
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என்கிறார். அதேபோல் தான், கருங்குழியில் சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் நான் ஒரு வருடத்திற்கு முன்பே அவரிடம் கேட்டபோது, அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருந்தது, தமிழ்நாட்டில் இரண்டு முறை திமுக வரும், பிறகு கட்சியை காணாமல் போய்விடும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதே போல் தான் மீண்டும் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் திமுக ஆட்சி வரும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தான் நாகப்பட்டினம் ராபின் ஜோதிடர் மீண்டும் திமுக ஆட்சி தான் வரும் என்று தெரிவித்துள்ளார். இதில், பாதி பேர் அதிமுக ,பாதிப்பர் திமுக, என்று சொல்லி இருக்கிறார்கள். இதைத் தவிர்த்து, சில பேர் விஜய் முதல்வர் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் போது ஜோதிடக்கலை எந்த அளவுக்கு மலிவாக வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது? இதில் ஒருவருடைய தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய கணிதம் அவ்வளவு சாதாரணமானது அல்ல.
இப்போது எல்லோரும் youtube-ல் பேசி விட்டார்கள். ஆனால், மீண்டும் திமுக ஆட்சி வந்தால், இவர்களெல்லாம் எப்படி ஜோதிடர் என்று சொல்லிக் கொள்வார்கள்? ஒருவர் ஆட்சியில் அமர வைப்பதும் ஆட்சியில் இருந்து நீக்குவதும் கிரகங்களின் கையில் இருக்கிறது.

ஜோதிடர்கள் கையில் இல்லை. மக்களின் கைகளில் இல்லை. அவர்கள் கருவிகள் தானே ஒழிய, எல்லோரையும் ஆட்டி வைப்பது ,ஆட சொல்வது கிரகங்கள் தான். அதனால், தற்போது உயர் மட்டத்தில் உள்ள ஜோதிடர் அரசு! அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, மீண்டும் திமுக ஆட்சி தான் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

என்ன இவர் இப்படி சொல்லி இருக்கிறார்? என்று நான் மேலும், தேர்தல் சம்பந்தமான கருத்துக்களை மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட போது, திமுகவிற்கு முப்பத்தி நான்கு சதவீத வாக்குகள் தெளிவாக இருக்கிறது என்கிறார்கள். இது தவிர, ஆறு மாதத்திற்கு முன்பே மக்களுக்கு சேர வேண்டியது எல்லாம், சேர்த்து விட்டார்கள்என்ற தகவல் .

மேலும், இப்போது, இந்த Rs: 8000 கூப்பன், எல்லாம் ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளால், இது, ஒரு பிரச்சனையாக வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த மக்கள் மாறாதவரை மாற்றமில்லை. அந்த மாற்றம் கிரகங்கள் கையில் தான் உள்ளது. அவர்கள் மாற்றினால் தான், இவர்கள் மாற்றுவார்கள். இது வாசகர்களுக்கு வித்தியாசமான செய்தி தான். எதார்த்தத்தையும், உண்மையும், எது என்று ?அலசி ஆய்வது தான் பத்திரிக்கை.

மேலும் ,அதிமுக பிளவு பட்டு, ஒருவருக்குள் ஒருவர் உட்கட்சி பூசல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. மேலும் ,அதிமுக பிளவு பட்டு, ஒருவருக்குள் ஒருவர் உட்கட்சி பூசல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
மேலும்,இது,அதிமுகவுக்கு பெரும் இழப்புதான், தவிர, வாக்கு சதவீதம் குறைந்து இருப்பது அதிமுகவுக்கு பினடைவாக இருக்குமா?
,