
திமுக ஆட்சியில் ,மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருந்து விட்டது. இந்த ஆட்சி முடியும் தருவாயில் கூட ,தினமும் தொடர் பாலியில் குற்றங்கள் நடைபெறுவது, வெட்கக்கேடானது, வேதனையானது.

ஸ்டாலின் இது பற்றி அலட்சியமும் மெத்தனமும் இருப்பதாகவே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ,இது பற்றி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி சரியான பதிலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இப்படி தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாலியல் குற்றவாளி வேலை பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதேபோல்,
விஜய் தன்னுடைய x தலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மாணவியின் பாலியல் பலாதாரம் பற்றி இப்படி ஒரு ஆட்சி தமிழ் நாட்டுக்கு தேவையா? என்று கேள்வியும், அவரது கட்சியினர் அதற்கு போராட்டமும் நடத்தி உள்ளனர்.

மேலும்,தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதை தடுக்க தவறிய ஸ்டாலின் விஜயின் சொந்த குடும்ப பிரச்சனையை பற்றி அவரது கட்சியினர் பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது? தவிர,
அவரவர் குடும்பத்தில் ஆயிரம் சொந்த பிரச்சனைகள் இருக்கும். அதை பேசுவதற்காகவா? இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்? எதற்கு அரசியலுக்கு வருகிறீர்கள்? அதுக்கு அர்த்தமாவது தெரியுமா?
அர்த்தம் தெரிந்தால், ஒருவருடைய சொந்தப் பிரச்சனையை பேச மாட்டார்கள். அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தான் சொந்த பிரச்சனையை பேசி ,அரசியல் தெரியாத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்களுடைய கதை ஓங்காது.