
நாட்டில் தற்போது நேர்மையாக பணி செய்யும் போது அது மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. தற்போது மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர் (மயிலாடுதுறை )சுந்தரேசன் நேர்மையான அதிகாரி என்பதால் அவருக்கு காவல்துறையில் ஏகப்பட்ட டார்ச்சர்கள் மன அழுத்தங்கள் ,பணி சிக்கல்கள், கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதை எல்லாம் தாங்கி பணி செய்து வந்த டிஎஸ்பி சுந்தரேசன், ஒரு கட்டத்தில் அந்த வேதனைகள் தாங்க முடியாமல் ,அவரே வெளியில் வந்து பத்திரிகைகளுக்கு செய்திகளை கொடுத்து விட்டார். இது காவல்துறை மட்டுமல்ல, பல பேர் அப்படித்தான் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சமீபத்தில் நான் பார்த்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் ,வங்கி கிளையின் துணை மேலாளர் வரலட்சுமி அப்படிதான் பழிவாங்கப்பட்டுள்ளார். மேலும்,ஊழல் செய்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர்,,கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயஸ்ரீ , மற்றும் பல ஊழல் கூட்டம் கூட்டத்துறையில், தண்டிக்கப்படாமல் ,இவர்களெல்லாம் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நேர்மையாக பணியாற்றிய வரலட்சுமி இவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதால், இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்ல, கோர்ட் வழக்கு என்று போய்க்கொண்டிருக்கிறார்.
இப்படி ஒவ்வொரு துறையிலும், பல பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னாள்,நேர்மையான ஒரு ஐஏஎஸ் அதிகாரி வட மாநிலத்தில் 47 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்ற செய்தி பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. இப்படி நேர்மையான அதிகாரிகள் எல்லா இடத்திலும் இருக்க தான் செய்கிறார்கள்.
ஆனால், அவர்களில் சிலர் சூழ்நிலை கருதி கொஞ்சம் வளைந்து நெளிந்து செல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளிப்பட்டு இருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்களை உடனடியாக மாற்றி விடுவார்கள். அதை சில பேர் தாங்கிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள் .சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் திமுக ஆட்சியில், அவர்களுக்கு ஏற்றார் போல் அரசுத்துறை அதிகாரிகள் இல்லை என்றால் ,,அவர்களை உடனடியாக பணியிடம் மாற்றம் செய்து விடுவார்கள். இங்கே நேர்மையான அதிகாரிகளுக்கு எந்த பாராட்டும், பரிசும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு மரியாதை கூட கொடுக்க மாட்டார்கள் .ஆனால்,
அப்படிப்பட்டவர்களுக்கு மக்களிடத்தில் நிச்சயம் மரியாதை பாராட்டு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களுக்காக பணியாற்றக்கூடிய நேர்மையான காவல்துறை அதிகாரி டிஎஸ்பி சுந்தரேசனுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.