
நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில் ! வாக்கு எண்ணும்போது, எண்ணக் கூடிய அதிகாரிகள், மனசாட்சியுடனும், நேர்மையுடனும் ,எந்த அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், விலை போகாமல் கடமையாற்ற வேண்டும் .
ஏனென்றால், இது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்புகள், ஒவ்வொருவருடைய கனவுகள், ஆசைகள், அவர்களுடைய எதிர்காலம், இத்தனையும் அதில் அடங்கி உள்ளது.

மேலும், எண்ணும்போது ,ஒரு வாக்கு கூட, தவறாக ஒருவருக்கு போக கூடாது. அது மட்டுமல்ல, வாக்களித்தவர்களின் வாக்கு ஒவ்வொரு, ஏஜெண்ட்களிடமும் காட்டி விட்டு, வாக்குப் பெட்டியில் போட வேண்டும் .
மேலும்,வாக்கு எண்ணுபவர்களை நோக்கி, கேமராக்கள் இருக்க வேண்டும். அதை ஒவ்வொரு நிமிடமும் பார்வையிடக்கூடிய அதிகாரிகள், மிகுந்த கவனத்துடன் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

குறிப்பாக அங்கே, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது மிக ,மிக அவசியம். இது ஏன் சொல்ல வேண்டிய முக்கிய செய்தி என்றால், தமிழ்நாட்டில் தற்போதைய எம்எல்ஏ, எம்பி, மந்திரிகள், அனைவரும் வேட்பாளர்களாக இருப்பதால், அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக சில பேர் செய்து விட்டால், தேர்தலே கேலிக் கூத்தாகி விடும்.

மேலும் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மிகுந்த கவனத்துடனும் ,,எச்சரிக்கையுடனும் ,கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும்போது விழிப்புடன் அரசியல் கட்சியினர் இருப்பது மிகவும் அவசியம்.