ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram

ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.