ஏப்ரல் 19, 2024 • Makkal Adhikaram
ஒவ்வொரு மாவட்டத்திலும், ரிசர்வேஷன் தொகுதிகள் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது .இது ஒரு தவறான சட்டம்.சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் . அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் இல்லை. நடை, உடை, உணவு ,பழக்க வழக்கங்கள் எதுவுமே இல்லை .எல்லாமே மாறி இருக்கிறது .
ஆனால், இந்த சட்டம் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமா? இதுதான் மற்ற சமூகங்களின் மிகப்பெரிய கேள்வி? மேலும், எனக்குத் தெரிந்து திருவள்ளூர் (தனி தொகுதி ) அதிமுகவில் வேணுகோபால் நாடாளுமன்ற தேர்தலில் நின்று தோற்ற நாளிலிருந்து பார்க்கிறேன், அப்படியேதான் இருக்கிறது. இங்கே தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு மட்டும் வளர்ச்சி தேவை? மற்ற சமுதாய மக்களுக்கு வளர்ச்சி தேவை இல்லையா?என்ன சட்டம்? சட்டங்கள் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சார்பாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி தான் இந்த சட்டங்கள் எல்லாவற்றிலுமே இருந்து வருகிறது. அது மட்டுமல்ல,
இது பத்திரிகை துறையில் போடப்பட்ட சட்டங்கள் கூட 50 ஆண்டு காலமாக அப்படியே தான் இருக்கிறது .ஆனால், இன்று பத்திரிக்கை துறை பல்வேறு வளர்ச்சிகளை கொண்டுள்ளது. மாற்றங்களை கொண்டுள்ளது. ஆனால், 50 ஆண்டு காலமாக அதே சட்டம் தான் இருந்து வருகிறது.அப்படிப்பட்ட சட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது சமூக நலன் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.மேலும்,
Tiruvallur Lok Sabha constituency
அதேபோல், இந்த தனித் தொகுதி இட ஒதுக்கீடு என்பது தொடர்வது தவறானது என்கின்றனர் மற்ற சமூகத்தினர். அதனால், இதை தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மற்ற சமூகங்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.தவிர, திருவள்ளூர்நாடாளுமன்ற தொகுதி! தனி தொகுதியாக இருந்தாலும், மற்ற சமூகங்கள் தான் இன்று பிஜேபிக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட சமுதாயம் இதற்கு ஒரு சதவீதம் ஆவது வாக்களிப்பார்களா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
இதை வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தமிழகம் முழுதும் பட்டில் இன மக்கள் ரிசர்வேஷன் தொகுதிகளில், எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்? என்பதை ஆய்வுக்கு உட்படுத்துங்கள், அப்போது புரியும்.வாக்களிப்பது எந்த கட்சிக்கு வேண்டுமானாலும், அது அவர்கள் உரிமை என்று கூட சொல்லலாம். ஆனால், இவர்கள் வேட்பாளர்களின் தகுதி ?செயல்பாடு? பற்றி கருத்தில் கொண்டு வாக்களிக்கிறார்களா? தொடர்ந்து தனித் தொகுதிகளில் எந்த கட்சியாக இருந்தாலும், பட்டியல் இன மக்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.
அப்படி இருந்தும் இவர்கள் அதிமுக ,திமுக தவிர, வேற எந்த கட்சிக்கும் வாக்களிப்பதில்லை .இது இவர்களுடைய பழக்கமாக கூட இருக்கட்டும் பரவாயில்லை .ஆனால், தொடர்ந்து இந்த தனி இட ஒதுக்கீடு (தனித் தொகுதி ) வேட்பாளர்களுக்கு மற்ற சமூகத்தினர் வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன? இது தவிர, பொது தொகுதியின் வேட்பாளர்கள் சொந்த சமூகத்தில் நின்று ஜெயித்தால் கூட ,அவர்களைப் பற்றி கண்டு கொள்வதில்லை. அவர்களே சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று மற்ற சமூகத்தினர் குமுறல்.
அப்படி இருக்கும்போது, பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தனி தொகுதிகளில் இவர்களே வந்து கொண்டிருந்தால், மற்ற சமூகங்கள் வாக்களிக்க மட்டும் தானா? அல்லது அவர்களுடைய வளர்ச்சிக்கான நலன்கள் தேவை இல்லையா ? இதுதான் மற்ற சமூகங்களில் மிகப்பெரிய கேள்வி ? மேலும்ஒரு தடவை ரிசர்வேஷன் என்றால், மறு தடவை, பொது தொகுதியாக மாற்றம் கொண்டு வர வேண்டும்.அது இரண்டு அல்லது மூன்று முறைக்கு ஒரு தடவை இருக்கலாம். ஆனால், தொடர்ந்து அதையே கொடுத்தால் மற்ற சமூகங்கள் எப்படி வளரும்? இதுதான், தற்போதைய மற்ற சமூகங்களின் வேதனையான கேள்வி ? அதனால், சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்பதுதான் மற்ற சமூகங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் கோரிக்கை .