மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை மனிதனே அனுபவிக்கிறான் என்பதே இயற்கை கொடுக்கும் தண்டனையா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி

பல நாடுகளில் இயற்கையின் பேரழிவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் நாடுகளுக்குள் சண்டையால் அழிகிறது . மற்றொரு பக்கம், இயற்கையின் பேரிடர் மனித உயிர்களை அழிக்கிறது. மேலும்,

இதை ஆன்மீக ரீதியில் பார்த்தால், இயற்கை மனிதனை அழிக்கிறது என்பதைக் காட்டிலும், மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை அவனே அனுபவிக்கிறான் என்பதே ஆழமான விளக்கம்.

மேலும்,இயற்கை = இறை சக்தி!
இந்துக்களின் ஆன்மீகப் பார்வையில் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் இறைசக்தியின் வெளிப்பாடுகள்.

அக்காலத்தில் இதை எல்லாம் மனிதன் தெய்வமாக நினைத்து வாழ்ந்தான். காலப்போக்கில் அது மூடநம்பிக்கை என்று சொல்லிவிட்டார்கள். அது மூடநம்பிக்கையாக மாறியதற்கு நாட்டில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி! அதிகரிக்க, அதிகரிக்க, மனிதனிடம் கர்வம் ,அகங்காரம் ,ஆணவம் மிருகத்தனம், இது அதிகரித்துக் கொண்டே வந்து விட்டது.

மேலும்,மனிதன் தனக்குள் இருக்கின்ற இறை சக்தியை நம்பாமல், விஞ்ஞான சக்தி மட்டுமே நம்புகிறான் விஞ்ஞானம் அழிவுக் குரியது. மெய்ஞானம் இயற்கையோடு கலந்த வாழ்க்கையானது. மெய்ஞானம் இது அழிவற்றது .இது அழியக்கூடியது.

அதனால் மனிதன் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க தெய்வத்தின் மீது உண்மையான பக்தி குறைந்து விட்டது. போலியான பக்தியை இறைவன் விரும்புவதில்லை. தேவைக்கு மட்டுமே கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளை கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக உண்மையான பக்தி உள்ளவர்கள் இல்லை என்று மறுக்க முடியாது. அது இறைவனுக்கு தெரியும். மேலும்,

அக்கால மக்கள் இயற்கையை மதிப்பது என்பது ,இறைவனுடைய படைப்பை மதிப்பதாக அது இருந்தது. மேலும்,தர்மம் மீறப்படும் போது சமநிலை குலைகிறது. அது எப்படி என்றால்? அதிகாரம் ,ஆணவம், சுயநலம், மிருகத்தனம், இவை அனைத்தும் கலந்த கலவையில்
மனிதனின் வாழ்க்கை “எனக்கு மட்டும்” என்ற பேராசையை நோக்கிச் செல்லும்போது, இயற்கையுடனான சமநிலை பாதிக்கப்படுகிறது.

மேலும்,ஆன்மீகத்தில் இது அதர்மத்தின் வளர்ச்சி என்று பார்க்கப்படுகிறது.கர்மக் கோட்பாடு
நாம் இயற்கைக்கு செய்யும் செயல்களுக்கு உடனடியாகவோ அல்லது காலப்போக்கிலோ விளைவுகள் ஏற்படலாம்.

மரங்களை அழித்தல், நீர்நிலைகளை அழித்தல், உயிரினங்களைத் துன்புறுத்துதல் ,போன்ற செயல்களின் விளைவுகளை கர்மத்தின் ஒரு வடிவமாக ஆன்மீக சிந்தனை பார்க்கிறது.

தவிர,பூமியை தாயாகக் காணும் பார்வை பூமி நமக்குச் சொந்தமானது என்பதற்குப் பதிலாக “நாம் பூமியின் பிள்ளைகள்” என்ற எண்ணமே ஆன்மீகமானது. அதனால்தான் பாரம்பரிய இந்துக்களின் வாழ்க்கையில் ,நதி, மலை, மரம், விலங்கு என இயற்கையின் பல வடிவங்களுக்கும், புனிதத்தன்மை கொடுக்கப்பட்டது.மேலும்,

பேரழிவு = தண்டனை என்று மட்டும் பார்க்க வேண்டாம்
ஆன்மீக ரீதியாக ஒரு வெள்ளம் அல்லது புயலை “இறைவன் மனிதனை தண்டிக்கிறார் என்று நேரடியாக முடிவு செய்வது சரியல்ல. அதற்கு இயற்கையான அறிவியல் காரணங்களும் இருக்கின்றன. ஆனால் அந்த நிகழ்வுகள் மனிதனுக்கு உன் வாழ்க்கை இயற்கையிலிருந்து தனியானது அல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் எச்சரிக்கையாக பார்க்கப்படலாம்.


மேலும்,
இயற்கையை வெல்ல நினைப்பவன், உண்மையில் தன்னைத் தானே தோற்கடித்துக் கொள்கிறான். புயலை எதிர்த்தோ ,வெள்ளத்தை எதிர்த்தோ, இயற்கையுடன் மோதி மனிதன் ஜெயிக்க முடியாது.

தவிர,இயற்கையுடன் இணைந்து வாழ்பவனே தர்மத்துடன் வாழ்கிறான்.
இயற்கையை அழிப்பது பூமியை மட்டும் அழிப்பதல்ல,
மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக சமநிலையையும் அழிப்பதாகும்.
இதுவே மக்கள் அதிகாரத்தின் ஆன்மீக கருத்தில் ,இயற்கையின் பேரழிவுக்கு மனிதனே முக்கிய காரணம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *