மனித வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆன்மீகத்தை அரசியலில் ! இளைஞர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடாமல், அவர்களை நெறிப்படுத்தும் ஆன்மீக உச்சி மாநாடு – மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இளைஞர் நலன் வேலைவாய்ப்பு தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு துறை மத்திய அமைச்சரான மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் கூறுகையில்!

போதை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆன்மீகம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய முக்கிய அம்சம்.

அதை மத்திய அரசு சார்பில் ஜூலை 18ல் இந்த மாநாட்டை வாரணாசியில் தொடங்க உள்ளது. இதற்காக புனித கங்கை பாயும் வாரணாசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது .இதில் ஆன்மீக அமைப்புகளின் இளைஞர் பிரிவு பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இளைஞர் பிரதிநிதிகள் ஒன்று கூடி போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்கான உத்திகளை வகுப்பார்கள்.

மேலும் ,இந்த மாநாட்டில் போதைப் பழக்கத்தை புரிந்து கொள்ளுதல் ,போதைப் பொருட்களை விற்கும் வலை பின்னல் ,வர்த்தக தாக்கம் அமைப்பு ரீதியாக இளைஞர்களை அணுகுதல் போன்ற உறுதிமொழிகளை ஏற்று போதையில்லாத இந்தியாவை உருவாக்க ,இளைஞர்களுக்கு இது ஒரு பயிற்சி .

ஆன்மீகத்தை மத்திய அரசு அரசியலில் கொண்டு வந்து இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.

மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் ,அவன் ஆன்மீகத்தை தவிர ,அவனை நெறிப்படுத்தும் நம்முடைய இறைவழி இந்திய கலாச்சாரம் மிகவும் தொன்மையானது.மேலும் ,

இதை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் , இந்தியா முழுவதும் விரிவு படுத்த வேண்டும். இன்று இளைஞர்கள் போதைப்பொருளில் தீய பழக்கங்களில் அடிமையாவதை தடுக்க ஒரே வழி .இது தவிர ,இளைஞர்களை நல்வழிப்படுத்தும் ஒரே சாதனம் ஆன்மீகத்தை தவிர்த்து வேறொன்றும் இல்லை.

அதனால் ,மனித சமூகம்அதை விட்டு ,விட்டு எத்தனை பட்டங்கள் பயின்றாலும், பேருக்கு பின்னால் அந்தப் பட்டங்களை போட்டுக் கொண்டாலும்,மனிதனை உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்ல முடியாது.

இது ஜாதி மதங்களைக் கடந்தது. மனித வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவு செய்யும் ஒரே இடம் ஆன்மீகம். மத்திய அரசு இதைக் கொண்டு வந்து ,நாட்டில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது.

மேலும், இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் ,அதிகமானோர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் .அதாவது சராசரியாக 28 வயது உடையவர்கள் அவர்களை தேசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக ஆன்மீக மாநாடு உருவாக்குகிறது.

மேலும் ,2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவு மட்டுமல்ல, அது ஒரு இந்தியாவின் தொலைநோக்கு பார்வை .

இதன் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்தி ,நாட்டின் விதியை வடிவமைத்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும், முன்னணியில் இருந்து வழி நடத்துபவர்களாகவும், நமது இளைய தலைமுறையினர் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *