மன அழுத்தத்தில் இருக்கும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார ?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 05, 2024 • Makkal Adhikaram

உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ,அதிகாரிகள் தினந்தோறும் வேதனைப்படுவதாக தெரிவிக்கிறார்கள். மாநகராட்சியில் பணிபுரியும் நண்பர் ஒருவர் விஆர்எஸ் கொடுத்துவிட்டு போய்விடலாம் போல இருக்கு என்கிறார் .மேலும், வேலை செய்வதற்கு பிடிக்கவில்லை. பயங்கரமான ஊழலாக இருக்கிறது.பொன்னையா நகராட்சி நிர்வாக இயக்குனராக இருக்கும் போது பரவாயில்லை. இப்போது ரொம்ப மோசமாக இருக்கிறது என்கிறார்கள்.

இது தவிர, மாநகராட்சி தான் அப்படி என்றால், பேரூராட்சியில் பணிபுரியக்கூடிய பெண் பொறியாளர் ஒருவர் வேலையை விட்டுவிட்டு போய்விடலாமா? என்கிறார். அந்த அளவிற்கு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க என்ன காரணம்? ஒரு பக்கம் அரசியல் கட்சியினர், மற்றொரு பக்கம் பொதுமக்கள், செய்த வேலையை குறை சொல்வதும் ,எவ்வளவு நிறைவாக செய்தாலும் ,மீண்டும் அதை செய்ய சொல்லி பிரச்சனைகளை உருவாக்குகிறார்களே ஒழிய, அதற்கான தீர்வு எங்களால் கொடுக்க முடியவில்லை.மேலும்,

எப்படி செய்தாலும், அதில் வேண்டும் என்று சிக்கல்களை உருவாக்கி ,அதில் திருப்தி அற்ற பேச்சுக்களை பேசி வருகிறார்கள். இது மனசாட்சி உள்ள அதிகாரிகளின் புலம்பல். இது ஒரு புறம் என்றால், கவுன்சிலர்கள் ,சேர்மங்கள் இடையே பெரும் போட்டி நடக்கிறது .சேர்மன் எந்த அளவுக்கு சுருட்ட முடியுமோ, அந்த அளவுக்கு சேர்மங்கள் சுருட்ட அவர்கள் ஒரு திட்டம் . மொத்தமே நீங்களே எடுத்துக் கொண்டால், எங்கள் வார்டுக்கு என்ன என்ற கேள்வி ? 

இப்படி பல இடங்களில் இந்த வார்டு கவுன்சிலர்களுக்கும், சேர்மங்களுக்கும் வாக்குவாதம் ,வாய் சண்டை போட்டியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தினந்தோறும் செய்யக்கூடிய அலுவல் பணிகள், அதிகாரிகள் எப்படி செய்ய முடியும்? நிர்வாகத்தை ஒரு சுமூகமாக நடத்தக்கூடிய அளவுக்கு உள்ளாட்சி நிர்வாகம் 99% இல்லை. மக்கள் பிரச்சினையை விட, இவர்கள் பிரச்சனை தான் அதிகமாக இருக்கிறது. இதில் அதிகாரிகள் வேலை செய்வதற்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லாமல் பலர் இருந்து வருகிறார்கள்.மேலும்,

கடந்த ஆட்சி காலங்களில் எப்படி இருந்தோம்? இது மிகவும் மோசமாக இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊராட்சி, நகராட்சி ,பேரூராட்சிகளில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் அழுத்தம் கொடுக்கிறார் என்கிறார்கள் .இவர் அழுத்தம் கொடுத்தாலும் அதற்கான நிதி? அதை செயல் ஆக்கும் செய்யக்கூடிய அதிகாரிகள்? அலுவலர்கள்? பணியாளர்கள் ?எதுவுமே சரியான முறையில் அதற்கான திட்டம் வகுத்து செயல்படாமல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால், எப்படி வேலை ஆகும்?

 இன்னும் சொல்லப்போனால் அதற்கான நிதி ஆதாரம் கூட இல்லை என்கிறார்கள் .இந்த நிலையில் முதல்வரின் கலைஞர் கனவு இல்ல திட்டம் எப்படி நிறைவேற்ற முடியும் என்பது தான் அதிகாரிகளின் மனவேதனையில் இருந்து வருவதால், அவர்களால் பணி சுமை அதிகரித்து

வேலை செய்ய முடியவில்லை.மேலும்,அன்றாட பணிகள் ஒருபுறம் மற்றொரு புறம் இப் பிரச்சனைகள் ,அதனால், அவர்கள் தங்களுடைய சங்கங்கள் மூலம் போராட்டத்தை அறிவித்து சில நாட்கள் போராட்டத்தின் மூலம் தங்கள் வேதனைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா ?மேலும்,

 ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை என்று புலம்பும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், இதில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தை கொண்டு வந்து அதற்கான திட்டம் சரியான முறையில் வகுக்காமல் நிறைவேற்ற முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *