
ஒரு நாட்டின் வளர்ச்சி !சாமானிய மக்களின் வளர்ச்சி! ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சி! அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி!ஆனால், எந்த ஆட்சி வந்தாலும், அது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கார்ப்பரேட்டை டெவலப்மெண்ட் செய்வதில் தான், நோக்கமே தவிர, சாமானிய மக்களின் பத்திரிக்கையோ, அல்லது தொழிலையோ, முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பதில்லை.

மேலும் ,பேசுவது மட்டுமே ,சாமானிய மக்களுக்காக பேசுவார்கள். ஏன் ?மோடியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். விஜயும் அப்படி தான் பேசி இருக்கிறார். இப்போது முதல்வர் விஜய்க்கு, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் தகுதியான சாமானியர்களின், பத்திரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதற்காக தான் இன்று கூட செய்தித்துறை அமைச்சர் ராஜ் மோகனை, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்கப் பட்டுள்ளது. மேலும்,

இது பற்றி உதவி இயக்குனர் அண்ணாதுரை இடமும் விவாதித்தேன். செய்தித் துறையில் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றி நான் பேசியதில் இவரும், கூடுதல் இயக்குனர் பாஸ்கரன் ,இருவரும் நன்கு தெரிந்தவர்கள்.

அப்போது நான் உதவி இயக்குனர் அண்ணாதுரையிடம் பேசும்போது சொன்னேன், கார்ப்பரேட்டுக்கும் எங்களுக்கும் ஒரு போட்டி ,அதில் கார்ப்பரேட் பணத்தோட போட்டி போடுகிறது. நாங்கள் அறிவோடு போட்டி போடுகிறோம். நான் சொன்னேன், சாமானியர்களின் பத்திரிக்கையை இணையதளத்தில் உள்ள மெரிட்டை கொண்டு அதற்கான தகுதியை நிர்ணயிக்கலாம்.

மேலும், இதே கார்ப்பரேட்டில் பணியாற்றக்கூடிய , chief reporter, or editors, இவர்களை வைத்து இணையதள பத்திரிக்கையில் எழுத சொல்லுங்கள், அதில் எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள்? என்று பார்ப்போம்? நான் சொல்வது, i say without market marketing , இன்று ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ,அது அரசியலா? அல்லது ஆதாரமா? ஒரு தனியார் தொலைக்காட்சியில், இதற்கு ஒரு நான்கு பேர் வைத்து விவாதத்தை நடத்துகிறார்கள்.

இதில் என்ன அரசியல் இருக்கிறது? ஆதாரம் இருந்தால், நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். இல்லையென்றால், அது ஒரு அவதூறு. மேலும் ,ஒரு செய்தி நிறுவனத்தின் வேலையா இது? அதுவா ?இதுவா? என்று பேசி விட்டு போற வேலையா? உண்மையை நிரூபிக்க வேண்டிய வேலை தான் செய்தி நிறுவனத்தின் வேலை.தவிர,

இதை வைத்து முதல்வர் விஜயின் அரசியலை நாட்டு மக்கள் தீர்மானிக்க போகிறார்களா? அல்லது,அதிக முதலீட்டில், முகத்தைக் காட்டிக் கொண்டு ,பேசிக்கொண்டு இருப்பது, பெரிய தொலைக்காட்சி அல்லது பெரிய செய்தி நிறுவனமாக ஆகி விடாது. மேலும்,அதைப் பார்த்து ஏதோ முக்கியமான செய்தி என்று பார்த்துக் கொண்டிருப்பவர்கள் ஏமாளிகள். அவ்வளவு தான்.
மேலும் ,தகுதியான சில சமூகநலன் பத்திரிகைகள், அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவமானது ,இதை செய்தித் துறை, நன்கு புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு இன்னும் பல சம்பவங்கள் எடுத்து வைக்கிறேன் .

மேலும் ,எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும்போது, இதே கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்று விளம்பரத்தால், ,கொழித்தார்கள். அப்போது அவர்கள் சொன்ன பொய்களை எல்லாம் மக்களிடம் உண்மை என்று, செய்தி ஆக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் எங்களைப் போன்ற நடுநிலை சமூகநலன் பத்திரிகைகள் உண்மையை மக்களிடம் எடுத்துரைத்தது. அப்போதும் இவர்களுக்கு தோல்விதான்.

மேலும் ,அதேபோல் ஸ்டாலின் ஆட்சியை தூக்கி பிடித்தது ,முட்டுக் கொடுத்தது, அதுதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று சொன்னது, எல்லாம் இந்த கார்ப்பரேட்டுகள். இப்போது புரிகிறதா? தவிர ,மக்களை ஏமாளிகளாக மாற்றலாம் என்று நினைத்தால், அது முடியாது. அதேபோல் சோசியல் மீடியா வந்து ,இந்த மாற்றத்தை செய்து விட்டதா? இல்லை .

தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், எமது வாசகர்களுக்கு தெரியும், அதிமுக, திமுக வின் ஊழல் அரசியல்,(மக்களின்) வெறுப்பு அரசியல், இதுதான் ,அரசியல் மாற்றத்தை கொண்டு வந்தது . இது தவிர,எத்தனையோ கோடி மக்கள், இந்த அரசியலில், நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ,பாதிக்கப்பட்டு, இருக்கிறார்கள்.
எனவே, செய்து துறைக்கு இனியும் தொடர்ந்து பாடம் நடத்த தேவையில்லை என்று தான் நினைக்கிறேன். எட்டு வருடம் நடத்திய பாடத்தில், இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், அந்த துறையில் அதிகாரியாக பணியாற்றுவதற்கு தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும்,மற்றத் துறை அதிகாரிகளுக்கு புரிகிறது, இவர்களுக்கு ஏன் புரியவில்லை? என்பதுதான் எங்களது கேள்வி? தவிர,அரசியல் கட்சியினருக்கு புரியாமல் இருக்கலாம் ,ஆனால் அதிகாரிகள் புரியவில்லை என்றால்! அந்த சீட்டில் உட்காருவதற்கே, தகுதி இல்லாதவர்கள்.

எனவே, இது பற்றி செய்தி துறை உயரதிகாரிகள், கவனத்திற்காக தான் இந்த செய்தி! இவை அனைத்தும் அவர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
