
மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை!
மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள்.
தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார்.
அவர் மதுராந்ததிற்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 75 சென்ட் நிலம் அவருக்கு சொந்தமானது. அதை ஏற்கனவே பக்கத்து நிலத்தை வாங்கியவர், இதையும் சேர்த்து பத்திரப்பதிவு செய்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு வயது 82 ஆகிறது .இந்த பிரச்சனைக்காக 25 ஆண்டுகளாக அவர் போராடி வருகிறாராம். அந்த நிலத்திற்கு அதை போலி பட்டா ,போட்ட பத்திரப்பதிவு செய்த நபர் வசதியானவர் .
அடுத்து அரசியல் செல்வாக்கு ,அரசியல் பின்புலம் கொண்டவர். அப்படி என்றால்? வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு பணத்திற்காக ?ஒருவருடைய நிலத்தை இன்னொருவருக்கு பட்டா போட அனுமதி அளிக்கிறார்கள்? இது கொடுமையானது. இப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் மீது, தமிழக முதல்வர் விஜய் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,

அந்த அப்பாவி மனிதரை இப்போது கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் ..கீழ்க்கோர்ட்டில் இந்த கேஸ் நடக்கும் போது, இவர் வைத்த வழக்கறிஞரே விலை போய்விட்டாராம் .பிறகு நீதிமன்ற நீதிபதியும் வேலை போய்விட்டு இருக்கிறார் என்கிறார் அந்த பெரியவர் . நீதிமன்றத்தில் கூட ஒரு நிலத்தை நான் இன்னாரிடம் இருந்து வாங்கினேன் என்று பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லவா? அதுவும் தாக்கல் செய்யவில்லையாம். இப்படி ஒவ்வொரு நாளும், மக்கள் இந்த பிரச்சனையில் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மேலும்,

கடந்த திமுக ஆட்சியில், அந்த முதியவர் ஏறாத அலுவலகமே இல்லையாம், எல்லா அலுவலகமும், ஏறி ,இறங்கி வெறுத்துப் போய் இந்த ஆட்சியிலே யாவது நீதி கிடைக்காதா ?என்று போராடிக் கொண்டிருக்கிறார் . இவரைப் போன்று தமிழகத்தில் இன்று லட்சக்கணக்கான பேர் நில சம்பந்தமான பிரச்சனையில் தவறு செய்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும்.
அதனால்,தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ,,இதை முக்கிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு ,இந்த நில மோசடி வழக்குகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் . இப் பிரச்சனை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லக்கூடாது.அதிலும், இந்த அரசியல் பின்புலம் கொண்டவர்களின் ஏமாற்று வேலை! நாளுக்கு ,நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது .
இவர்களுக்கு தான் அரசியல் தேவைப்படுகிறது .அரசியல் என்பது யாருக்கும் நல்லது செய்யக்கூடாது .நல்லது செய்வது போல் ,நடித்து பேசிவிட்டு , கொடி பிடித்து கோஷம் போடுவது, இல்லை என்றால் ,
இது போல , அரசியல் கட்சியினர் உருவ பொம்மைகளை எரித்து ,அதை வாட்ஸ் ,அப் பேஸ்புக் ,இல்லை என்றால், கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அதை பெரிதாக காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதாவது சுருக்கமாக சொன்னால்,கிரிமினல்ஸ்களை விளம்பரப்படுத்தும் ஒரே ஊடகம் கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள். மேலும்,

செய்தித் துறை அதிகாரிகளில், சிலர் தான் இந்த உண்மையை புரிந்து இருக்கிறார்கள். நேற்று நான் சந்தித்ததில் செய்தித்துறை உதவி இயக்குனர் அண்ணாதுரை , கூடுதல் இயக்குனர் தமிழ் செல்வராசன், மற்றும் பாஸ்கரன் , இதை நான் தொடர்ந்து அவர்களிடம் வலியுறுத்தி இந்த உண்மைகளை புரிந்துக் கொண்டார்கள் . தற்போது தான்,செய்திக்கு தான் நாங்கள் முக்கியத்துவம் தருவோம் என்கிறார்.

இப்படி போலியான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதால் மக்களுக்கு என்ன நன்மை? இவர்கள் உருவ பொம்மைகளை எரிப்பதாலோ அல்லது செருப்பு வீச்சு ,கல் வீச்சு இதையெல்லாம் காட்டிக்கொண்டு இருப்பதாலோ மக்களுக்கு என்ன நன்மை? இந்த விளம்பர அரசியல் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்று கூட தெரியாமல், இவர்களுடைய செய்திகளை மக்கள் பார்க்க வேண்டும்.
அரசியல் ரவுடிகளின் அராஜகங்களை அரசியல் என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு. நாட்டில் கிரிமினல்களின் செயல்பாடுகளை, ஊழல்வாதிகளின் செயல்பாடுகளை, ஊக்குவித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளுக்கு செய்தித் துறை அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பார்களா? என்பது தான் என்னுடைய கேள்வி? இதில் தமிழக முதல்வர் விஜய்! எதற்கு முக்கியத்துவம் தரப்போகிறார்?

ஏனென்றால் , இப்படிப்பட்ட அரசியலை மக்கள் தெரிந்து கொள்ளாவிட்டால், மக்கள் எப்படி அவர்களை அரசியலில் தேர்வு செய்ய முடியும்? தரமற்ற அரசியலுக்கு, தகுதியற்ற கூட்டத்தை அரசியல்வாதிகள் போல் காட்டி !மக்களை ஏமாற்றும் போலித்தனமான அரசியல் !
இந்த போலித்தனமான அரசியல் பிம்பத்தை கூட தெரியாமல், செய்தித் துறை அதிகாரிகள் அதையும் சர்குலேஷனில் இதை எப்படி எடுக்கிறார்கள்? அல்லது எடுக்கலாம்? என்பதுதான் சமூக நலன் பத்திரிக்கையாளர்களின் கேள்வி?

மக்களுக்கு எது உண்மை? எது பொய்? எது தவறு? என்பதை தெளிவுபடுத்த வேண்டியது பத்திரிகைகளின் வேலை . ஏமாற்று கூட்டத்தோடு சேர்ந்து, மக்களை அதாவது அரசியல் தெரியாதவர்களை, கூட சேர்ந்து ஏமாற்றுவது பத்திரிகை வேலை அல்ல.

எனவே, மக்களை ஏமாற்றும் செய்திகளுக்கு சர்குலேஷன் கணக்கில் கொண்டு வருவது என்ன நியாயம்? – சமூக நலன் பத்திரிகைகள். இனியாவது செய்தித் துறை அதிகாரிகள் உண்மையை புரிந்து கொள்வார்களா?
