
திமுக இப்போதே எந்தெந்த தொகுதி வெற்றி வாய்ப்பு ?எந்த தொகுதி கடினமானது? அந்த தொகுதி வெற்றி வாய்ப்பாக மாற்ற என்ன செய்ய வேண்டும்? மேலும் ,இதில் கூட்டணிக்கு எத்தனை தொகுதி வெற்றி வாய்ப்பு உள்ளது ?என்ற கணக்கீடுகள் எடுக்க துவங்கி , தேர்தல் வியூகத்தை வகுத்து களத்தில் இறங்கி விட்டது.

அதேபோல் ,அதிமுக! தேர்தல் வியுகத்தை வகுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்க களத்தில் இறங்கி விட்டது. இந்த 2026 தேர்தல் களம் இப்போது சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மக்களும் தேர்தல் விஷயங்கள் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதில்,தொலைக்காட்சிகள் ,சிறிய ,பெரிய நடுத்தர, பத்திரிகைகள் சமூக ஊடகங்கள் தேர்தலைப் பற்றிய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைக்கிறது.

மேலும், 2026 தேர்தல் களத்தில் ,விஜய் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கும். ஓட்டுக்களை பிரிப்பார். ஆனால் வெற்றி பெறுவாரா? என்பது மிகப்பெரிய கேள்வி.? தவிர,
திமுக கூட்டணியில் தற்போது விடுதலை சிறுத்தைகள் ,மதிமுக ,கம்யூனிஸ்டுகள் ,முஸ்லிம் லீக், போன்ற அரசியல் கட்சிகள் அதேபோல் ,அதிமுகவின் கூட்டணியில் பிஜேபி, பாமக ,,தேமுதிக, அமுமுக, புரட்சி பாரதம், புதிய தமிழகம், போன்ற அரசியல் கட்சிகள் இருந்தாலும், இந்த இரு அணிகளில் இருந்து எந்த கட்சி ?ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு மாறும்? என்ற சூழ்நிலையும் இருந்து வருகிறது. மேலும்,

சீமான் இறுதி நேரத்தில் அதிமுக கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது .அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி! வேறொரு கட்சிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளி வருகிறது .ஏனென்றால், இந்த அரசியல் கட்சிகள் ,கொள்கை பிடிப்புடன் இருப்பவர்கள் இல்லை. சமய சந்தர்ப்பம் எப்படி இருக்கிறதோ ,அதற்கு தகுந்த மாதிரி இவர்கள் கூட்டணி வைத்துக் கொள்வது கூட்டணி அரசியல் ஆகிவிட்டது.

மேலும், விஜயின் அரசியல் தேர்தல் வியுக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி ,இதுவரை விஜய்க்கு என்ன அரசியல் வியுகம் வகுத்து கொடுத்துள்ளார் ?என்பது தெரியவில்லை. விஜயும் இன்னும் அரசியல் களத்தில் இறங்கி போராடவில்லை.

ஆனால், பிஜேபி மாநிலத் தலைவர் நாயனார்நாகேந்திரன், தலைமையில் வலிமையான ஒரு தேர்தல் களத்தை உருவாக்கி வருவதாக தகவல். மேலும்,அவர் ஏற்கனவே அதிமுகவில் தேர்தல் களம் கண்டவர். அதனால் தேர்தல் களத்தை எப்படி சந்திக்க வேண்டும்? என்ற கட்டமைப்பை பிஜேபியில் உருவாக்கி கொண்டு ,ஒவ்வொரு மாவட்டமாக வந்து கொண்டிருப்பதாக தகவல். இப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் 2026 தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான தேர்தல் கள கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

மேலும், 2026 தேர்தல் களத்தில் ,அதிமுக கூட்டணியில் திமுகவின் ஊழல் ,அராஜகங்கள், அரசு ஊழியர்களின் பிரச்சனைகள், மக்கள் பிரச்சனைகள் ,நடந்த பல சம்பவங்கள், மக்களிடம் கொண்டு சென்று தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்து வருகிறார்கள்.
அதேபோல் திமுகவும், அவர்களுடைய திட்டங்களின் பரப்புரைகள், அதிமுகவின் ஊழல்கள், அவர்களுடைய வழக்குகள், எந்த சாதனையும் செய்யவில்லை என்றாலும் ,இவர்கள் சாதனைகளை பட்டியல் போடுவார்கள். இது இரண்டு தரப்பிலும் மக்கள் இதில் யார் நல்லவர்கள்? எது உண்மை ?எது பொய்? என்பதில் திணறுவார்கள். அந்த அளவுக்கு தேர்தல் களம் கடுமையாக தான் இருக்கும். இது தவிர,

இரண்டு அணிகளின் அரசியல் கட்சியினரிடையே , மோதல்களும் இருக்கும். அந்த மோதல்கள் வன்முறையாக கூட வாய்ப்புள்ளது. இப்படி 2026 தேர்தல் களம் அரசியல் கட்சிகள் இடையே கடும் பலமான போட்டியாக தான் இருக்கும். வெற்றி என்பது சில ஆயிரங்களால் மட்டுமே வெற்றி தீர்மானிக்க கூடியதாக இருக்கும். ஏனென்றால், எந்த அரசியல் கட்சிக்கும் சரியான தலைமை இல்லை. இங்கே பிஜேபிக்கு மட்டுமே மோடி என்ற வலிமையான தலைமை உள்ளார்.. மீதியெல்லாம் இரண்டாம் தர தலைமைகள் தான்.
அதனால், ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கடும் போட்டியாக இருக்கும். சீட்டு ஒதுக்கீடு செய்வதிலும் ,தொகுதி பங்கீடுகளிலும், ஒத்து வராத ஒரு சில கட்சிகள் அணிமாறும் சூழ்நிலையும் இருக்கும். இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழ்நாட்டில்! இதில்,

அதிமுகவும், திமுகவும், பண பலத்தை மக்களிடம் காட்டுவதில் அவர்களுடைய வெற்றியை தீர்மானிக்குமா? அல்லது மக்களை வீடு, வீடாக சந்தித்து திமுகவுக்கு எதிரான பிரச்சாரங்களும், துண்டு பிரசுரங்களும், விநியோகித்து போட்டி கடுமையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக என்ன செய்கிறதோ, அதை திமுக நிச்சயம் செய்யும். திமுக என்ன செய்கிறதோ, அதை அதிமுக செய்யும்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் 2026 தேர்தல் வாழ்வா? சாவா? என்ற நிலையல்தான் போட்டியிருக்கும். ஏனென்றால், திமுக தோல்வியுற்றால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இனி அந்த குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர முடியாது. பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு திமுக தள்ளப்படும். அதேபோல் , அதிமுகவில் எடப்பாடியின் தலைமை முடிவு இதோடு முடிவுரை எழுதப்படும். அதனால் ,2026 அதிமுக ,திமுக கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்,

மிகக் கடுமையான தேர்தல் போட்டி களத்தில் தேர்தல் ஆணையத்தின் நேர்மையான தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்படி இருக்க போகிறது? என்பதுதான் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகளின் கேள்வி?