். ஒரு வருடத்திற்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு இந்தியா வரும் கௌரவம் கிடைத்தது. அதிலிருந்து இரு நாடுகளும் தங்கள் உறவை பலப்படுத்திக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்துள்ளன.
குறிப்பாக கடந்த காலத்தில் சிறிய சண்டை சர்ச்சைக்குரிய அரசியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியாவின் வணிக சமூகம் இஸ்ரேல் முதலீடு செய்வதிலிருந்து விலகி இருந்தது. அது இனி மாறக்கூடும் என்று தெரிவித்துள்ளார் .மேலும், 2022 ஆம் ஆண்டில் அதானி குழுமம் மற்றும் இஸ்ரேலியர் பங்குதார நிறுவனம் சேர்ந்து ஹைஃபா துறைமுகத்திற்கான டெண்டரை 1.2 பில்லியன் டாலருக்கு வென்றுள்ளன.
மேலும், இந்தியா இஸ்ரேல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா இஸ்ரேல் உறவு சிக்கல் ஆனது தான் ஏனெனில் பாலஸ்தீனியர்களுக்கான ஆதரவில், இந்தியா உறுதியாக உள்ளது. ஈரானுடன் நட்பு உறவில் உள்ளது. அந்நாட்டிலிருந்து இந்தியா கணிசமான அளவு எண்ணெய் வாங்குகிறது. இந்தியாவின் மேல் தட்டு மக்கள் காலணித்துவ அனுபவத்துடன் இஸ்ரேலை காண முனைகின்றன என்று தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த பெருமை இது.
மேலும், மோடியின் சமீபத்திய இரண்டு நாள் எகிப்து பயணம் பற்றி குறிப்பிடுகையில், இந்திய உறவின் புதிய அத்தியாயம் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், இருநாட்டு உறவுகளும் வலுவடைந்துள்ளது.
தவிர, சீனர்களைப் போலவே இந்தியர்களும், எதிர்த்த ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு தங்கள் பொருட்களை அனுப்புவதற்கான நுழைவு வாயிலாக கருதுகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும், சீனாவுடனான பெரும் வல்லரசு போட்டியின் தோற்றத்தின் மூலம் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை பார்க்க அமெரிக்க கொள்கை தொகுப்பாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது தூண்டுதலாக இருக்கிறது என்று ஆசிரியர் எழுதியுள்ளார்.
மேலும், ஜூன் மாத இறுதியில் மோடியின் அமெரிக்க பயணம் ஒரு நட்புறவு விழாவாக இருந்தது. இதில் அவரது இரவு உணவு மற்றும் நாடாளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றுவதும் அடங்கும் என தெரிவித்துள்ளார் .இது தவிர, அமெரிக்க இந்திய உறவுகளில் அனைத்து நேர்மறையான அதிர்வுகளுக்கும், இடையே அமெரிக்கா கற்பனை செய்யும் புத்தி பூர்வ பங்காளியாக இந்தியா விரும்புவது சாத்தியமில்லாதாக தோன்றுகிறது என தெரிவித்துள்ளார் .
மேலும், மத்திய கிழக்கு நாடுகளை பொருத்தவரை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் குறித்த கருத்தில் இருந்து, இந்தியா கடுமையாக வேறுபடுகிறது. மேலும் இந்தியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளின் விரிவாக்கம் என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்புகளை அமெரிக்கா குறைக்க வேண்டும் என்று தனது கட்டுரையில் குக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் இந்தியா அணி சேர்வது சாத்தியமில்லை. ஆனால் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் செய்ததை போல அமெரிக்கா உறவை இந்தியா முறிக்கவும் வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார் .தவிர, மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் அதிகாரத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய நேரம் இது என்று தனது கட்டுரையில் அமெரிக்க பத்திரிகையின் ஆசிரியர் குக் தெரிவித்துள்ளார்.