தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் தான் தலைமைச் செயலகம் வருகிறார். இதற்கு காரணம் இல்லாமல் இருக்குமா? மக்களின் கேள்விக்கு…! – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் விஜய் கோட் சூட்டில் வருவது பற்றி இது எல்லா மக்களுக்கும் புரியாத ஒரு புதிராகத் தான் இருக்கிறது.

காரணம் இதுவரை எந்த முதலமைச்சரும், கோட் சூட்டில் தலைமைச் செயலகத்திற்கு தினமும் வந்ததில்லை. எங்கேயாவது வெளிநாடு பயணம் செல்லும் போது மட்டும், இந்த கோட் சூட்டில் போவார்கள் .

ஆனால், இவர் தினமும் கோட் சூட் போட்டு, வருவதற்கு என்ன காரணம்? ஒரு முதலமைச்சர் தினமும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை சந்திப்பார். தொழிலதிபர்களை சந்திப்பார். அதற்காகவா? இல்லை.

அவருக்கு ஜோதிடர்கள் இந்த டிரஸில் தான் நீங்கள் வர வேண்டும். போக வேண்டும் என்று அறிவுரை சொல்லி இருப்பார்கள். இந்தக் கோட் சூட் ,பெரும்பாலும் நீதிபதிகள் , நீதித்துறையை சார்ந்த வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது எதற்கு என்றால்? இந்த கருப்பு என்பது நீதித்துறை சம்பந்தப்பட்டது. அப்படி என்றால், முதல்வர் விஜய் ஒரு நீதிபதி எப்படி அந்த சீட்டில் உட்காருவாரோ ,அதே நிலைமையில் தான் இவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும்,நவகிரகங்களில் சனி நீதிமான் அவர்தான் இந்த தீர்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார். அதனால், அவருடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், இந்த கோட் சூட் அணிந்து, முதல்வர் சீட்டில் அமர்ந்து பணியாற்றுகிறார்.

இல்லையென்றால் அவருக்கு இன்னும் பல பிரச்சினைகள் அவர் உருவாக்குவார். அது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,அந்த அளவுக்கு ஜோதிடம் இவர் பின்பற்றி வாழ்க்கையில் நடை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் எனக்கு தெரிய வந்துள்ள ஒரு உண்மை.

மேலும்,வேண்டுமானால் ,இதை விசாரித்து அல்லது ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளட்டும். இதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *