தவெக வில் இணையும் செங்கோட்டையன் விஜய்க்கு அரசியல் சப்போர்ட் உருவாகிறதா? -அரசியல் பார்வையாளர்கள் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கட்சியின் தலைமையைப் பார்த்தே தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள்.

இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சீனியர்கள் ,அந்தந்த கட்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் கட்சியின் வலுவான தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றிக்கு முக்கியத்துவமானது.

அந்த வகையில் ஏற்கனவே, மக்கள் அதிகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு பத்திரிக்கையின் வாயிலாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. இவர் எல்லாரையும் அரவணைத்து தான் செல்ல வேண்டும்.

ஏனென்றால், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக !ஜெயலலிதா அதனுடைய தலைவராக பார்க்கப்பட்டார். காரணம் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள உறவு நெருக்கம்.

அந்த வகையில் இருந்தவர் சசிகலா, ஜெயலலிதா! சசிகலாவையே எடப்பாடி பழனிசாமி மிஞ்சி விட்டார். மேலும்,பிஜேபி சீனியர்களை ஒன்று சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும், பழனிசாமி அதை வெறுத்து ஒதுக்கி தள்ளி விட்டார்.

செங்கோட்டையன் இதே கருத்தை முன்வைத்து, கட்சியில் பிரிந்து சென்ற சீனியர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி எடுத்து, அது பலன் அளிக்கவில்லை. இப்போது செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணையும்போது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு அரசியல் சப்போர்ட் உருவாக்கி விட்டது.மேலும்,

தமிழக வெற்றி கழகத்தில் இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜனாவும் சரி ,புசி ஆனந்தும் சரி, அரசியல் அனுபவம், முதிர்ச்சி குறைவானவர்கள். இதில், விஜய்க்கு சுத்தமாக அரசியல் தெரியாது. மேலும், செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர்.

இப்போது விஜய்க்கு எப்படி பேச வேண்டும் ?எந்த ,எந்த முறையில் அரசியல் செய்ய வேண்டும் ?இவை அத்தனைக்கும், இவர் தான் இனி செய்யப் போகிறார். அதனால், தமிழக வெற்றி கழகத்திற்கு செங்கோடையனால் அரசியல் வழிநடத்தக்கூடிய ஒரு ஆசான் கிடைத்துவிட்டார்.

அது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு மிகப் பெரிய அரசியல் சப்போர்ட் என்பதை எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் அதை அரசியல் பார்வையாக பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால், ஜீரோ பக்கத்தில் ஒன்று சேர்த்தால், அந்த எண்களுக்கு எப்படி மதிப்பு கூடுமோ, அப்படிதான் தமிழக வெற்றி கழகத்திற்கு செங்கோடையன் வருகை தீர்மானிக்கப் போகிறது.

மேலும், எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் அவருக்கு தூது அனுப்பி சமரசம் செய்து கொள்ளலாம் என்ற பேச்சு வார்த்தை அதுவும் தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியானது.

இனியாவது எடப்பாடி பழனிசாமி சீனியர்களை அரவணைத்து செல்வது தான் அதிமுக வின் வெற்றி என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *