2024 நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வித்தியாசமாக இருக்குமா? தேர்தல் கணிப்புகள் மற்றும் சர்வேக்கள் சொல்வது சரி வருமா ? கணிக்க முடியாத இடத்தில் தற்போதைய தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் !

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுகவின் வலுவான கூட்டணி மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெறுமா? அல்லது அதிமுக கூட்டணி வெற்றி பெறுமா ?அல்லது பிஜேபி கூட்டணி வெற்றி பெறுமா?

இந்தியாவில் நடக்க போகும் நாடாளுமன்ற 2024 தேர்தல் வெற்றி வாய்ப்பு பிஜேபிக்கு பிரகாசமாக இருந்தாலும் ,தமிழ்நாட்டில் பிஜேபியின் தேர்தல் களம் நிலவரம் பற்றி பல்வேறு ஆய்வுகள், உளவுத்துறை ரிப்போர்ட்டுகள் எல்லாம் மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது எல்லாம் மக்களின் மனநிலை எப்படி இருக்கும் ?எதன் அடிப்படையில் இவர்கள் இந்த ரிப்போர்ட் கொடுக்கிறார்கள்? என்பது மத்திய, மாநில அரசுக்கு தெரியுமா?

மேலும் மக்களின் பல்ஸ் என்று சொல்வார்கள், அரசியலில் இந்த பல்ஸ் எந்தக் கட்சிக்கு ஆதரவு? எந்த கட்சிக்கு எதிர்ப்பு ?எந்தெந்த தொகுதியில் எந்தெந்த கட்சிக்கு வெற்றி? தோல்வி? நிலவரம் .இது எல்லாம் ஒரு சர்வே ரிப்போர்ட் மக்களிடம் சில கேள்விகளை கேட்டு, அதில் அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும்? அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன ?ஆட்சியாளர்களின் நிலை என்ன? அது பற்றி மக்களின் கருத்து என்ன? இது அனைத்தையும் வைத்து தான் ,இந்த சர்வே ரிப்போர்ட் எடுப்பார்கள் .

ஆனால், இது ஒரு தொகுதியில் அல்லது ஒரு மாவட்டத்தில் எத்தனை பேர் என்ன பதில் சொல்கிறார்கள்? அதை வைத்து இந்த சர்வே ரிப்போர்ட் டிவி ,பத்திரிக்கை, தனியார் நிறுவனங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறது .ஆனால், இந்த தடவை தமிழ்நாட்டின் தேர்தல் ஒரு வித்தியாசமாகத்தான் இருக்கப் போகிறது. அதாவது ஆன்மீகத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற யுத்தம் என்று தான் சொல்ல வேண்டும் .

பத்திரிக்கை செய்தியாக இக்கருத்தை வலியுறுத்தும் போது, இங்கே படித்த வாக்காளர்கள் ,அரசியல் தெரிந்த வாக்காளர்கள், சமூக ஆர்வலர்களின் வாக்காளர்கள், சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் வாக்காளர்கள் ,இவை அனைத்தும் திமுகவிற்கு எதிராக தான் இருக்கும். ஏனென்றால், திமுக மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.

மேலும், கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகளை வைத்துக்கொண்டு, அரசியலில் மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். கடந்த ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்று ஒரே பத்திரிக்கைக்கு மட்டும் 1700 கோடிக்கு விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள். அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்து ,இப் பிரச்சனை குறித்து நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது .அதன் பிறகு இந்த வழக்கு ஆர் எஸ் பாரதி எங்கே கொண்டு போய் விட்டு விட்டார்? என்பது இன்று வரை வெளிவராத உண்மை .மேலும், நாட்டிலுள்ள குடிகாரர்கள், கட்சிக்காரர்கள், பணம் கொடுத்தால் விலை போகிறவர்கள். இவர்களுடைய வாக்கை தான் திமுக அதிமுக பங்கு போட்டுக்கொள்ள முடியும் . இது கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும், இந்த மாற்றம் தான் இருக்கும் .

அரசியல் தெரியாத முட்டாள்களிடம், சிந்திக்கத் தெரியாத முட்டாள்களிடம், தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய தகுதி இல்லாதவர்களிடம் பணம் கொடுத்து ,அவர்களுடைய வாக்குகளை விலைக்கு வாங்க முடியும். இதைக் கூட இரண்டு கட்சிகளிடமும் வாங்குபவர்கள், அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடமும் வாங்குபவர்கள் எந்த கட்சிக்கு போடுவார்கள் என்பது கணிக்க முடியாது . இது தவிர, சமூக வாக்குகளான ,வன்னியர் சமூக வாக்குகள் நிச்சயம் திமுக எதிராக இருக்கும் .

இட ஒதுக்கீடு பிரச்சனைகள் ,சமூகத்தின் அமைப்புகள், கட்சிகள் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் .அதேபோல் ,போக்குவரத்து தொழிலாளர்கள் ,அரசு ஊழியர்கள் திமுகவிற்கு எதிரான மனநிலையில் தான் இருக்கிறார்கள். திமுக மிகப்பெரிய தோல்வியை நாடாளுமன்ற தேர்தலில் சந்திக்கப் போகிறது. அதிமுக மக்களிடம் பேசப்படாத ஒரு கட்சியாக இருக்கிறது. ஒருவேளை இவர்களுடைய வெற்றி வாய்ப்பு ஒரு தொகுதியில் ஏற்படுகிறது என்றால், அது பணத்தால் ஏற்பட்ட வெற்றியாக தான் இருக்கும் என்பது உறுதி .

இது தவிர திமுக கள்ள ஓட்டு போடுவது ,ரவுடிசம் செய்து சில பகுதிகளில் மிரட்டி வாக்குகளை பெறுவதும் இருக்கும். அதனால் வெற்றி பெற்று விடுமா? என்பது சந்தேகம் தான், மேலும்,  இப்படிப்பட்ட செய்தியை கூட, கூலி வாங்கிக் கொண்டு எழுதுகின்ற பத்திரிகைகள் உண்டு. அது தன்னை பெரிய பத்திரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும் ,கூலி வாங்கினால் அதற்கு பெரிய பத்திரிக்கை என்ன? சிறிய பத்திரிக்கை என்ன? எல்லாம் ஒன்றுதான்.அதனால் தான் ஊழல்வாதிகளும், அரசியல் கொள்ளையர்களும் இந்த மக்களுக்கு பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்குவதால், அதன் மதிப்பு, மரியாதை தெரியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறார்கள் .

அதனால் ,படித்த இளைஞர்கள் இந்த வாக்கு அரசியல் வியாபாரத்திற்கு விலை போகாமல் ,தகுதியான அரசியல் கட்சிக்கும் ,தகுதியான வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து ,நாட்டு நலன் கருதியும், சமூக நலன் கருதியும், வருங்கால இளைய தலைமுறைகளின் வாழ்க்கை நலன் கருதியும், உங்களுடைய வாக்குகளை இந்த தேசத்தின் சமூக நலனுக்காக அர்ப்பணியுங்கள் .அப்போது சமூக அக்கறை உள்ள ஒருவர் உங்கள் பகுதியில் தேர்வு செய்து அனுப்பினால், உங்கள் குறைகள், உங்கள் நலன்கள் எல்லாம் இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கு, தேசத்தின் வளர்ச்சிக்கு அது முக்கியத்துவமானது என்பதை வாக்காளர்கள் புரிந்து கொண்டால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *