2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து பெரும்பான்மை தொகுதிகள் பெற முடியுமா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற முடியுமா? நிச்சயம் முடியாது.

இன்று தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருப்பதால் தான், பிஜேபி அண்ணா திமுக கூட்டணியை பார்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

இதை நம்முடைய வலிமையால் தான் திமுக கூட்டணி கட்சிகள் மிரலுகிறது என்று நினைக்கக் கூடாது. தவிர, பிஜேபி இல்லாமல் ஆதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை திமுக கூட்டணி கட்சிகள் இப்போதும் எளிதாக வென்று விடும். அதை அதிமுகவினர் புரிந்து கொண்டால் சரி. அது மட்டுமல்ல,

அதிமுகவினர்,எம் ஜி ஆர்,ஜெயலலிதா தலைமையில் தேர்தல் களம் கண்டது போல,எடப்பாடி பழனிசாமியை எதிர்பார்க்க முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கு இல்லை.

இதை பலமுறை மக்கள் அதிகாரத்தில் தெரிவித்திருக்கிறோம். இவர் எப்படியோ அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார் அவ்வளவுதான்.

மேலும், சொல்லப்போனால், இவருடைய கொங்கு வேளாளர் சமூகத்தினர் பெரும்பான்மை மக்கள் செல்வாக்கு கூட எடப்பாடிக்கு இல்லை என்று தான் தற்போதைய தகவல். அதிமுகவின் கட்சி என்ற ஒரு லேபிளில் தான் இவருடைய செல்வாக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுக என்ற லேபிளை எடுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி என்ற ஒரு தனி நபரை தேர்தலில் நிற்க வைத்தால், இவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். இதுதான் எடப்பாடி பழனிசாமி.

மேலும், அதிமுக அல்லது திமுக இரண்டு பேரும் பணம் கொடுக்காமல் வாக்குகளை பெற முடியாது. ஏனென்றால் இரண்டு பேரும் பணத்தை கொடுத்து மக்களை தங்களுடைய வாக்கு வங்கியாக பேரம் பேசி வைத்திருக்கிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? என்பது அடித்து சொல்ல முடியாது. மேலும், ஒரு வேட்பாளரின் வெற்றி,தோல்வி பத்தாயிரம் வாக்குகளில் தான் இருக்கப் போகிறது. அப்படி என்றால், எவ்வளவு கடினமான ஒரு தேர்தல்? என்பதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே நீ பெரிய ஆளா?நான் பெரிய ஆளா? என்று அதிமுக,திமுகவிற்கு எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி இருந்தது போல், இப்போது இல்லை.மேலும்,திமுக மக்களிடத்தில் செல்வாக்கு இழந்துவிட்டது. இதை பணத்தால் தக்க வைக்கலாம் என்று திமுக கட்சியினர் திறமை பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

அதனால்தான், திமுக கூட்டணி கட்சிகள் திமுகவையே அதிக சீட்டுகளை கேட்டு மிரட்டி பார்க்கிறார்கள். இந்த கூட்டணி கட்சிகள் எந்த பக்கம் போனால்? நமக்கு ஆதாயம் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல விஜய் கட்சியில் சேர்ந்தால் நமக்கு அதிக சீட்டும்,பணமும் கிடைக்கும் என்ற ஆசையும் இருக்கிறது.

ஆனால் அங்கே போய்,சூனியம் வைத்துக் கொண்டால்,நம்முடைய நிலைமை என்ன ஆகும்?என்ற அச்சமும் இருக்கிறது. விஜய் இன்னும் அரசியல் கட்சித் தலைவராக மக்கள் பார்க்கவில்லை.

அதை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்திருக்கிறார்? இதுதான் மக்களின் கேள்வி? ஆனால், எதுவும் செய்யவில்லை.

என்றாலும்,ஊடகங்களுக்கு பணம் கொடுத்தால்,அவரை தலைவராக்கி, தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கி எழுதிக் கொண்டிருப்பார்கள். விஜய்க்கு ஒரு கற்பனை அரசியல் வடிவம் கொடுத்து விடுவார்கள். அதுதான் அவர்களால் தர முடியும். வேறு ஒன்றும் தர முடியாது.

பிஜேபியில் மோடி என்ற தலைவன் வலிமையாக இருக்கிறான். அது போன்ற வலிமையான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. மேலும்,மோடியின் பெருமை உலக நாடுகளில் மதிக்கப்படுகிறது. மோடியின் அரசியல் உலக நாடுகளில் வரவேற்கப்படுகிறது.பாராட்டப்படுகிறது. பேசப்படுகிறது.

மேலும், நெருக்கடியான காலகட்டங்களில் கூட இந்தியாவை பொருளாதாரத்தில் வலிமையாக வைத்திருக்கும் ஆளுமை மிக்க ஒரு தலைவர் தான் மோடி. இப்படிப்பட்ட தலைவர் ஆப்ரேஷன் சிந்தூர் போரை அதிக நாட்கள் நீடித்தால் பொருளாதார இழப்பு என்று தெரிந்து அதைப் போராக நடத்தாமல், தீவிரவாதத்திற்கு எதிரானதாக போராக நடத்தி முடித்த சாணக்கியத்தனம் வேறு யாருக்கும் வராது. அதனால்,

இப்போதாவது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கட்சியின் தலைவர்கள் தகுதி என்ன?என்று அரசியல் கட்சிகளுக்கு புரிந்திருக்கும்.பொது மக்களுக்கும் புரிந்திருக்கும். தவிர,

இந்த தமிழ்நாட்டின் 2026 தேர்தலில் மக்கள் தான் அரசியல் கட்சிகளுக்கு எஜமானவர்களாக இருக்க போகிறார்கள். உழைப்பில்லாமல் இனி வருங்காலத்தில் அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியாது என்பதை 2026 தேர்தல் உறுதிப்படுத்தப் போகிறது.

மேலும், அதிமுக, பிஜேபி கூட்டணி தான் இங்கு முக்கியத்துவம் ஆனதே ஒழிய,யாருக்கு பெரும்பான்மை என்பதில் யாராலும், தற்போது அரிது இட்டு சொல்ல முடியாது.மேலும், சிறுபான்மையினர் வாக்குகளை வைத்து திமுக ஜெயித்து விடலாம் என்று கனவு காண முடியாது. பணம் கொடுத்து வாக்குகளை ஒட்டு மொத்தமாக அள்ளிவிடலாம் என்ற கணவு காண முடியாது. இந்த தேர்தல் கணிக்க முடியாத ஒரு தேர்தல்.

அதனால்,ஜெயித்த பிறகு பேச வேண்டியது எல்லாம் இப்போது பேசிப் பார்க்கலாம் என்று அரசியல் கட்சியினர் தப்பான கணக்கு போடக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *