
வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது , சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் எல்லாம் மிகப் பெருமையாக பேசப்பட்டது.
உண்மையான, வெளிப்படையான பேச்சு, மக்களிடம் இருந்தது. சமூக உணர்வு இருந்தது. ஜாதி வெறியும் இருந்தது. இப்போது இதில் எதுவுமே இல்லை. இந்த சூழ்நிலையில் வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியாகி 40 ஆண்டுகள் ஓடிவிட்டது.

இந்த கட்சி இட ஒதிக்கீடு போராட்டத்திற்காக ,பலருடைய வாழ்க்கையை வன்னிய சமுதாயத்தில், பலிகடா ஆக்கினார்கள். பலருடைய வருமானம் பாதிக்கப்பட்டது. சொத்துக்கள் இழந்து இருப்பார்கள் பலர்.

அதன் பிறகு தான் ராமதாஸ், மேலே வருகிறார். இழப்புக்களையும், தியாகங்களையும், செய்த வன்னியர்கள் இன்று இருக்கிற இடமே தெரியவில்லை. ஆனால், வெத்து வெட்டுகள் போல், சுத்தி வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பதவி மற்றும் வன்னியர்களை சுரண்டி, மிரட்டி, சொத்து வருமானங்களை பார்த்துக் கொண்டார்கள்.

உண்மைக்கு உழைத்தவன், அட்ரஸ் இல்லை. வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்கள், இன்று வசதிக்கு வந்து விட்டார்கள். ஆக கூடி இந்த வன்னியர் சமுதாயம் உண்மையிலேயே நீங்கள் ஏமாற்றுவதற்கு தயாராக இருந்தால்! இவர்கள் எத்தனை சங்கமும் ,கட்சியும் ஆரம்பித்துக்கொண்டே போய்க் கொண்டிருப்பார்கள் .
ஏனென்றால் பணம் சேர்ந்து சொத்துக்கள் பத்து தலைமுறைக்கு மேல் அதிகமாகி விட்டது. அதை ஒருபுறம் பாதுகாக்க வேண்டும். அதற்கு அரசியல் கட்சி தான் ஒரு பாதுகாப்பானது.மேலும்,

வன்னியர்களில் பணத்தை கொடுத்தால் அல்லது காண்பித்தால் விலை போவார்கள் அப்படிப்பட்ட வன்னியர்கள் இருப்பதால், இன்னும் ராமதாஸ் பத்து கட்சியை கூட ஆரம்பிப்பார். அது ராமதாஸ் அரசியல் கட்சி வியாபாரம். மேலும்,

அதை வைத்து, அதாவது இந்த கூட்டத்தை வைத்து, கூட்டணிகளிடம் பேரம் பல நூறு கோடிகள் பேசுவார்கள். ஒப்புக்கு பத்திரிக்கை வியாபாரம் நடத்துவது போல, அதாவது அதில் வரும் செய்திகள் போல ,இவர்களும் பல இட ஒதுக்கீடு போராட்டம், சமூக போராட்டம் ,இப்படி அதற்கு ஒரு பெயரைக் கொடுத்து இந்த சமுதாயத்தில் பல வெத்து வெட்டுகள் இருக்கும். அவர்களுக்கு எதுவும் தெரியாது.

இருப்பினும் இவர்கள் ராமதாஸ் பெயரை சொல்லி, படித்தவன், தகுதியானவன், இவர்களை, இவர்கள் மிரட்டி பார்ப்பார்கள். அதனால்! வன்னிய சமுதாயத்தில் தான் இவர்கள் ஏமாற்ற முடியும். வேறு எங்கும் இவர்கள் கதை ஓங்காது.மேலும்,
ராமதாஸ் ஒரு வன்னிய சமூக ஏமாற்றுப் பேர்வழி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏற்கனவே, 40 ஆண்டு காலமாக நடத்திக் கொண்டிருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி !இந்த சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. செய்யவும் மாட்டார்கள்.மேலும்,
நீங்கள் இந்த கட்சியை வைத்து தான், உங்களுக்கு மரியாதை வருகிறது. என்றால், உங்களை விட அடி முட்டாள், எவனும் இருக்க மாட்டான். உங்களை யாரோ, இந்த கொடியை கட்டி, வண்டியில் போனால், அல்லது ராமதாஸ் போட்டோ வைத்தால், உங்களுக்கு மதிப்பு ,மரியாதை கொடுக்கிறான் என்றால், அவனைவிட ஒரு அடி முட்டாள் எவனும் இருக்க மாட்டான்.
இந்த சமுதாயத்தில் தகுதியானவர்கள், இருக்கிறார்கள் .படித்தவர்கள் ,இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதனால் ,நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். உழைக்கும் வன்னிய சமுதாயம் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாறாதீர்கள். விழித்துக் கொள்ளுங்கள். இனிமேல் படித்த வன்னியர்கள் இவர்கள் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து நீங்கள் வேலைக்கு போவீர்கள் என்ற கனவும் காணாதீர்கள்.

இது நம்ம ஜாதி கட்சி என்றும் நினைக்காதீர்கள். இது ஜாதியை ஏமாற்றும் கட்சி என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வாய்ப்பிருக்கும் போதும், வாய்ப்புகள் தேடி வந்த போதும், இவர்கள் இந்த சமூகத்திற்கு அப்போதே செய்யவில்லை.
ஜெயலலிதா முதல்வராக வந்த போது, கேட்ட முதல் கேள்வி உங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்? சமுதாயத்திற்கு வேண்டாம் ,எங்களுக்கு செய்யுங்கள் எங்களுக்கு மந்திரி பதவி கொடுங்கள். என்று வாங்கிக் கொண்டவர்கள். இப்போது மட்டும் மாறி விடுவார்களா? சிந்தித்து விழித்துக் கொள்! வன்னிய சமுதாயமே!
இதுவரை இந்த சமுதாயத்திற்கு இவர்கள் செய்தது என்ன? இனி செய்யப் போவது என்ன? மேலும்,சமுதாயத்தை ஏமாற்றவா? அது சமுதாயத்தின் முடிவு …! உண்மை கடினமான பாதை! பொய் எளிமையான பாதை! ஏமாறுவதும் ,விழித்துக் கொள்வதும் ,உங்கள் முடிவு …!