நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram

நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு என்ன காரணம்?

பிஜேபி வந்த பிறகு நீதித்துறையில் அரசியல் தலையீடு குறைத்துள்ளதாக வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இருப்பினும், நீதித்துறையில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரால், வழக்கறிஞர்கள் ,அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு, பிறகு அவர்கள், நீதிபதிகளாக பதவி உயர்வு அடைகிறார்கள். இது முற்றிலும் தவறானது. மேலும்,இதுவரையில்

நீதித்துறை எப்படி இருந்ததோ, ஆனால், இனி நீதித்துறையில் ,மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, மாநில நீதிமன்றத்தில் இருந்து, உச்சநீதிமன்றம் வரை நீதிபதிகள் மெரிட்டில்  (Only for merit) உள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். 

அதாவது,இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி வழக்கறிஞர்கள் எவ்வளவு வழக்குகளை? இத்தனை ஆண்டுகள் நடத்தி முடித்திருக்க வேண்டும்? அதில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். அவர் மீது எந்த குற்ற பின்னணியும் இருக்கக் கூடாது. தவறான முறையில் சம்பாத்தியம் இருக்கக்கூடாது. எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்களாகவும் இருக்கக் கூடாது. இப்படியெல்லாம் தகுதி உள்ள, திறமை உள்ள, சட்ட வல்லுனர்கள் தான் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் .

அப்போதுதான் நாட்டில் தகுதியான நீதிபதிகள், நீதித்துறையில் தேர்வு செய்யப்படுவார்கள் .மேலும், தற்போது நாட்டில் நடக்கின்ற முக்கிய தீர்ப்புக்களால், குழப்பங்களும், சட்டப் போராட்டங்களும், குற்றவாளிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் வாய்தா போட்டு, நீதித்துறையில் அவர்களுக்கு மறைமுக சப்போர்ட் கிடைத்து விடுகிறது .இது எப்படி கிடைக்கிறது? இதற்கு பின்னால் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளா?அல்லது அரசியல் கட்சிகளின் லீகல் டீம் (Legal team) இதில் ஒளிந்து கொண்டிருக்கிறதா?நீதிமன்றத்திற்குள் அரசியல் தலையீடு எப்படி வருகிறது? என்று ஆய்வு செய்யும் போது, அவர்களுக்கு பின்னால் ஒரு அரசியல் கட்சி ஒளிந்து கொண்டிருக்கிறது. 

முதலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவிகளையும், நீதிபதிகளையும் பரிந்துரைக்கக் கூடாது. இது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்சியும், பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளால் தான், நாட்டில் இந்த குழப்பங்கள், சட்டப் போராட்டங்கள், தவறான தீர்ப்புகள், ஊழல்வாதிகளுக்கு வாய்தாக்கள், இவை அத்தனையின் பின்னணியில்,அரசியல் கட்சி குற்றவாளிகள் ,சட்டத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு, சமூகத்தில் நல்லவர்களாக இவர்களை காட்டிக் கொண்டிருக்க, பல பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அரசியல் பின்னணியில் இருந்து கொண்டு நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு தான் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்பட்டு, சலுகை, விளம்பரங்களாக  இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது உண்மையை எழுதும் பத்திரிகைகளுக்கு எதுவும் கிடையாது. பொய்யை மக்களிடத்தில் உண்மை போல் திரித்து சொல்பவர்களுக்கு அரசின் எல்லா சலுகை, விளம்பரங்களும் கிடைக்கிறது .இதுதான் கலிகாலத்தில் சமூகநலன் பத்திரிகைகளுக்கு கிடைக்கின்ற சமூக நீதி.மேலும்,

சட்டங்கள் அரசியல்வாதிகளுக்கு தகுந்தாற்போல் இருந்தால் சரி. அதனால் தான் இந்த 50 ஆண்டுகால பத்திரிக்கை சட்டம் மாற்றப்படாமல், மக்களுக்கு எதிராகவே இருக்கிறது.பத்திரிக்கை துறையிலே இப்படி என்றால், சாமானிய மக்களுக்கு எப்படி சமூக நீதி கிடைக்கும்? நீதித்துறையில்,

கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் பின்னணியில் உள்ள நீதிபதிகளை பற்றி ஆராய்ந்து பாருங்கள், அவர்கள் எந்த கட்சி பின்புலத்தில், நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அவர்கள் செய்த தவறை மறைக்கவும், சட்டத்தை வளைத்து அவர்களுக்காக தீர்ப்பு வழங்கவும் மாறிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.மேலும்,

நாட்டில் நீதித்துறை சரி செய்தால்தான்,சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கும். இல்லையென்றால்,  அது போராட்டம். உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதியை கேட்க வேண்டும் என்றால், லட்சத்தில் பணம் உள்ளவர்கள் மட்டும் தான் வழக்கு போட முடியும் .அதனால், உயர்நீதிமன்றங்களில், உச்ச நீதிமன்றங்களில் சாமானிய மக்களால் லட்சக்கணக்கான பணம் செலவழித்து நீதியை பெற முடியாமல் போகிறது.

அது மட்டுமல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நீதி, சாமானிய மக்களுக்கு ஒரு நீதி, நீதிபதிகளுக்கு ஒரு நீதி, இப்படி நீதித்துறை ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் பொதுவானது. அதில் அரசியல் உள்ளே வந்தால் எப்படி எல்லாருக்கும் பொதுவான நீதி கிடைக்கும்? என் கையில் அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது, நீதியை விலைக்கு வாங்க முடியுமா? வாங்க முடியும் என்றால், நீதித்துறை எதற்கு? இது சாமானிய மக்களின் கேள்வி? மேலும்,

பத்திரிக்கை துறையிலும், அரசியல் தலையீடு இருந்து கொண்டு,பத்திரிக்கை துறையும் சரி செய்ய வேண்டும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட அதே சட்டங்கள் இன்றும், இந்த பத்திரிகை துறையை மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

 இதனால் தகுதியான பத்திரிகைகள், தகுதியானவர்கள் மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்க முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும், நாட்டில் எந்தெந்த துறை எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு அதற்கான தகுதி, கட்டமைப்பு ,திறமை வகுக்கப்பட வேண்டும். இதுதான் அடிப்படை. 

நீதித்துறையில் சட்டமே சரியாகத் தெரியாமல் அல்லது படிக்காமல் நீ அரசியல் கட்சிகளின் சிபாரிசில் ஒருவர் நீதிபதியாக போய் உட்கார்ந்து கொண்டால் என்ன ஆகும்? அவருக்குத் தெரிந்தவரை சட்டத்தை கையாண்டு, வந்த வரைக்கும் நீதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவர் நீதிபதியாக வேண்டுமென்றால் சிபாரிசு எதற்கு? தகுதி உள்ளவர் நீதிபதியாக வரட்டும். அவருக்கு தகுதி இருக்கிறது என்பது இந்த அரசியல் கட்சியினருக்கு என்ன தெரியும்? உன் கட்சிக்காரனாக இருந்தால், அவர் சட்டம் படித்து இருந்தால் அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமா? அல்லது அவரை கொண்டு போய் நீதிபதியாக உட்கார வைக்க வேண்டுமா? இது எல்லாம் மிகப்பெரிய தவறு.

 நீதித்துறை மக்களின் வாழ்க்கை, அரசியல், கலாச்சாரம், சமூகம், நீதி தங்களுக்கான உரிமை போராட்டம் இவை அனைத்துக்கும் நீதித்துறை தான் எதிர்பார்த்து மக்களின் வாழ்க்கை. அப்படிப்பட்ட நீதித்துறை எப்படி இருக்க வேண்டும்? ஆரம்பமே சட்ட வல்லுனர்கள் ஆக இருக்க வேண்டும். அங்கே ஜாதி கோட்டை,அரசியல் கட்சி கோட்டா,மதகோட்டா எதுவும் இருக்கக்கூடாது. மேலும், ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சர்டிபிகேட் வாங்கி வந்து, நானும் வழக்கறிஞர் என்று பதிவு செய்து, ஏதோ ஒரு கட்சியில் அங்கே ஒரு பதவியை வாங்கிக் கொண்டு, சட்டத்தை படிக்காமல் வந்துவிட்டால், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டம் ,நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி.

எனவே, நீதித்துறையை சரி செய்யும் அதிகாரம் நாட்டின் ஜனாதிபதி கையில் உள்ளது. அவர்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கிறார். அதனால், எந்த ஒரு அரசியல் கட்சியும், இனி அரசு வழக்கறிஞர்களுக்கோ அல்லது நீதிபதிகளுக்கோ பரிந்துரைக்கக் கூடாது என்பதை சட்டமாக நாட்டில்  இயற்றப்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *