
நாட்டில் நாடாளுமன்றம் 140 கோடி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க கூடிய மற்றும் தேவைகள், பிரச்சனைகள் ,அதற்கு தீர்வு காண ,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் , அந்த இடத்தில் பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய அவசியம் என்ன ? மேலும் எதிர்க்கட்சிகள் அப்படி பேசி , நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பது ,அவர்கள் இந்த தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

தவிர,காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாகிஸ்தானுக்கும், இவர்களுக்கும் என்ன பிரச்சனை? ஆபரேஷன் சித்தூர் நடந்தது ,இந்திய நாட்டு மக்களுக்காக, நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் ஒரு ஆபரேஷன். இது பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.

மேலும், இது நடந்து முடிந்து போன கதை. இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி ,ராகுல் காந்தி மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் பேசுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. தவிர,உங்களுக்கு ஓட்டு போட்டவன் இந்தியன் ஆக இருந்தால் அவன் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஏனென்றால்,இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளையும் ,நாட்டு மக்களின் தேவைகளையும், பற்றி பேசுவதற்கு தான் நாடாளுமன்றத்தில் உங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியாக அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால், அங்கே போய் பாகிஸ்தானை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி? பாகிஸ்தான் எதிரி நாடாகவே கருதப்பட்டு வருகிறது தொடர்ந்து பல இன்னல்களை பாகிஸ்தான் மறைமுகமாக இந்தியாவுக்கு கொடுத்து வருகிறது. அதை தடுக்க வேண்டியது களை எடுக்க வேண்டியது ,மத்திய அரசின் முக்கிய கடமை. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி

நடவடிக்கை எடுத்தார். அந்த பிரச்சனையை முடித்தார். முடிந்த பிறகும், எதற்காக இந்த பிரச்சனையை நாட்டு மக்களிடம் பேசி குழப்ப வேண்டிய நோக்கம் என்ன? மேலும், இந்த போரை நிறுத்த
வெளிநாட்டு தலைவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை என்று மோடி ஓபன் டாக் ஆகவே பேசிவிட்டார் .
அவர்களால் சண்டையை சமாளிக்க முடியவில்லை காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டார்கள் அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது போல் கொடுத்துவிட்டார்கள். ஆனால், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் ஏஜெண்டுகள் போல பேசுவது, எந்த ஒரு இந்திய மக்களும் இவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால், இந்த ஓட்டுக்காக போடுகின்ற வேஷங்கள் நாட்டு மக்கள் இவர்களை மிகவும் கவனத்தில் எச்சரிக்கையாக இருந்து கையாள வேண்டும்.

நாடு, நாட்டு மக்கள், எந்த அரசியல் தலைவர்களால் நேசிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தான் இந்திய நாட்டின் தலைவர்கள். இது பழைய அரசியல் வரலாற்று தலைவர்களை பற்றி ஆய்வு செய்து பாருங்கள். இந்த உண்மை நாட்டு மக்களுக்கு புரியும்.