மே 01, 2025 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிக்கை .ஆதனால் தமிழ்நாட்டு மக்களிடம் எந்த அரசியல் கட்சி, மக்களுக்காக செயல்படுகிறது? என்பதை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் எமது முக்கிய நோக்கம்.

மேலும், தமிழ்நாட்டில், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அரசியல் தலைவன் என்று பேசிக் கொண்டிருக்கிற ஒரு இடம் தமிழ்நாடு .அது எதனால்? 75% சதவீத மக்கள் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாது. அதனால் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது .அதனால இவனெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்.சண்டைக்கு கொம்பு தூக்கி கொண்டு வருபவனும், கத்தி தூக்கி கொண்டு வருபவனும்,தன்னை அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவன், தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதி என்று அரசியல் தெரியாத மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறான்.அதாவது இவர்களுடைய தகுதி, தரம், செயல்பாடுகள் ஒவ்வொன்றாக சொன்னால்,

ஜெயிலுக்கு போய் வந்தவன், ஊர் தாலி அறுக்கிறவன், ஊரை ஏமாற்றுபவன், ஊர் சொத்துக்களை எப்படி கொள்ளை அடிக்கலாம் ?என்று திட்டம் போடுகிறவன், இவன் எல்லாம் அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை வாங்கிக்கொண்டு, தன்னை அரசியல்வாதி என்று அரசியல் தெரியாத மக்களிடம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.மேலும்,இவனுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு அரசியல் தெரியாத முட்டாள்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.

ஏனென்றால், இவன் அரசியல் கட்சி புரோக்கர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். தேர்தல் என்று வந்தாலே ஆயிரம், 500 கொடுப்பது அல்லது இலவசமாக பொருட்களை வாங்கிக் கொடுப்பது ,இல்லையென்றால், இவனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும், சண்டை வந்தால் கட்டப்பஞ்சாயத்து செய்வது, போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது, இது எல்லாம் இவர்களுடைய மிகப்பெரிய அரசியல்.இப்படிப்பட்டவர்களை சமூகத்தில் நல்லவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், இவர்களும் இந்த அரசியல் தெரியாத மக்களை மறைமுகமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் தி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ,திருமாவளவன், சீமான் முதலிடத்தில் வருகிறார்கள்.இரண்டாவது இடத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கலாம். இங்கே அரசியல் வசனம் இந்த நாட்டு மக்களின் தியாகத்திற்காக இவர்கள் இருப்பது போல் பேசுவது தான், இவர்களுடைய ஒரு முதலீடு. ஆனால், செயல்படுவதில் இவர்களுக்கு பணம் மட்டும் தான் முக்கிய குறிக்கோள். அதனால், சூழ்நிலைக்கு தகுந்தவாறு எப்படியும் பேசத் தெரிந்தவர்கள், இதுதான் இவர்களுடைய அரசியல்.மேலும்,
தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும்பாலும் அரசியல் தெரியாது. தமிழ்நாட்டு ஊடகங்களும், நம் பேசுவதை அப்படியே போட்டு விடுவார்கள். அதனால், நாம் எப்படியும் பேசிக் கொள்ளலாம் என்று இந்த அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நாட்டில் நடந்த சம்பவம், நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ,இந்துக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது .அதாவது காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்களை தீவிரவாதி ஒருவன்
நீ இந்துவா? முஸ்லிமா? என்று கேட்டு சுடுகிறான். அப்போது இங்கு இருக்கிற இந்துக்கள் எல்லாம் அவ்வளவு கேவலமாக ஆகிவிட்டார்களா? இவர்களுக்கு ? இந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாமல், கிரிமினல்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.உங்களுக்கு வாக்களிக்கிறவன், அரசியல் தெரிந்தவர்கள் அல்ல, அரசியல் தெரியாத முட்டாள்கள் தான் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த தேச நலன் முக்கியமா? இல்லை என்னுடைய சொந்த நலன் முக்கியமா? என்று கூட தெரியாதவன் எல்லாம் கட்சி என்கிறான். அது கூட தெரியாத பத்திரிகை நிருபர்கள், பத்திரிகையாளர்கள் என்றும்,இந்த கட்சிகளுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிற ஜால்ரா பத்திரிகைகளும், நாட்டில் பத்திரிகை தான் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாட்டின் நெருக்கடியான நிலையில்,

இந்தியாவும், பாகிஸ்தானும் தற்போது போர் பதற்றத்தில் எல்லையில் இருக்கும் போது, அப்போது கூட கம்யூனிஸ்ட்டை சேர்ந்த கனகராஜ் தமிழ்நாட்டில் மோடி உயிர்பலியை வைத்து, அரசியல் லாபம் தேடும் சிறுமைத்தனம் என்று சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்துள்ளார். உன்னை எல்லாம் ஒரு கட்சி என்று ஒரு வெத்து வெட்டு கூட்டங்கள் பேசிக் கொண்டிருப்பது போல, இந்த நாட்டின் 140 கோடி மக்களின் பிரதமர் மோடி அவ்வாறு பேச முடியாது. தவிர,
தமிழ்நாட்டில் மக்கள் நலனை விட, உங்கள் நலனுக்கு தான் அதிகமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு பக்கம் கட்சியினருக்காகவும், உங்களுக்காகவும் தான், அரசியல் நடக்கிறதே ஒழிய, மக்களுக்காக எந்த அரசியல் கட்சியும் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் மக்களுக்கு பிரச்சினையாக இருக்கக்கூடியவர்களே, அரசியல் கட்சியினர் தான். இவர்கள் அரசியலுக்கு தகுதியா ?தகுதி இல்லையா? என்பது கூட தெரியாமல் இவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு கட்சிகளும், பொறுப்புகளை கொடுத்து வாக்களிக்கும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவே மிகப்பெரிய கேவலம்.

இந்தப் பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் அரசியல் தெரியாத மக்களை அரசியல் கட்சியினர் ஏமாற்றுவது போல, இவர்களும் சேர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், நாட்டில் மிக மோசமான ஏமாற்று அரசியல்! எல்லாவற்றிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவருக்கு, ஒருவர் யாரை ஏமாற்றி, யார்? மேலே செல்வது? இது சாமானிய மக்களிடத்தில் இருந்து, உயர் மட்டும் வரை இந்த எண்ணங்கள் மக்களிடம் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
லட்சம் பத்திரிகைகள் எடுத்தாலும், உண்மையை சொல்லக்கூடிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மிக, மிக குறைவு. அது விரல்விட்டு என்னும் அளவில் தான் இருக்கிறது. நாட்டில் போர் ஏற்பட்டால், அதனால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும்? நாட்டு மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மோடி அரசியலுக்காக, அரசியல் லாபத்திற்காக, இதை ஒருபோதும் செய்யவில்லை.

இது பல ஆண்டுகால பிரச்சனை! இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடக்கின்ற உள்ளடி அரசியல், இந்த உள்ளடி அரசியலில் இங்குள்ள அரசியல் கட்சி கிரிமினல்களுக்கு மத தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? யார்? யாருக்கு இருக்கிறது? என்பதை மத்திய அரசின் உளவுத்துறை மற்றும் NIA நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்,

இவர்கள் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய முஸ்லிம்கள் மீது கரிசனம் காட்டுகிறார்கள்? கரிசனம் காட்டுவதன் நோக்கம் என்ன? இவர்களுடைய அரசியல் ஆதாய, உள்நோக்கம் எது? என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் உளவுத்துறை வெளிப்படுத்த வேண்டும். மேலும்,இது எல்லாம் அரசியல் தெரிந்த எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள் .

அதனால் இவர்களை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்பது இந்த தேச நலனுக்காக ,சமூக நலனுக்காக ,அக்கறை உள்ள ஒவ்வொருவரும் மத்திய அரசின் உளவுத்துறைக்கு, NIA க்கு, வைக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள். எனவே, தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசுவது போல், அரசியல் தெரிந்தவர்கள்! இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எங்களுக்கு தலையெழுத்தா என்பது தான் அவர்கள் கேள்வி?