தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூடி விட முடியுமா?அதில் உள்ள சிக்கல்கள் என்ன? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

விஜய் முதல்வராக பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலே 717 கடை மூடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம். எங்களுக்கு வேலை கொடுங்கள், பத்தாண்டுகளாக பணியாற்றி இருக்கிறோம். இது தொழிலாளர்கள் பிரச்சனை.

அடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் பிரச்சனை ! குடிகாரர்கள் பல தரப்பட்ட வகையை சார்ந்தவர்கள், அதில், போதைக்கு அடிமையானவர்கள், அது ஒரு நாளாவது குடிக்கவில்லை என்றால் அவர்களால் உயிர் வாழ முடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? சதா போதையே வாழ்க்கையாக இருப்பவர்கள் எவ்வளவு? இவர்கள் எல்லாம் ஒரு நாள் கூட குடிக்கவில்லை என்றால், உயிரைக்கூடும் மாய்த்துக் கொள்வார்கள்.

இல்லையென்றால் கள்ளச் சாராயம் ஆவது குடிக்காக வேண்டும். அதைவிட ஒரு கொடுமை, வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, அவர்களுக்கு மது பாட்டல் கிடைக்கவில்லை என்றால், வார்னிஷில் கலக்கக்கூடிய ஒரு பொருளை அதாவது டிஸ்டில் வாட்டர் குடித்தவர்கள் எத்தனையோ பேர் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி இந்த போதை இல்லை யென்றால், இவர்களால் உயிர் வாழ்ந்து முடியாது.

இது தவிர ,ஓசியில் குடிப்பவர்கள் எவ்வளவு பேர்? இவர்கள் பணம் போட்டு குடிக்க மாட்டார்கள். யாராவது வாங்கி கொடுத்தால், குடிப்பார்கள்.

மேலும், இன்றைய நடுத்தர மக்களின் கல்யாணம் மற்றும் சாவுகளில் மது பாட்டல் இல்லாமல், இருப்பதில்லை என்ற நிலைமைக்கு வந்து விட்டார்கள். அது இருந்தால் தான் கூட்டம் கூடும்.

இது தெரியாமல்,மதுக்கடைகளை உடனே மூடிவிட்டால், கள்ளச் சாராயம் அது உடனே வெளி வந்து விடும். இது தவிர, நாட்டில் சட்ட விரோதமான செயல்கள் அதிகரித்து விடும். அதாவது கொலை ,கொள்ளை, கற்பழிப்பு ,அதிகரித்து விடும்.இந்த குடிகாரன் எல்லாம் என்ன செய்வான்? என்று தெரியாமல், ஒரு சைக்கோ நிலைக்கு மாறி விடுவார்கள்.

இன்னொரு பக்கம், குடும்பத்தில் பெண்களை தினந்தோறும் குடித்துவிட்டு அடிப்பவர்கள், துன்புறுத்துபவார்கள், இருக்கிறார்கள் .அந்தப் பெண்கள் எல்லாம் எப்போது இந்த டாஸ்மாக் கடையை மூடுவார்கள் ?என்று தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,ஒரே அடியாக மூடிவிட்டால் இதனுடைய பின் விளைவுகள் அதிகரித்து விடும். நான் சொல்வது அடிமட்டத்தில் உள்ள குடிகாரர்கள். இன்னொரு பக்கம் நடுத்தர வர்க்கத்தில் வேலைக்கு போய்விட்டு வந்தவுடன் ,அந்த மது பாட்டில்கள் இல்லை என்றால், அவர்களால் தூங்க முடியாது. வேலையை முடித்து வந்தவுடன் மதுக்கடைகளில் ஒன்று பாட்டில்களை வாங்கி சாப்பிட்டுவிட்டு ,வீட்டுக்கு வருவார்கள்.

இல்லை என்றால் ,பாட்டிலை வாங்கி பையில் போட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். இது போதைப் ,பைத்தியங்கள் அதிகரித்து விட்டது.

மேலும்,ஒரு மனிதன் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால், அவ்வளவு எளிதில், அவன் அதிலிருந்து உடனே வெளிவர முடியாது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இப்படி வருபவர்கள் லட்சத்தில் ஒருவர் தான். இதிலிருந்து அவர்களால் மீண்டு வர முடியுமா? என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.

மேலும் படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், அவர்களும் தான் குடிக்கிறார்கள். ஏன்? பத்திரிக்கை துறையில் பணியாற்றக்கூடிய நிருபர்கள் நூற்றுக்கு 95 சதவீதம் குடிக்கிறார்கள். குடிக்காதவர்கள் 10 to 5% இந்த நிலையில் குடிப்பவர்களை உடனடியாக நிறுத்தி விடு என்றால், யாராலும் அது முடியாத காரியம்.

இது தவிர, எல்லா அரசியல் கட்சிகளிலும் ,கட்சிக்காரர்கள் மது பாட்டில் இல்லாமல், அவர்களால் உயிர் வாழ முடியாது. எந்த கூட்டம் போட்டாலும் போகும்போது அவர்களுக்கு மதுபாட்டில் இல்லாமல் வீட்டுக்கு போக மாட்டார்கள்.ஒரு பக்கம் பதவி போதை! இன்னொரு பக்கம் அவர்களுக்கு மது போதை! இந்த இரண்டு போதைகளிலும் தான் அவர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் .

இப்படிப்பட்ட டாஸ்மாக் மதுவை உடனே நிறுத்தி விடு என்றால், நிறுத்தி விடலாம் .ஆனால், பின் விளைவுகள் ஏராளம். ஒரு பக்கம் வருமானம் பாதிப்பு, இன்னொரு பக்கம் மக்களின் பாதிப்பு, இதனால் பல குடும்பங்கள் பாதிக்கிறது.மேலும்,

பொருளாதாரத்தின் வீழ்ச்சி! ,அந்த குடும்பத்தில் எல்லோருமே சந்திக்கிறார்கள். ஆனால், உயிர் பிரச்சனை, சமூக பிரச்சனை ,ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வது, இது எல்லாம் அதிகரித்து விடும். சும்மா இருக்க மாட்டார்கள் ;ரோட்ல போறவனை கூட சீண்டி சண்டைகளை வெளிப்பார்கள். இதற்கு என்ன தான் தீர்வு ?படிப்படியான தீர்வுதான்.

மேலும் அதாவது போதைக்கு அடிமையான குடிகாரர்களை மருத்துவர் ரீதியில் அவர்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும். பிறகு மனரீதியான ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

இதை செய்யாமல், டாஸ்மாக் கடைகளை மூடி விடு என்றால், உயிர் பிரச்சனைக்கு யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.மேலும், குடிக்கவில்லை என்றால் மன நோயாளியாக மாறிவிடுவார்கள்.

இப்படியெல்லாம் பல்வேறு பின் விளைவுகள் டாஸ்மாக் கடைகளை மூடுவதால் ஏற்படும் ,அபாயம் இருக்கிறது.

மேலும் , இந்த டாஸ்மாக் கடைகளை பள்ளி, கல்லூரிகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இல்லாமல் தொலைவான பகுதியில் விஜய் இதை ஏற்படுத்தி இருக்கிறார். அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று.

மேலும்,பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மற்றும் இளம் வயதில் போதைக்கு அடிமையானவர்களை தடுக்க வேண்டும். அவர்களுக்கெல்லாம் டாஸ்மாக் கடையில், மது பாட்டில்கள் வழங்கக் கூடாது. அதே போல், பெண்கள் இதை எல்லாம் மது கடை ஊழியர்கள் அவர்களுக்கு கொடுக்காமல் தடுக்க வேண்டும்.

மேலும், அது எப்படி எங்களுக்கு தெரியும்? என்று ஊழியர்கள் சொல்வார்கள். ஆரம்பத்தில் வரக்கூடிய இந்த இளைஞர்கள் தினமும் குடிக்க வரமாட்டார்கள். அவர்கள் கையில் பணம் வரும் போதும் தான், குடிக்க வருவார்கள். அவர்கள் வயது நிலை கணக்கிட்டு ,அவர்களை தடுக்க வேண்டும்.

இதற்கு அடுத்தது, மதுபான கடைகளின் நேரம் படிப் படியாக குறைக்க வேண்டும். இது போல், மதுக் கடைகளையும் படிப்படியாக குறைக்க வேண்டும். மேலும் ,இந்த குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை படிப்படியாக தான் கொண்டு வர முடியும்.

எனவே, டாஸ்மாக் கடைகளை உடனே மூடி அரசு !பல்வேறு சிக்கல்களில், பின் னவிளைவுகளில் அதன் பாதிப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *