பாரதத்தின் வலிமை! ராணுவத்தின் வலிமை! நாட்டு மக்களின் தேசப்பற்று! இந்திய – பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றி.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 10, 2025 • Makkal Adhikaram

தீவிரவாதிகக்கு மரண பயமும், 100 பேர் கொல்லப்பட்டதும், அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டதும் ,இந்திய ராணுவத்தின் வெற்றி! இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துள்ளது.மேலும்,

இந்தியா போர் செய்ய வேண்டும் என்ற முடிவில் இறங்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் தான், இந்த சேதங்களுக்கும் காரணமாக போரை தூண்டியது. அவர்களுடைய தவறான அணுகுமுறை, 

மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தக்க பதிலடி இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டு, அவர்களை ஓட ஓட விரட்டியது மிகப்பெரிய இந்திய ராணுவத்தின் சாதனை மட்டுமல்ல, இந்திய ராணுவத்தின் வலிமையும், பாகிஸ்தான் நாட்டு மக்களும், பாகிஸ்தான் ராணுவமும் தற்போது புரிந்து இருப்பார்கள்.

மேலும் இதை சாணக்கியத்தனமாக கையாண்ட நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களையும், பாதுகாப்பாக காப்பாற்றினார். நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாப்பாக காப்பாற்றினார். அதே சமயத்தில் இந்திய நாட்டின் கௌரவத்தையும், இறையாண்மையும் காப்பாற்றினார், அத்தனை பெருமைக்கும் உரிய ஒரு தேசத் தலைவனாக, நாட்டிற்கு அவருடைய அர்ப்பணிப்பு அரசியல் என்பது, ஓட்டுக்காக அரசியல் செய்யாமல், இந்த நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், அவருடைய அரசியல் சேவை, இந்த போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 

மேலும்,இந்தப் போரின் மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை என்னவென்று பாகிஸ்தான் நாடு உணர்ந்திருக்கும். தவிர நாட்டு மக்களின் தேசப்பற்று,இந்திய ராணுவத்தினருக்கு மனதார பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். ஆனால், நாட்டின் எதிரி கட்சிகள் ராணுவத்தினர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்து, அவர்களுக்கு தாங்க முடியாத மன வலியை ஏற்படுத்த இருந்தாலும் , பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டு மக்கள் இந்த தேசத்தின் ராணுவ வீரர்களுக்கு என்றும் துணை நிற்போம் என்று உறுதியளித்துள்ளனர்.

மேலும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில்,போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், நாட்டின் ராணுவ வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *