வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

அரசியல் ஆன்மீகம் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram

நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண்  தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள்.

(அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி இருக்கிறார்கள் இயற்கை வளங்களை அழிப்பது மனித இனத்திற்கு எதிரான ஒன்று . அதை தடுக்க வேண்டும்.)

 இது நாளுக்கு நாள், இந்த நிலை அதிகரித்து இது கிராமங்களாக மாறி இருக்கிறது அந்த பகுதியில் அவரவர் மடக்கி பட்டா வாங்கி ,வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகள் தான், மனித வாழ்க்கைக்கு, இயற்கை வளங்களை அழிப்பதற்கு முக்கிய காரணம் .முதலில் ஆக்கிரமிப்பு செய்வதை அது மலையாக இருந்தாலும், ஏரியாக  இருந்தாலும், குளம், குட்டைகளாக இருந்தாலும், ஆறுகளாக இருந்தாலும், அதை இந்திய அளவில் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும். இயற்கை வளங்களை பாதுகாக்காமல் மனித உயிர்களை காப்பாற்ற முடியாது .

வயநாட்டு மலையில் நிலச் சரிவு வந்த பிறகு இப்போது ஐயா, குயோ என்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பது, ஊடகங்கள் அதை காட்டிக் கொண்டிருப்பது, பேசிக்கொண்டிருப்பது இவையெல்லாம் தேவையற்ற வேலை. இதை காட்ட வேண்டாம் என்று அர்த்தம் அல்ல, அந்த அர்த்தத்தில் இதை சொல்லவில்லை .ஏனென்றால், மக்கள் செய்த தவறுக்கு இயற்கை கொடுக்கின்ற தண்டனை. மக்கள் அதிகாரத்தில் பலமுறை எப்படிப்பட்ட கட்டுரையை எழுதி இருக்கிறேன். அரசாங்கமும் இதை புரிந்து கொள்ளவில்லை .மக்களும் புரிந்து கொள்ளவில்லை. அலட்சியமாக இருக்கிறார்கள் . அதாவது, இயற்கையை மனிதன் அழித்தால்! மனிதனை இயற்கையை அழித்துவிடும் . 

(நம் ராணுவம் ஏன் உயிரைக் கொடுத்து போராட வேண்டும் ? இவையெல்லாம் ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறு. தவறானவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களோடு சேர்ந்து மக்களும் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிக்கிறார்கள்.)

இதுதான் உலகில் தற்போது தொடர் கதையாகி வருகிறது . இயற்கையை எதிர்த்து போராடும் வல்லமை மனித சக்திக்கு கிடையாது. அதனால்தான், நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டார்கள். மரங்களை வழிபட்டார்கள். மலைகளை வழிபட்டார்கள். நெருப்பை வழிபட்டார்கள் .இந்த மண்ணை வழிபட்டார்கள். இப்போதாவது இதன் அர்த்தம் படித்த மேதாவிகளுக்கு புரிகிறதா? 

(நெஞ்சை பதற வைக்கும் நிலச்சரிவு காட்சிகள் இதை பார்த்தாவது நாம் திருந்திக் கொள்வோமா ?)

50 ஓட்டு ,100 ஓட்டு இதுல ஜெய்கின்ற ஒரு கிராமத்தில் வருகின்ற பஞ்சாயத்து தலைவன், அந்த ஊரையே சாப்பிடலாம் என்று கணக்கு போட்டு தான் வருகிறான். அதாவது எந்தெந்த இடத்தில் பொது சொத்துக்கள் இருக்கிறது? அதை விற்றால் எவ்வளவு தேரும் ? அது மரமாக இருந்தாலும், நிலமாக இருந்தாலும், ஏரி மண்ணாக இருந்தாலும், ஆற்று மண்ணாக இருந்தாலும், இதை நோக்கிதான் இந்த பதவி போட்டிகள் ஊரில் உள்ள கட்சி கொடியை வைத்துக் கொண்டு, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே ஒரு திருட்டு கும்பல் கூட்டம், இதை நோக்கி தான் பணத்தை கிராம மக்களுக்கு ஓட்டுக்களுக்காக அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இது தெரியாத மக்கள் நம்மளை கையெடுத்து கும்பிடுகிறான், காலில் விழுகிறான், பணமும் கொடுக்கிறான், உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள், அதை நான் செய்து விடுகிறேன் என்ற வாக்குறுதியும் கொடுக்கிறான், மாமா, மச்சான் ,அண்ணன் ,தம்பி என்றும் பங்காளி என்றும், பாசப்பு வார்த்தையும் பேசிக் கொண்டிருக்கிறான் .ஒரு பக்கம் ஜாதி என்கிறான் .இவ்வளவும் எதற்காக? திருடனுக்கு கண் எப்போது வீட்டுக்காரர் தூங்குவான் ?அதே நிலைமைதான் இவர்களுடைய நிலைமை. அதனால் மக்கள் விழித்துக் கொள்வது அவசியம். அதுமட்டுமல்ல,

இயற்கை வளங்களை பாதுகாப்பது இந்திய நாட்டின் முக்கிய கடமை. அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சட்டம் .அப்படி சட்டத்தை நிறைவேற்ற வில்லை என்றால், சமூகநலன் பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களும், சேர்ந்து அந்த சட்டத்தை கொண்டு வர உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். மேலும், ஏரிகளிலும், குளங்களிலும், குட்டைகளிலும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டினால், வீட்டில் தண்ணீர் வராமல் எங்கே வரும்? இதை மழைக்காலங்களில் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு, காட்டிக் கொண்டிருப்பது அர்த்தமற்ற வேலை.

முதலில் ஏரி, குளம், குட்டைகளில் ஆக்கிரமிப்பு செய்வது தவறு. அதை அகற்ற வேண்டும். நிலத்தடி நீரை பற்றியோ கவலைப்படவில்லை.எதுவுமே ஒரு நியதிக்கு கட்டுப்பட்டது தான் இயற்கை. அந்த இயற்கையை அழிக்கும் போது, இயற்கை மனிதனை அழித்து விடுகிறது .நிலத்தடி நீரை பற்றியோ கவலைப்படவில்லை. ஓட்டுக்காக அரசியல் செய்வது, இயற்கை இடம் வேலைக்காகாது .ஓட்டுக்காக ஜாதி அரசியல் செய்வது, நான் தலித், நான் தப்பு பண்ணிக் கொள்கிறேன். எங்களை கேட்கக் கூடாது. சட்டம் எங்களுக்கு வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இது எல்லாம் இயற்கையிடம் வேலைக்காகாது.

 அதனால், இங்கே ஜாதியை வைத்து மற்ற சமூகங்களை ஏமாற்றுவது, மதத்தை வைத்து மற்ற மதங்களை அவதூறாக பேசிக்கொண்டு, ஓட்டுக்காக அரசியல் நடத்துவது, இந்த கேவலமான வேலை எல்லாம் முதலில் நிறுத்துங்கள் . இதை ஏன் சொல்கிறேன்? என்றால், இன்று வயநாட்டில் நடந்தது, தமிழ்நாட்டில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதிகாரம் ஆட்சியில் இருக்கிறது என்று ஓ பன்னீர்செல்வம் இரண்டு மலைகளிலேயே காணாமல் செய்துவிட்டார் என்றும், அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறதா? மேலும் இதற்கு உடந்தையாக அதிகாரிகள் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 இப்படி நாட்டில் ஓட்டுக்காக அரசியல் நடத்திக் கொண்டிருந்தால், இயற்கை உங்களுக்கு கட்டுப்படாது. இயற்கை நீங்கள் சொல்வதை அது கேட்காது. இயற்கை அதன் கோபத்தை காட்டினால், உன்னுடைய ஆட்சி, அதிகாரம் ,ஜாதி பேச்சு, மத பேச்சு எதுவும் அங்கு வேலைக்காகாது .அதனால் வருமுன் காப்பது புத்திசாலித்தனம் .இனிமேல் இயற்கை வளங்களை பாதுகாக்காவிட்டால் இயற்கை மனிதனை அழிக்க ஆரம்பித்து விட்டது .அதிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் இயற்கையை பாதுகாக்கும் உரிமையை நாம் கையில் எடுக்க வேண்டும்.

 ஓட்டுக்காக பிச்சை கேட்டு, காலில் விழுந்து, பணத்தை கொடுத்து, அதிகாரத்திற்கு வந்து, இந்த மண்ணையும் மக்களையும் அழிப்பதற்காக இவர்கள் இயற்கை வளங்களை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தேனி மாவட்டத்தை போய் பாருங்கள், ஒவ்வொரு மலையும், எத்தனை அடி ஆழம் தோண்டப்பட்டு இருக்கிறது ?ஒவ்வொரு கிராமங்களிலும், மணல் எத்தனை அடி ஆழம் எடுக்கப்பட்டிருக்கிறது? ஒவ்வொரு கிராமங்களிலும், ஏரி மண் எந்த அளவுக்கு? எத்தனை அடி ஆழம் எடுக்கப்பட்டிருக்கிறது? இது எல்லாம் தடுக்காத வரை இளைய தலைமுறைகள் வாழ்க்கை நரகமாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை .அதிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.மேலும்,

50 ஆண்டுகளுக்கு முன் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டது. ஏரி ,குளம், குட்டைகள் எங்குமே ஆக்கிரமிப்பு கிடையாது. 10 அடி, 15 அடிகளின் தண்ணீர் இருந்தது. இப்போது100, 200, 300 அடி தோண்டினாலும் தண்ணீர் வரவில்லை. எதனால்? நீர்நிலைகளை பாதுகாக்கவில்லை. பருவ நிலைகள் மாறுபட என்ன காரணம்? அதிக வெயில், அதிக மழை, புயல், பூகம்பம், நிலச்சரிவு ,வெள்ளம், அனைத்தும் இயற்கை வெளிப்படுத்துகின்ற எதிர்வினை ஆற்றல். இதுவாவது ஆட்சியாளர்களுக்கு இது புரிந்திருக்குமா? என்பது தெரியவில்லை. ஏனென்றால், இயற்கையை சுரண்டி பல கோடிகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் .அது தவறு.

 மனிதவர்க்கத்தை அடியோடு அழித்து விடும். இன்று பொல்யூஷன் (poliution ), பொல்யூஷன் என்று கத்திக் கொண்டிருக்கிறீர்கள் . காற்றை கொடுக்கக்கூடிய மரங்களை அழித்து விட்டால், மனிதன் சுவாசிப்பதற்கு காற்று எங்கு இருந்து வரும்? கழிவுநீர் எங்கு கலக்க வேண்டுமோ ,அங்கு கலக்காமல் பூமிக்கு அடியில் கலந்தால் ,அந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் குடிநீரில் தான், அந்த நச்சுக்கள் போய் சேரும். இதுவாவது ஆட்சியாளர்களுக்கு புரிகிறதா ?

இதற்கு சட்ட வல்லுநர்களும், நீதிபதிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த அரசியல் கட்சியினருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் . இந்த உண்மை பிரதமர் மோடிக்கு நன்கு புரியும் என்று நினைக்கிறேன். அவர்தான் நாட்டு மக்கள் நன்மை கருதி செயல்படக்கூடிய ஒரு தலைவர் .அவரால் இது செய்ய முடியும் . 

இது பிரதமர் மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் சார்பிலும், இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் இதற்காக போராட முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .மேலும்,

தேனி மாவட்ட ஆட்சியர் சஜிவனா போன்று நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் இருந்தால், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கலாம். இப்படிப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை வைத்துக்கொண்டு, மாவட்டத்தை நிர்வாகம் செய்வது திமுகவிற்கு வெட்கக்கேடான ஒன்று .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *