
தேர்தல் விதிமுறைகள் இருந்து வரும் வேளையில், திமுக எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் தனது தொகுதியில் நேற்று இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வருவது இது என்ன தேர்தல் நடத்தை விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்கிறார்கள்?

மேலும்,தேர்தல் என்றால் அரசியல் கட்சிகளுக்கு பாரபட்சம் என்று அந்த விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் நலத்திட்ட உதவிகளோ அல்லது பணமோ பரிசு பொருட்களோ கொடுத்தால் ,அது உடனடியாக அதை பறிமுதல் செய்வது போல, இதையும் பறிமுதல் செய்து கொடுத்த பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் எப்படி அனுமதிக்கலாம்? இவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? தேர்தல் விதிமுறைகள் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எங்களைப் போன்ற பத்திரிகைகளுக்கும் எழுந்துள்ளது.

எனவே, இது பற்றி தேர்தல் ஆணையம் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்குமா?