மிஜாம் புயல் மழையால் சென்னை தத்தளிக்கிறது. அதற்கு காரணம் என்ன ?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தொழில்நுட்பம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

டிசம்பர் 05, 2023 • Makkal Adhikaram

மிஜாம் புயல், காற்று, மழை காரணமாக சென்னையில் பெய்த மழை எதிர்பார்காத ஒன்று. இதற்கு அரசாங்க தரப்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ,பொதுமக்களின் குற்றச்சாட்டு .ஆனால் எதிர்கட்சிகள் 4000 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது எங்கே என்ற கேள்வியை கேட்கிறார்கள் ?இதற்கு சென்னை மேயர் என்ன சொல்லப் போகிறார்?

  மேலும்,தாழ்வான சென்னையில் பகுதிகள் வெள்ளக்காடாக மிதக்கிறது. கார்,வண்டி வாகனங்கள், வெள்ளத்தில் மிதந்து செல்வது உண்மையிலே, இந்த மக்கள் எவ்வளவு வேதனையில் துடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் இருளில் மூழ்கி வீடுகளில் இடுப்பளவு தண்ணீர், எங்கு செல்வது என்று தெரியாமல் மக்கள் வேதனை. இதற்கு முக்கிய காரணம், மழை நீர் செல்லக்கூடிய கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது . அதிமுகவும், திமுகவும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் தான் பார்க்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?

https://youtube.com/watch?v=VVUSwHMFR20

மேலும் ,வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா? ஐயாயிரம், பத்தாயிரத்திற்கு தங்களுடைய வாக்குகளை விற்றுவிட்டு, அவர்களுடைய பொய்யான நடிப்பை பார்த்துவிட்டு, இயற்கை கொடுத்த தண்டனை இந்த மக்களுக்கு சரியான பாடம் .சட்டத்தை ஏமாற்றுவது ,பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது ,அனைத்திற்கும் மேலான இறைவன் என்ற ஒரு இயற்கை எவ்வளவு பெரியவன் ? என்பது நிரூபித்து காட்டி இருக்கிறது.

 இதிலும், இவர்கள் திருந்தவில்லை என்றால், செத்தாலும் திருந்த மாட்டார்கள்.மேலும் ,முன்னோர்கள் ஏரி, குளம், குட்டை எதற்காக பராமரித்து வாழ்ந்தார்கள்? என்பது இப்போது இந்த சென்னை வாசிகளுக்கு புரிந்திருக்குமா? ஏரிகள் ஆக்கிரமிப்பு ,குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு, ஆறுகளில் மணல் கொள்ளை, இவை அனைத்திற்கும் இயற்கை விடை கொடுத்த தண்டனை என்பது இப்பதாவது புரிந்து கொள்வார்களா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *