டிசம்பர் 05, 2024 • Makkal Adhikaram

அதிமுக கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்! அவருடன் நெருக்கம் காட்டி இருந்தவர் ஜெயலலிதா, இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை.
மேலும், அதிமுகவில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சசிகலா மற்றும் ஓபிஎஸ், சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு இந்த கட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகிவிட்டு,போனார். இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை. இது அதிமுக கட்சியினருக்கும் தெரியும். இதில் என்ன ஒரு முக்கியமான விஷயம்? என்றால், அதிமுகவில் துரோக அரசியல் தொடர்கிறது.

மேலும், எடப்பாடி பழனிசாமி சசிகலா உருவாக்கிய ஒரு நபர். ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் உருவாக்கியுள்ள ஒரு நபர். ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவால் இடைக்கால முதல்வராக அறிமுகப்படுத்தப்பட்டவர். இங்கே போட்டி இருவருக்கும் தான் பலமாக இருக்கிறது. இதிலே யாரை கவிழ்ப்பது என்ற உட்கட்சி அரசியல்! அந்த கட்சி நிச்சயம் தேராது. இன்று இந்த கட்சியின் பிரச்சனை நீதிமன்றத்தில் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் சொன்னது தான் தற்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு கம்பெனிக்கு முதலாளி இல்லை என்றால், யார் முதலாளி? என்று அந்த சண்டைதான் தற்போதைய அதிமுக கட்சியின் சண்டை.இப்படி இருக்கும் சூழ்நிலையில் இந்த கட்சியில் தொடர்ந்து குழப்பங்கள், உட்கட்சி விவகாரங்களில் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், கட்சியின் சட்ட திட்ட விவகாரங்கள் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தேவை, ஏதோ ஒரு கட்சியில் நமக்கு ஒரு லேபிள் வேண்டும். அந்த லேபிள் எந்த கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அதில் அதிமுக என்பது சிறப்பு என்று பாக்கெட்டில் இரட்டை இலையை காண்பித்து, மக்களிடம் ஓட்டுகளை வாங்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அதிமுக கட்சி இருந்து வருகிறது.மேலும்,

ஓ பன்னீர்செல்வம், சசிகலா தொடர்ந்து சட்டரீதியாக பல்வேறு வழக்குகள் அதிமுகவில் இருந்து வெளியேற்றிய பிறகும், இது ஒருஉட் கட்சி விவகாரமாக வழக்குகள் போய்க்கொண்டே இருக்கிறது. ஓ பன்னீர் செல்வம் இல்லை என்றால், இன்னொருவர் வழக்கை போடுவார். இப்படி அதிமுக கட்சி பிரச்சனையில் இருந்து வருகிறது. இதில் என்னென்ன ஓட்டைகள் இருக்கிறது? அந்த ஓட்டைகளை எல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்த கட்சியில் முதலாளியாக ஆகிவிடலாம் என்று எடப்பாடி செய்து வருகிறார். இப்படி எடப்பாடி இடம் இந்த அதிமுக மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

இங்கே ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா இவர்கள் முக்கிய புள்ளிகள் என்பது அதிமுக கட்சியினருக்கு தெரியும். இருந்தாலும் அவர் விட்டுக் கொடுத்து, இந்த கட்சி எல்லோருக்கும் பங்கு போட்டு நிர்வாகத்தை நடத்தும் கட்சியாக இருந்தால் பரவாயில்லை. ஒரு குடும்பத்திற்குள் நாலு பிள்ளைகள் அந்த நாலு பிள்ளைகளுக்கும், சமமான பாகம் கேட்கும் சொத்து பிரச்சனை போல் இன்றைய அதிமுக உள்ளது.
அதனால் அதிமுக மக்களிடம் செல்வாக்கு இழந்து,பலம் இழந்து காணப்பட்டாலும், ஒரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சட்ட போராட்டம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி போய்க் கொண்டே இருக்கிறது. இப்போது உயர்நீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது .இந்த உட்கட்சிப் பிரச்சனை தற்போது எடப்பாடியா? அல்லது ஓ பன்னீர்செல்வமா? அல்லது சசிகலா வா?