
தேர்தல் ஆணையம் எத்தனையோ பறக்கும் படை வைத்திருந்தாலும் ,தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக, மற்றும் சில அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு கொடுக்கின்ற பணத்தை தடுக்க முடியாமல், திணறி வருகிறது.மேலும்,

ட்ரோன்கள், ரகசிய கேமராக்கள் பயன்படுத்தி இதையும் தடுக்க முடியவில்லை.தவிர, வாக்காளர்களை அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தி, பரப்புரை செய்து, வாக்குகளை கேட்பது, இது எல்லாம் பழைய மாடல். மேலும்,

காலத்திற்கேறப , தேர்தல் ஆணையம் பிரச்சாரங்களை மாற்ற வேண்டும். ரோட் ஷோ காட்டுவது, சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் மக்களை கூட்டம் போட்டு, அவர்களை காக்க வைப்பது இது எல்லாம் தேவையற்ற வேலை.

அப்படி வரவைத்து அவர்களுக்கு பணத்தை கொடுப்பது இதுவும் ஒரு போலியான அரசியல். அரசியல் கட்சிகள் என்ன தேர்தல் பிரச்சாரம் செய்ய கருத்துக்களை எழுதி கொடுக்கிறார்களோ அதை தேர்தல் ஆணையமே மக்களிடம் சேர்க்கும் பரப்புரைகளை சொல்ல வேண்டும் அதற்கான பணத்தை அவர்கள் செலுத்த வேண்டும்.மேலும்,

இதில் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வு கொடுத்தாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள், அதைப்பற்றி காதில் வாங்காமல் பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களை திருத்த முடியாது.
அதேபோல், குடிகாரர்கள் சுமார் தமிழ்நாட்டில் ஒன்றரை கோடி பேருக்கு மேல் இருக்கிறார்கள் . அவர்களுக்கெல்லாம் இலவசமாக மது பாட்டல் கொடுத்து, பணத்தை கொடுத்தால் ,யார் ?எந்த கட்சிக்கு சொல்கிறார்களோ, அந்த கட்சிக்கு ஓட்டு போட்டு விடுவார்கள்.

மேலும்,அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்கள் ,அவர்களுடைய அக்கவுண்டிற்கும் அல்லது அவர்கள் குழுவிற்கும் எத்தனை பேர் என்று கணக்கு சொன்னால், போதும் சரியாக அவர்களுக்கு பணத்தை திமுக, அதிமுக கொடுத்து விடுவார்கள்.
மேலும்,ஒரு வார்டில் எத்தனை ஓட்டு? பணம் வாங்கி, ஓட்டு போடுபவர்கள் ?என்பதை திமுக அலசி ஆராய்ந்து அந்த பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

தவிர,இதில் அவர்கள் கைதந்தவர்கள். மற்ற கட்சிகள் கூட இதில் தடுமாறும், ஆனால் இவர்கள் இதே வேலையாக சுற்றித் திரிபவர்கள். யார்? யார்? வீட்டில் எத்தனை ஓட்டு இருக்கிறது? அவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி பணம் கொடுக்க வேண்டும்? எப்படி பணத்தை பதுக்க வேண்டும்? எந்த நேரத்தில் மக்களுக்கு கொடுக்க வேண்டும்? இது எல்லாம் திமுகவினருக்கு கைவந்த கலை.

இவர்களை ஸ்கெட்ச் போட்டு, தூக்க வேண்டும் என்றால் மாஸ்டர் பிளான் காவல்துறை அதிகாரிகளால் மட்டும்தான் முடியும். அந்த அளவுக்கு இவர்கள் கிரிமினல் மைண்ட் கருவிலே கொண்டு வந்திருக்கிறார்கள். அரசியல் தெரியாத குடிகாரர்களையும், கூலிக்கு போகக்கூடிய ஜனங்களையும், அவர்கள் கையில் கொடிகளை கொடுத்து, ஓட்டு கேட்க சொல்கிறார்கள். இப்படி எல்லாம் அரசியல் எந்த அளவுக்கு மலிவாகிவிட்டது என்பது அரசியல் தெரிந்தவர்கள் படித்தவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மேலும்,இதற்கு அர்த்தமில்லாதவர்கள் கொடியை தூக்கிக் கொண்டு வந்தால், அவர்களைப் பார்த்து எப்படி வாக்களிப்பது? உடனே இவர்கள் பேசுவார்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? ரிக்க்ஷா ஓட்டுபவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? எல்லாருக்கும் தான் ஆசை இருக்கிறது ஆனால், யார்? அந்த வேலையை ஒழுங்காக செய்யக்கூடிய தகுதி உள்ளவர்கள்?
தகுதி இருந்தால் கூட, அதற்கான அர்ப்பணிப்பு, நேர்மை உங்களில் யாரிடம் இருக்கிறது? இது என்ன?வீடு, வீடாக சென்று ஓட்டு பிச்சை கேட்கிற வேலையா? எந்த கட்சிக்காரனும் என் வீட்டுப் பகுதிக்கு வர மாட்டான். அவனுக்கு தெரியும் என் தகுதி என்ன என்று?

எனவே, விலைமதிப்பில்லாத ஓட்டுக்கு விலை போகும் கூட்டங்கள், ஓட்டு ,கேட்டு ,ஊரில் தெரு, தெருவாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் திமுக 8 ஆயிரம் ரூபாய் ஓப்பனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தேர்தல் திருவிழாவா? இல்லை, இதுதான் தேர்தலா?
மேலும்,தேர்தலுக்கு அர்த்தமே இல்லாமல், அரசியல் கட்சிகள் தேர்தல் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சிகள், தேர்தல் என்றால், இவர்களை படம் பிடித்து, விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பது தான் தேர்தலா? எது தேர்தல் ?என்பதை மக்களிடம் சொல்லுங்கள் பார்ப்போம்.
மேலும்,அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்கள் சொல்லும் செய்திகளை போடுவது, மக்களை ஏமாற்றும் பேக்கேஜ் நியூஸ்சா? இதுதான் நான்காவது தூணின் வேலையா? இதற்குத்தான் உங்களுக்கு அக்ரிடேஷன் கார்டா? மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

மேலும்,காசு கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்குவது தேர்தலா ? தேர்தல் ஆணையம் இதை தடுக்க முடியாவிட்டால் தேர்தல் எதற்கு? அர்த்தம் இல்லாமல் இந்த அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நடத்திக் கொண்டிருக்கிறது.

மேலும், ஒருவரின் ஜனநாயக உரிமையை விற்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை ஏன்? அதை பறிக்கும் சட்டத்தை கொண்டு தகுதி இல்லாத நபர்கள் தான், தங்களுடைய ஜனநாயக உரிமையை பணத்திற்கு விற்பார்கள். அதனால், அவர்களது வாக்களிக்கும் உரிமையை பறிப்பது தவறு இல்லை.

மேலும், இதனால், பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல, ஒரு சமூகமே பாதிக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதற்கு அர்த்தம் தெரியாமல் கட்சி கொடிகளை கட்டிக்கொண்டு, மைக்கை கையில் பிடித்துக் கொண்டு, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டு, தேர்தல் என்று இதை எப்படி ஏற்றுக் கொள்வது?
தேர்தல் என்றால் !ஒருவரிடம் பணமோ, இலவச பொருட்களோ, வாங்காமல் வாக்களிக்க வேண்டும். மக்களாட்சியின் வாக்கு என்பது ஒருவரின் உரிமை மற்றும் அவரின் மதிப்பு மிக்க கௌரவம்

அதை அரசியல் வியாபாரிகளிடம் ஆயிரம், இரண்டாயிரத்திற்கு விற்றால்! இவர்கள் வாக்காளர்களா? அல்லது வாக்கை விற்பவர்களா? இவர்களை வைத்து நேர்மையான அரசியலையும், தகுதியானவர்களையும் தேர்வு செய்ய முடியுமா?

ஒரு வேலைக்கு ஒருவன் தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதற்கான படிப்பு ,அனுபவம், திறமை, எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறார்கள் .ஆனால், அரசியலில் பதவிக்கு வருபவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?அவர்களுடைய நேர்மை என்ன ? படித்த பட்டங்கள் , பல கோடி சொத்துக்கள் அது தகுதியா? அப்படிதான் அது தகுதி என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.அது தேர்வுக்கும், சமுதாயத்தையின் மாற்றத்திற்கும் எப்படி தகுதியானவர்கள்? ஒருவரின் அரசியல் நேர்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு, இதுதான் தகுதி, இதற்கு ஒவ்வொரு கட்சியிலும் ,எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்பதை அந்தந்த கட்சி தேர்வு செய்யுமா? இதுதான் தேவை .

மேலும்,ஊழல் வழக்குகள் இருந்தாலும், மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு காரணம் என்ன? இது மக்களின் அறியாமையா! அல்லது அலட்சியமா? எனவே, இது மக்களின் அலட்சியமும், தேர்தல் ஆணையத்தின் கடமையும், தட்டிக் கழிப்பது நேர்மையான அரசியல்! நேர்மையான அரசியல்வாதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறதா?

அதேபோல், தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையானவர்கள், தகுதியானவர்கள், அரசியலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வராமல், கடமைக்கு தேர்தல் நடத்துவது வீண்.