
பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார்.
இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
மேலும், இவர் தன்னுடைய சித்து நிலையை, திண்டுக்கல்லில் உள்ள வெள்ளை விநாயகர் கோயிலில் ஆரம்பித்திருக்கிறார். அதற்காக திண்டுக்கல் வெள்ள விநாயகர் கோயிலை இவர் தேர்வு செய்துள்ளார். வெள்ளை விநாயகர் கோயிலில் படுத்துக் கொள்வது, பக்கத்தில் சென்று படுத்துக் கொள்வது ,இப்படி அந்த இடத்தில் இவருடைய சித்த தவ வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.மேலும்,

இந்த நிலையில் மக்கள் இவரை பித்து பிடித்தவர் என்று அப் பகுதியில் ஆரம்பத்தில் நினைத்து விட்டார்கள். பிறகுதான் தெரிந்தது, இவரைப் பார்த்துவிட்டு சென்றாலோ, இவரிடம் அடி வாங்கினாலோ,நம்முடைய கர்மாக்கள் கழிகிறது. இப்படிப்பட்ட நிலையில், மூக்கு பொடி போட்டுக் கொண்டு ,அழுக்கு துணிகளை அணிந்து கொண்டு ,எதற்கு வாழ்கிறார்கள்? அந்த ரகசியம் தெரியாது. மேலும், அவர்கள்!
மனித நிலையிலிருந்து, தெய்வ நிலைக்கு சென்று விட்டால், இங்கே எதுவுமே தேவைப்படாது. உலக வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பொருட்ல்ல. அவர்களுக்கு என்ன ?தேவையோ ,அது கிடைத்துவிடும் என்கிறார்கள்.மேலும், இவர்களுக்கு

உலகப் பொருட்களின் மீது ஆசை ஏற்படாது. மனித மனம் மண், பெண், பொன், இந்த மூன்று ஆசைகளையும் துறந்துவிடும். தெய்வங்கள் காட்சி கொடுக்கும். தெய்வத்தோடு பேசுகின்ற நிலை ஏற்பட்டு விடும். அந்த தெய்வ நிலையிலே , அவர்கள் சித்தமாக இருப்பதால், சித்தர்களாக ஆகிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட சித்து நிலை! அடையும் போது, அவர்களால் எதையும் செய்ய முடியும். இயற்கையின் உருவமான பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு கட்டுப்படும். இவர்கள் இந்த உடலை விடும்போது, ஜீவன் பஞ்சபூதங்களில் ஐக்கியமாகிவிடும். இது எல்லோருக்கும் கிடைக்காது.இது தான், பிறவியின் நோக்கம்.மேலும்,

ஒவ்வொருவருடைய கர்மாவின் கணக்கு இவர்களுக்கு பார்த்தாலே தெரியும். அது மட்டுமல்ல,உலகில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பது தெரியும்.தவிர, ஒவ்வொரு உயிரினங்கள் முதல் மனிதர்கள் வரை ,இந்த உலகில் வாழ்க்கை என்பது அவரவர் கர்மாவை கழிப்பதற்கு தான் இங்கே பிறவியே எடுத்திருக்கிறார்கள்.
அந்த கணக்கிற்கு தகுந்தவாறு, அவரவர் எங்கு பிறக்க வேண்டும் ?எந்த நாட்டில் பிறக்க வேண்டும் ?எந்த இடத்தில் பிறக்க வேண்டும்? அதுதான் அவரவர் பிறவி கணக்கு. மேலும், பிறவி கணக்கு குறைப்பதும், கூட்டுவதும், அவரவர் செயல்பாடுகளில் இருக்கிறது.
நல்வினை நல்லதை கொண்டு போய் சேர்க்கும். தீவினை தீயதை அவர்கள் கணக்கில் கொண்டு போய் சேர்க்கும். இதற்குள் வாழும் போது, இந்த கணக்கை முடிப்பார்களா ?அல்லது ஞானத்தை தேடுவார்களா? அல்லது இந்த தெய்வ நிலையை அடைவார்களா? இதுதான் மனித வாழ்க்கை.மேலும்,

இந்த மனித வாழ்க்கையில்! மனிதன் மாமனிதனாகலாம் . மாமனிதன் தெய்வமாகலாம். அப்படி தான், பாக்கியநாதன் என்ற ராணுவ வீரர் இன்று பிச்சை சாமிகளாக தெய்வ நிலையை அடைந்துள்ளார். அன்று ராணுவத்தில் பணியாற்றிய போது இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தார். இன்று ஆன்மீகத்தில் தெய்வநிலை அடைந்து, இன்றும் பலருக்கு அருள் பாலிக்கக் கூடிய தெய்வமாக, கருணை கடலாக, விளங்குகிறார். அவரை பற்றி இன்னும் மக்களுக்கு அதிகம் தெரியவில்லை. இவர்,
கர்ம வினையை போக்குவதில் சிறந்த ஆதித் சக்தி படைத்தவர் என்கின்றனர். மேலும்,அவர் உயிருடன் இருந்த போது ,அந்த கர்ம வினைகளை போடா, போடா ,என்று அடித்து விரட்டி இருக்கிறார். அவரிடம் அடி வாங்கியவர்கள், நல்ல நிலைக்கு சென்று இருக்கிறார்கள்.
இப்போதும் சமாதி நிலை அடைந்தாலும், சித்தர்களுக்கு என்றுமே அழிவற்ற நிலை . அவர்கள் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவர்கள். மேலும்,அவர் எப்படி ராணுவத்தில் பணியாற்றிய போது இந்த நாட்டை காப்பாற்றினாரோ ,அதேபோல் இப்போதும் இந்த உலகத்தை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் அரசியலில் யாரை ஜெயிக்க வைக்க வேண்டும்? எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வர வைக்க வேண்டும்? யார் வந்தால்! இந்த மக்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு, இவர்கள் செயல் படுவார்கள்? ஒவ்வொருவருடைய பிறவி கர்மாவின், கணக்குக்கு ஏற்றவாறு, நல்லவர்களையும், கெட்டவர்களையும், தேர்வு செய்கிறார்கள்.
அப்படி என்றால்! இக்காலகட்டத்தில் கலியுகத்தில் மனிதர்களுக்கு அதாவது பெரும்பான்மை மக்களுக்கு, வாழ்க்கை நல்லதும், கெட்டதும், தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நல்லவர்களையும், கெட்டவர்களையும் ,புரிந்து கொள்ளாமல் வாழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்தம், ஜாதி, என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் உண்மையாக வாழ்ந்தார்கள். அதை மறுக்க முடியாது. இப்போது எல்லாம் பணத்திற்காக நடிப்பாகிவிட்டது. பணம் தான் வாழ்க்கை என்று தீர்மானித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனித வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத இவர்கள். இது பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். வெந்ததைத் தின்று வந்தவரை பேசுகின்ற கூட்டம் இறுதியில் இவர்களுடைய நிலை என்ன? மேலும்,சொர்க்கம், நரகம் இது எல்லாம் அந்த காலத்தில் ஒரு பயமுறுர்த்தியாவது மனித வாழ்க்கையை ஒழுக்கத்தில், ஒழுங்கு படுத்தினார்கள்.
இப்போது இவர்களுக்கு வாழ்க்கை சிக்கல் மற்றும் பல துன்பங்களை அனுபவிக்கும் போது, இப்போது கோயிலுக்கு சென்று போலி பக்தியின் வேஷத்தில் சாமி கும்பிடுகிறார்கள். என்னவோ இவர்கள் கொடுக்கின்ற தேங்காய், பழம் அதை எதிர்பார்த்துக் கொண்டு கடவுள் இருக்கிறாரா?
இல்லை ,நீ கொள்ளை அடித்த பணத்தை கொண்டு போய் உண்டியலில் போட்டு விட்டால், கடவுள் தண்டனையிலிருந்து அல்லது சட்டத்தின் தண்டனையிலிருந்து, உன்னை காப்பாற்றி விடுவாரா? அதுதான் இல்லை. இந்த சட்டம் வேறு, கடவுளின் சட்டம் வேறு.மேலும்,

கடவுள் உன்னை படைத்தவன். அவனை நீ ஏமாற்ற முடியாது. நீ ஏமாற்றுவதெல்லாம், நீங்க மனிதர்களிடம் நல்லவர்களாக வேஷம் போட்டு நடித்துக் கொண்டிருக்கலாம். அந்த நடிப்புக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
நான் திறமையாக ஏமாற்றி விட்டேன் ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்து விட்டேன். ஆனால், உன்னுடைய கணக்கில் ஏமாற்றம் என்பது வரவு வைக்கப்படும். இந்த ஜென்மத்தில் நீ தப்பித்து விட்டாலும் ,அடுத்த ஜென்மத்தில் அது வட்டி போட்டு, உன்னை வசூல் செய்துவிடும்.

எல்லாம் வல்ல இறைவன் சிலையாக பார்த்தால் கற்சிலை !கடவுளாக தெய்வமாக பார்த்தால், அது தெய்வம். அதனால் தான், அதற்கு மந்திரங்கள், பூஜை முறைகள், ஆகம முறைகள் ,விதித்து நாம் அதை தெய்வமாக வழிபடுகிறோம். அப்படி வழிபடும்போது, அதன் மூலம் நமக்கு நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகிறது.மேலும்,
நாட்டில் ஆயிரக்கணக்கான சித்தர்கள் ஆருபமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தெய்வீக சட்டத்தை மதிக்காமல் வாழ்ந்தால் அல்லது அல்லது பிற உயிர்களுக்கு தீங்கிழைத்தால்,சட்டப்படி ஒரு நீதிபதி அவருக்கு தண்டனை கொடுக்கவில்லை என்றால், அல்லது காவல்துறையில் அவருக்கு சட்டப்படி அவர் மீது உள்ள குற்றத்தை நிரூபிக்கவில்லை என்றால், மூன்று பேருக்கும் சேர்த்து சித்தர்கள் தண்டனை கொடுப்பார்கள். எப்படி கொடுப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

மேலும்,இப்போது எப்படி ஸ்டாலின் எத்தனை கோடி கொள்ளை அடித்தாலும் , இன்பம், சந்தோஷம் எங்கே? என்று குடும்பம் மாட்டிக் கண்டு முழிக்கிறது? சசிகலா எந்த அளவுக்கு ஆடினார்களோ, இன்று அடக்கி உட்கார வைத்து விட்டார்கள்.
தவிர,அவர்களுடைய ஆட்டம், யாருக்கும் புரியாத ஒரு ஆட்டம். நினைப்பார்கள் நாம் பெரிய அளவில், கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நிச்சயம் நடக்காது. அவர்கள் வாழ விட மாட்டார்கள். தவறான வழியில் வந்த பொருள் சந்தோஷம் தவறாது. இதுதான் ரகசியம்.
இப்போதவது புரிகிறதா? சித்தர்களின் செயல்பாடு! அவர்கள் தான் இந்த உலகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் மனித வாழ்க்கையின் நல்லது, கெட்டது எல்லாம் ஆக இருக்கிறார்கள். அவர்கள் தான் தெய்வம்.எனவே, மனிதனாக பிறந்தாலும், தெய்வமாகலாம்.