
நாட்டில் கோயில் சொத்து ,மகான்களின் சொத்து, மடங்களின் சொத்து ,இந்த சொத்துக்களை எல்லாம் யார் இருக்கிறார்கள் ?கேட்பதற்கு என்று முதலில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள். அதிலே கடைகளை கட்டி வாடையை விடுகிறார்கள். இதில் பல ஆண்டுகளாக இருப்பவர்களும் உண்டு .அவர்கள் அந்த இடத்தில் விருத்தி அடைய முடியாது .அவர்களுடைய குடும்பம் நல்லபடியாக வாழாது.
யாரோ ஒருவர் கோயிலுக்கு தனமாக கொடுத்திருப்பார். அதை இவர்கள் ஆக்கிரமிப்பு செய்து, வசதியாக வாழலாம் என்று சும்மா வந்தது தானே என்று இருந்து கொண்டு இருப்பார்கள்.
இதற்கு நடந்த சம்பவங்களை இங்கு சொன்னால் தான், இதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். மேலும், திருவண்ணாமலை ஜீவசமாதி அடைந்த மகான் சேஷாத்திரி சுவாமிகள், வந்தவாசிக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வழுவூர் என்ற சிறிய கிராமத்தில் தான் பிறந்தார். இவர் அந்த காலத்திலேயே வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறார்.

பிராமண குடும்பத்தை சேர்ந்த இவர் ,தெய்வத்தின் மீது அதிக பற்று, இவர் ஒரு பத்து வயது நிரம்பாத நிலையிலேயே அந்த ஊரை விட்டு காஞ்சிபுரத்திற்கு வந்து விடுகிறார். பிறகு காஞ்சிபுரத்தில் அவர்களுடைய சித்தப்பா வீட்டில் இவருடைய வாழ்க்கை தொடர்கிறது. இவருடைய அப்பா சிறுவயதிலே இறந்து விட்டதால், அம்மாவும் பிள்ளையும் ,காஞ்சிபுரம் வந்து விடுகிறார்கள்.

அப்போது ,அந்த சொத்துக்கள் பராமரிப்பு இல்லாமல்,அவர் வாழ்ந்த வீடுகள் ,எல்லாமே ஆக்கிரமிப்பு செய்து, யார், யாரோ குடி இருக்கிறார்கள். இந்த செய்தி கூட எனக்கு சமீபத்தில் தான் கிடைத்தது.
இதை அந்த ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் சொன்னார். அந்த இடத்தில் மீண்டும் அவர்களை அகற்றி சேஷாத்திரி சுவாமிகளுக்கு கோயில் கட்ட அவர்கள் படாத பாடுபட்டு இருக்கிறார்கள்.

ஆனால், சேஷாத்திரி சுவாமிகள் வாழ்ந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, வாழ்ந்து கொண்டிருந்த குடும்பங்கள் நிலையை என்ன தெரியுமா? கை, கால், ஊனத்துடன் அவர்களுக்கு குழந்தைகள் மேலும், அகால மரணம் அடைந்திருக்கிறார்கள் திடீரென்று விபத்தில் இறப்பார்கள் .நல்ல சாவே வராது என்று சொல்வார்கள்,இதையெல்லாம் அந்த இடத்தில் வாழும் குடும்பங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
அப்போதும் அவர்களுக்கு வேறு இடம் தருகிறோம் .வீடும் கட்டித் தருகிறோம் என்று, சொல்லி கூட அவர்கள் அந்த இடத்தை விட்டு வரவில்லை. ஒரு வழியாக அப்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு யாரோ ஒரு மாவட்ட ஆட்சியர், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார். அதன் பிறகு தான், அவர்களை அங்கிருந்து அகற்றும் முடிந்திருக்கிறது. இதை ஏன் சொல்கிறேன்? என்றால்,

இந்த கோயில் சொத்துக்கள், மகான்களின் சொத்துக்கள், யார் ஆக்கிரமிப்பு செய்தாலும், ,அவர்களுடைய ஒரு தலைமுறை அல்ல, பல தலைமுறைகள் அந்தப் பாவத்தின் கணக்கு, அவர்களை வந்து சேரும்.
மேலும்,சில ஜாதிகள் பாவத்தின் கணக்கை அதிகமாக சுமந்து கொண்டு, ஆணவத்தில் பேசிக்கொண்டு, திமிரில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அம்பேத்கர் வந்து உன்னுடைய பாவ கணக்கை தீர்க்க மாட்டார். அதை நீ தான் தீர்த்து விட்டுப் போகணும். எத்தனை அம்பேத்கர் வந்தாலும் ,ஒன்னும் புடுங்க மாட்டார்.

அதனால், கடவுள் இருக்கிறார் .நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும், உன்னுடைய கணக்கை, நீ தான் அனுபவிக்க வேண்டும்.இதை உறுதியாக எழுதி வைத்துக் கொள். மேலும், இன்னும் பல சம்பவங்கள் சொல்கிறேன். இதையெல்லாம் எடுத்து வைத்து தான் பேசுகிறேன். தெரிந்து தான், இதை உங்களிடம் பேச முடியும். ஏனென்றால், நீங்கள் அரசியலாகி விடுவீர்கள் .இது அரசியல் அல்ல, இது ஆன்மீகம். இங்கு கொடி பிடிக்கிற வேலை எல்லாம் இங்கு செல்லாது.
அதனால், உண்மையை சொல்கிறேன். உன் மூளைக்கு எது எட்டுமோ, அதுதான் எட்டும், எட்டாதது எட்டாது . குருடன் இடம் போய் ஒரு புத்தகத்தை கொடுத்து, இதைப் படி என்றால் ,அவன் எப்படி படிப்பான்? அந்த நிலைமைதான் இது. அதனால், இந்த கோயில் சொத்தை அனுபவிப்பவர்கள் ஒரு பக்கம் தெய்வத்தின் தண்டனை அவர்களுக்கு கிடைக்கிறது. மற்றொரு பக்கம் நீதிமன்றத்தின் தண்டனை, அதாவது சட்ட நடவடிக்கை கிடைக்கிறது.

அதனால், வெளியேறுபவர்கள், தப்பித்துக் கொண்டார்கள் ,அவ்வளவுதான் சொல்ல முடியும். மேலும்,தற்போது கூட கரூரில் வன்னிமலை முருகனுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்தவர்களை நீதிமன்றம் அகற்ற உத்தரவிட்டு, இந்து அற நிலையத் துறை அதிகாரிகள் ,அங்கு ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை காலி செய்ய சொல்கின்றனர்.
அதேபோல், சென்னை கொரட்டூர் பகுதியில் மடாதிபதிக்கு சொந்தமான இடத்தில் ,ஒரு கட்டுமான நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து, வீடு கட்ட ,அதை 2000 குடும்பங்களுக்கு மேல் வாங்கி இருக்கிறார்கள்.வாங்கியவர்கள் எல்லாம் படித்தவர்கள், வங்கியில் வேலை பார்ப்பவர்கள் ,தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், இவர்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கவே வாங்கி விட்டார்கள்.

மேலும்,பத்திர பதிவு அலுவலகத்திலே இதை பத்திரப்பதிவு செய்ய மறுக்கிறார்கள். இந்த இடம் ஜீரோ வேல்யூ ஆக்கப்பட்டுள்ளது.
இப்போது இவர்களெல்லாம் டிஜிபி அலுவலகத்திற்கும் ,நீதிமன்றத்திற்கும் ,போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதை ஏன் சொல்ல வருகிறேன் ?என்றால், மடத்தின் இடம் .அது ஏதோ ஒரு தெய்வத்திற்கோ, அல்லது மகானுக்கோ தானமாக கொடுக்கப்பட்ட காணிக்கை. அந்த காணிக்கையை ஒருவன் திருடி விற்றிருக்கிறான். இப்போது விற்றவனும் பாதிப்படைகிறான். வாங்கியவர்களும் பாதிப்படைகிறார்கள். இப்பதாவது தெரிகிறதா? கோயில் சொத்துக்களில் வாழ முடியாது.

அந்த காலத்தில் பெரியவர்கள் சொன்னது, கோயில் இடத்தில் வாழாதே! அதுமட்டுமல்ல, அந்த காலத்தில் பிராமணர்கள் அல்லாதவர்களை, கோயிலுக்குள் நுழைவதை பிராமணர்கள் தடுத்தார்கள். அவள் எல்லாம் சூத்திரர்கள் என்று சொன்னார்கள். அதை எதிர்த்து அம்பேத்கர் போராடினார்கள்.அதில் நியாயம் இருந்தது. இப்போது அதே பெயரை பயன்படுத்தி கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம் வாழலாம் என்று அவர்கள் சொல்லவில்லை. உண்மை புரிந்தால் சரி.