தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எதிர்கட்சிகள் கூறுவது என்ன?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram

தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது! இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். மேலும், ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளுக்கு கிடைத்த பலன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்? மேலும், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை! இந்த பட்ஜெட் பொய்யும் புரட்டுமான பட்ஜெட் என விமர்சித்துள்ளார். மேலும்,பயிர் கடன் 1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யவில்லை என பட்ஜெட்டில் கூறப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இதைப் பற்றி நாங்கள் கூறிய போது அமைச்சர் பெரிய கருப்பன் ஏற்க மறுத்தார். மேலும், தேர்தல் நேரத்தில் திமுக சொன்ன வாக்குறுதி கூட ,விவசாயிகளுக்கு நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *