
தமிழகத்தில் ரோடு ஷோ நடத்திய முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் . ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்? எவ்வளவு பேர் இதுவரை பயன் அடைந்திருக்கிறார்கள்?

இது பற்றிய விவரம் எந்த தொலைக்காட்சியாவது, எந்த பத்திரிக்கையாவது, இதுவரை கேட்டிருக்குமா? அந்த ரோட் ஷோவை படம் பிடித்து மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ஒரு சினிமா நடிகராக இருந்தால் கூட மக்கள் முகத்தை பார்பதற்காவது ஓடி வருவார்கள். ஆனால் கட்சிக்காரர்களை வைத்து ,கட்சிக்காரர்கள் கூட்டி வரும் கூட்டத்தை வைத்து, இந்த ரோட் ஷோ நடத்துவதில் தமிழக மக்களுக்கு என்ன பயன்?

மேலும், முதல்வர் பதவி என்பது மக்களிடம் ஷோ காட்டும் பொறுப்பல்ல. அது மக்கள் நலன் சார்ந்த ஒரு பதவி. அதற்கு எந்தெந்த வேலை மக்களுக்காக செய்ய வேண்டும் என்பது நாள்தோறும் சிந்திக்க வேண்டியது ஒரு பொறுப்பான வேலை. அப்படிப்பட்ட வேலையை நடிப்பு அரசியலாக்கி விட்டது. திமுக அரசு.

இதுவரை தமிழ்நாட்டில் எந்த முதலமைச்சராவது இந்த ரோட் ஷோவை நடத்தி இருக்கிறார்களா? காமராஜர் காலத்தில் இருந்து ,பக்தவச்சம் காலத்திலிருந்து ,எம்ஜிஆர், கருணாநிதி ,ஜெயலலிதா காலத்திலிருந்து,

எந்த முதலமைச்சராவது தமிழ்நாட்டில் முதலமைச்சர்கள் ரோட் ஷோ மாநாட்டை நடத்தி மக்களுக்கான சேவையை செய்து இருக்கிறார்களா? அவர்கள் செய்யாததை இவர் இந்த ரோட் ஷோ மூலம் செய்து காட்டி இருக்கிறாரா?

இப்படி எல்லாம் ஒரு மலிவான அரசியலை முதல்வர் ஸ்டாலின் நடத்துவது எதற்காக? என்பது தான் தமிழக மக்களின் கேள்வி? முதல்வர் ஸ்டாலின் இதையெல்லாம் விட்டு,விட்டு யோகி ஆதித்யநாத் எப்படி மக்களை சந்தித்து மக்களிடம் எளிமையாக குறைகளை கேட்கிறார் ? என்பதை பார்த்து தெரிந்து கொண்டு ,அரசியல் செய்யுங்கள் – தமிழக மக்கள்.