மத்திய- மாநில அரசுகளின் செய்தித் துறை ! காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிக்கை துறையில் மாற்றத்தை கொண்டு வந்து பொதுநலன் கருதி சீர் செய்வது எப்போது ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

போட்டி மிகுந்த பத்திரிகை உலகில் அவரவர் நிலை என்ன? என்று தெரியாமல் இருக்கும் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் , பத்திரிகைகள், செய்தித் துறை அதிகாரிகள் ,

சுயநலத்திற்கும், பொது நலத்திற்கும் அர்த்தம் தெரியாமல் ,இத்துறை செயல்பட்டுக் கொண்டிருப்பதால் ,பொது மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது .அதனால், இதை சீர் செய்ய வேண்டிய மத்திய மாநில செய்தித் துறை அதிகாரிகள் ,சுயநலத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இந்த துறையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் . பத்திரிக்கை துறை பொது நலன் நோக்கத்திற்காக இதை நான்காவது தூண் என்று இத்துறையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், இது நான்காவது தூணாக செயல்படவில்லை .

இதற்கு என்ன காரணம்?

அடுத்தது தகுதியற்ற பத்திரிகைகள் அதாவது காப்பி  to பேஸ்ட் பத்திரிகைகளும், தாங்களும் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிறது. அதாவது RNI இருந்தால் அது பத்திரிகை, அரசு அடையாள அட்டை இருந்தால் அது பத்திரிக்கை. செய்தியாளர் அடையாள அட்டை இருந்தால் அதுவும் பத்திரிகை. ஆனால், அதற்கான தரம் ,தகுதி இருக்கிறதா? என்பதுதான் தற்போது மிகப்பெரிய கேள்வி? இதை மீண்டும் ஏன் செய்தித் துறைக்கு வலியுறுத்துகிறேன்? என்றால்,

 ஒரு சில பத்திரிகைகளின் உண்மையான உழைப்பு, உழைக்காமல் தானும் பத்திரிகை என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிகைகள், போலியாக சமூகத்தில் வலம் வந்து கொண்டிருப்பதால், உண்மையான பத்திரிக்கையாளர்கள், பத்திரிகைகளின் வளர்ச்சி ,தடுக்கப்படுகிறது. இதை வைத்து வளர்ந்த கார்ப்பரேட் பத்திரிகைகளும் ,பத்திரிகையாளர்களும் ,தகுதியான பத்திரிகைகளுக்கு அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுத்தால், இவர்களும் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்கள் என்பதில், இங்கே அரசியல் அதிகாரத்துடன் இணைந்து ,உள்ளடி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ,ஒவ்வொரு துறையும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஆனால், செய்தித் துறையில் எந்த மாற்றங்களையும் கொண்டு வராமல் 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட அதே சட்டத்தை ,அதே விதிமுறைகளை பின்பற்றி வருகிறது .

தவிர ,பொதுமக்களும், இளைய தலைமுறைகளும் இன்று பத்திரிக்கை வாங்கி படிப்பது 10% க்கும் குறைந்து இணையதள செய்திகளையே விரும்பி படிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால்,

 செய்தித் துறையில் அதே விதிமுறைகளை வைத்துக் கொண்டு ,தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்களை செய்தித் துறை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணம் குறிப்பிட்டு சில பத்திரிகைகளுக்கும் ,தொலைக்காட்சிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கான பதிலை செய்தித் துறை அதிகாரிகள் சொல்ல வேண்டிய அவசியம் நிச்சயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், இந்த துறையை மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறை. இது எந்த ஆளுங்கட்சி வந்தாலும் ,அவர்களுக்கு சாதகமான செய்திகளை போடுகின்ற பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைக் கொள்கை முடிவு என்று தெரிவிக்கிறார்கள். இது இவர்களின் கொள்கை முடிவா? அல்லது பத்திரிக்கை துறையின் கொள்கை முடிவா? அல்லது செய்தி துறையின் கொள்கை முடிவா? அப்படி என்றால் பத்திரிக்கை துறையை ஏன் நான்காவது தூண் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது? இதற்கு செய்தித் துறை அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். மேலும்,

 இதில் நான் பார்த்தவரை ஐஏஎஸ் அதிகாரிகளைத் தவிர ,மற்ற அதிகாரிகள் அனைவரும் எந்தெந்த ஆட்சி மாற்றங்கள் அதாவது திமுக, அதிமுக ஆட்சி மாறி, மாறி வரும்போது எல்லாம் அந்தந்த கரை வேஷ்டி கட்டாத ஒரு குறை தான் தவிர, மற்ற எல்லா செயல்பாடுகளும் ,அந்த கட்சியின் ஏஜெண்டுகள் போல அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பொது துறையை, அதுவும் சமூக நலன் சார்ந்த துறையை, அரசியலாக்கப்படுவது சமூக நலனுக்கு எதிரானது .

அதனால் தான், பொது துறையாக செயல்பட வேண்டிய பத்திரிக்கை துறை, நடுநிலையாக செய்திகளை கொடுக்க வேண்டிய செய்திகள் சுயநலமாக, வியாபாரக் நோக்கத்தின் அடிப்படையில் வெளிவந்து கொண்டிருப்பதால், மக்களிடம் பத்திரிக்கை துறை விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இதனால், மக்களுக்கு போய் சேர வேண்டிய உண்மைகள் மறைக்கப்படுவதற்கு, செய்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது .இது பொதுநலத்துடன் செயல்படாமல் ,ஆட்சியாளர்களின் சுய லாபங்களுக்கு இந்த சலுகை ,விளம்பரங்களை வைத்து பத்திரிக்கை துறையை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த துறையில் இல்லாத விதிமுறைகளும், சட்டங்களும் கொண்டு வந்திருக்கிறார்கள் .அதாவது சென்னையில் RNI வாங்கி பதிவு செய்த பத்திரிகைகள் ,அதாவது பருவ இதழ்களுக்கு அரசு அடையாள அட்டை தருவார்களாம். மாவட்டத்தில் வாங்கிய பத்திரிகைகளுக்கு கொடுக்க மாட்டார்களாம் .இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? பொதுமக்கள் இந்த பத்திரிகைகளை வாங்கி படிக்கும்போது, இது எங்கே வாங்கிய RNI என்று கேட்டு வாங்கி படிக்கிறார்களா ? அல்லது தினசரி வருகின்ற பத்திரிக்கையில் எவ்வளவு முக்கிய பயனுள்ள செய்திகள்? மக்களுக்கு இந்த பத்திரிகைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது? அதில் எத்தனை சதவீதம் தரமானது? எத்தனை சதவீதம் உண்மை? எத்தனை சதவீதம் போய் ?இவ்வளவும் செய்தித்துறை பட்டியலிட முடியுமா?

மேலும், செய்தி துறையை நீதிமன்றம் தான் சரி செய்ய முடியும். ஏனென்றால் பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்வதற்கு அல்ல, அதில் அரசியல் செய்து கொண்டு, இந்த செய்தி துறை தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு மட்டுமே இது செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறை .அது மட்டுமல்ல ,நேற்று கூட இயக்குனரை சந்தித்து பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் இந்த பத்திரிகைகளுக்கான பிரதிநிதிகள் ஒருவர் கூட இல்லாமல் எப்படி? எங்கள் குறைகளையும், எங்கள் பத்திரிகைகளுக்கான வளர்ச்சிக்கான செயல்முறைகளையும் அங்கே யார் பேசுவார்கள்?

அவர் தெரிவித்தது ,இந்த பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .அதை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டார். உண்மைதான். இந்த நல வாரியத்தில் கார்ப்பரேட் பத்திரிகைகளை மட்டும் தான் நல வாரியத்தில் சேர்த்துக் கொள்ள தமிழக அரசு அரசாணை விதித்து உள்ளதா? அப்படி என்றால் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏன் அங்கே இடமில்லையா ?

அப்படி என்றால், இது செய்தித் துறையில் பொதுநல நோக்கம் இன்றி ,சுயநல நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட நல வாரியம் தான் என்பதை செய்தித் துறைக்கும், பத்திரிகை உலகிற்கு இதை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது செய்தித்துறை பொது நலன் கருதி, பத்திரிக்கை துறையில் மாற்றம் கொண்டு வருகிறதோ, அப்போதுதான் பொது மக்களுக்கு உண்மையான ஆட்சி நிர்வாகம் மக்களிடம் வெளிப்படுத்த முடியும். ஒரு பக்கம் செய்யாமலே செய்தது போல், இன்று பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 மேலும், உண்மையான நடுநிலையான ,செய்திகளை வெளியிடும் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு செய்தித் துறை எந்த விதமான சலுகை ,விளம்பரங்களும் கொடுப்பதில்லை . தவிர ,நீதிமன்றம் சொன்ன ஊழலுக்கு எதிராக போராடும் பத்திரிகைகளுக்கும் ,செய்தித்துறை எந்தவித சலுகை, விளம்பரங்களும் கொடுப்பதில்லை .இது சமூக முன்னேற்றத்திற்கும் ,நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும், தேசத்தின் ஒற்றுமைக்கும் எதிரான ஒன்று. அதனால்தான் பாமர மக்கள் எது உண்மை? எது பொய்? என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 மற்றொரு பக்கம் மக்களுக்கு தகுதியான ஆட்சியாளர்களை தேர்வு செய்யக்கூட தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் ,பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்க வில்லை. மேலும் ,சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், எங்களுடைய சொந்த பணத்தில், எங்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உண்மையை கொண்டு சேர்த்திருக்கிறோம் .அதற்கு மேல் மக்களிடம் கொண்டு சேர்க்க, எங்களிடம் பொருளாதார வலிமையில்லை.

 மேலும்,கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட மக்களின் வரிப்பணத்தில் தான் சர்குலேஷன் காட்டிக் கொண்டிருக்கிறது .இந்த சர்குலேஷன் இவர்களுடைய சொந்த பணத்தில் எத்தனை வருடத்திற்கு காட்டுவார்கள்? அதே சர்குலேஷன் மக்கள் வரிப்பணத்தில் எங்களாலும் காட்ட முடியும். இங்கே செய்திக்கு தான் முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய, தவிர ,சமூக நலனுக்காக தான் முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய, ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு ,சலுகை ,விளம்பரங்களுக்கு அவர்கள் சொல்வதை கூவிக் கொண்டிருந்தால் பத்திரிக்கை துறை  நான்காவது தூண் இல்லை என்பதை பொதுமக்களும், செய்தித்துறை அதிகாரிகளும் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *