
முன்னாள் அமைச்சர் ஏ.வா. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும்போது, அதற்கு முன்னாள் முதல்வர் மு .க .ஸ்டாலின், இந்த இயக்கம் இதைக் கண்டு எல்லாம் அஞ்சாது என்றும், பயப்படாது என்றும், சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

மேலும்,உங்களை யார்? பயப்பட சொல்கிறார்கள்? ஊழலை கண்டுபிடிப்பதற்கு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துகிறார்கள். தவறு செய்திருந்தால் பயப்பட வேண்டும் .தவறு செய்யாதவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? ஏன் இதற்கெல்லாம் அஞ்சாது என்று தெரிவிக்கிறார்? ஏன் இது பழிவாங்கும் அரசியல் என்று தெரிவிக்கிறார்?
மேலும்,மக்களுடைய பணத்தை கொள்ளை அடித்து விட்டு ,உத்தமர் வேஷம் போட்டால், மக்கள் எத்தனை நாளைக்கு ஏமாறுவார்கள்? உங்களுடைய ஊடகங்களும், எத்தனை நாளைக்கு, மக்களை ஏமாற்றும்? இது மனசாட்சி உள்ள மக்களின் கேள்வி?

மேலும், ஸ்டாலின் குடும்ப சொத்து என்பது அவர்களுடைய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், இவர்களில் எத்தனை பேர் பினாமிகள் ? கடவுளுக்கு தான் இந்த உண்மை நூறு சதவீதம் தெரியும். இருப்பினும், இவர்கள்தான் ஸ்டாலின் பினாமிகள் என்கிறது அரசியல் வட்டாரம்.
