பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgF_I3c0T1zFsrTcW-P-amfDZJUVirvYK4KQDCrZnlu-5ZeClP2N1TPuvze7kTtox7hXynhB4OwOLw-4lt1HGFot2Q8ckZYyXz-JSLNA9ukG49N4cb0Nte0fdk2szXPJau3HMfUha_x_tXutN_j1W9pSm_6PHNIJU6wFvQJ3X3XbrR3j0N5eNSmr_bc9g/w400-h259/WhatsApp%20Image%202025-02-08%20at%205.26.08%20PM.jpeg)
நாட்டில் சமூக நலனையும், தேச நலனையும், பற்றி சிந்திக்க கூடிய ஒரே கட்சி தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று ஒருவேளை கற்பனை செய்து விட்டாரோ என்னவோ தெரியவில்லை திருமாவளவன். அதனால்தான் பாஜகவின் வெற்றி டெல்லியில் இவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்ற கருத்து.
மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை விட்டு நாட்டை காப்பாற்ற சிந்திக்க வேண்டும் அது என்ன உங்களிடம் இருந்தா? என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்கிறார்கள்? ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று திருமாவளவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையா? அல்லது எதிர்பார்க்கவில்லையா? எது எப்படி இருந்தாலும், நாட்டு மக்கள் இந்த அரசியல் கட்சிகளிடமிருந்து, நாட்டை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த ஊடக மைக்குகளில் பேசுபவர்கள் எல்லாம் இந்த நாட்டை காப்பாற்றுபவர்கள் அல்ல.
அதற்காக உழைப்பவர்கள் தான் நாட்டை காப்பாற்ற முடியும். மேலும், போலியான அரசியலையும், போலியான ஊடகங்களையும் நம்பினால் நாட்டு மக்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய வேதனையை அனுபவிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.