2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள்.

இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து.

மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு வந்துள்ளது.

மேலும்,இதில், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கடந்த மாதமே மக்கள் அதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, திமுகவின் வெறுப்பு அரசியல், மக்களிடம் எதிரொலித்தது. பணத்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் திமுக களம் இறங்கியது.

அதுவும் இந்த தேர்தல் அவர்களுக்கு வெற்றியா? தோல்வியா? என்ற ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ,அரசியல் கட்சியினர் மக்களை அலட்சியமாக பார்ப்பதுண்டு. ஏனென்றால் , திமுக ஐந்தாண்டு ஆட்சியில் இருந்தால், அதிமுக 5 ஆண்டு ஆட்சியில் இருக்கும். எம்ஜிஆர் காலத்தில் மட்டும்தான் அவர் இருந்தவரை ,திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலையில், எதிர்க்கட்சியாகவே இருந்து வந்தது.

இப்போது அந்த நிலை மாறி ,விஜயின் அரசியல் !இது இரண்டுக்குமே மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது. அந்த அளவுக்கு பெரும்பான்மை இரண்டு கட்சிகளுக்கும் அதாவது அதிமுக, திமுகவுக்கு கிடைக்குமா ?என்று தான் பல்வேறு அரசியல் கட்சியினர் தற்போது பேசி வருகிறார்கள். இது ஒரு வகையில் நல்ல விஷயம் தான்.

ஏனென்றால், அரசியலில் அதிமுகவிலும், திமுகவிலும் இருக்கக்கூடிய கட்சிக்காரர்கள், எல்லாம் எதிர்பார்ப்போடு இருப்பார்கள். நம்முடைய கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், நாம் காண்ட்ராக்ட் எடுக்கலாம். ஏரி மண் , ஆற்று மணல் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிக்கலாம் . இனி அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்குமா?

அதேபோல், கட்டப்பஞ்சாயத்து நடத்தலாம். Illegal ளாக எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்? டாஸ்மாக்கில் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? இப்படி பல எதிர்பார்ப்புகளோடும் ,கனவுகளோடும், இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இந்தத் தேர்தல் நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்.

அது மட்டுமல்ல, இனி அரசியல் கட்சியினரின் அராஜகத்திற்கு வாக்காளர்கள் தேர்தல் மூலம் நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அதை இந்த தேர்தலில் நன்கு எனக்கே புரிந்திருக்கிறது. மேலும், மக்கள் பணம் கொடுத்தாலும், அதை வாங்கிக் கொள்வார்கள் .ஆனால், ஓட்டு அவர்களுக்கு தான் என்பது நிச்சயம் இனி இருக்காது.

மக்கள் இவர்களை தேர்தலால், இனி பாடம் புகட்ட வேண்டும் என்று இந்த தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று மக்கள் பேசுவதை காதால் கேட்க முடிகிறது.

மேலும்,மே 4 ந் தேதி 6 மணிக்கு மேல் மக்கள் எதிர்பார்க்கின்ற ரிசல்ட் என்ன? என்று தெரிந்து விடும். அதுவரை அரசியல் கட்சியினரின் ஏக்கம் பேசாமல், பொறுமை காத்து புதிய ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக மக்கள் பேசுவது வாக்காளர்களின் நம்பிக்கையா? அதற்கு முடிவு மே 4 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *