கல்வி என்பது வாழ்வியலோடு கலந்தது . ஆனால், 10 வகுப்பு ஐந்து மாணவர்கள் தேர்வின் தோல்வி தற்கொலை! வாழ்க்கையின் முடிவுக்கு வரலாமா?

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஒவ்வொரு உயிரும், உலகில் ஏதோ ஒரு காரணங்களுக்காக பிறப்பு எடுக்கிறது . அந்தப் பிறப்பு ஆசையின் அபிலாசைகள் பூர்த்தி செய்து கொள்ளவே, தவிர, தோல்வியாளும், ஏமாற்றத்தாலும், பிறருக்காக அல்லது பிறருடைய அவமானத்திற்காக, தற்கொலை செய்து கொண்டால், பிறப்புக்கு அர்த்தம் அற்றவர்கள் .

மேலும், மாணவ, மாணவிகள் கல்வி, பட்டப்படிப்பு இதுதான், ஒருவருடைய வாழ்க்கை என்று தீர்மானித்து ,முடிவு செய்து கொள்ளக் கூடாது. அப்படி செய்து கொள்பவர்கள், அதில் தோல்வி அடைந்தால், இப்படிப்பட்ட ஒரு விபரீத முடிவையும் எடுக்கக் கூடாது.தவிர, படிக்காதவர்கள் கூட எவ்வளவு பேர் ,மேதையாக வாழ்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளாக, புத்திசாலிகளாக, வாழ்ந்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார்கள். அதனால், இறைவன் கொடுத்த பிறப்பை, அறியாமையால் தற்கொலை என்பது உங்களுடைய இயலாமையும் ,முயற்சியின்மைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்.

மேலும், வாழ்க்கை என்பது இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் அது போராட்டக் களமானது. போராட்டத்தில் வெற்றி பெற்றால் தான் வாழ்க்கையின் வெற்றி. அதனால்,வெற்றி பெற்றால், அது எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ, அதே போல் தோல்வியையும் ஒரு மனிதன் சந்தித்தால் தான், அவன் வாழ்க்கையின் வெற்றியாளன். இது தவிர, ஒவ்வொரு வெற்றியாளனின் வாழ்க்கை பின்னணி என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் தோல்வியாளும், அவமானத்தாலும், செதுக்கப்பட்டவர்கள் தான் ,வாழ்க்கையின் வெற்றியாளன்.

மேலும், இதையெல்லாம் ஒரு பெரிய பொருட்டாக நினைத்துக் கொண்டு, எந்த நோக்கத்திற்காக பிறவி எடுத்தீர்களோ, அந்த பிறவியின் நோக்கமே தவறாகிவிடும். ஒவ்வொரு ஆன்மாவும் ஞானத்தை அடைவதற்காக தான், இங்கே பிறவி எடுக்கிறது. அந்த ஞானத்தின் மூலம் இறைவன் திருவடிகளை அடைவதற்கு தான் பிறவியே தவிர, இங்கே கல்வியில் பெரிய பட்டமும், சிறிய பட்டமும், பெரிய செல்வமும், மாட மாளிகையும், பெரிய பதவியும், சொகுசு வாழ்க்கையும், கௌவுரவமும், இவை அத்தனையும் உலகத்தில் அழியக்கூடியது.

நீங்கள் இருக்கும் வரை பாராட்டுப், புகழ், பெருமை எல்லாம் இருந்தாலும், மறைந்த பிறகு உங்களோடவே அது மறைந்துவிடும். அது எல்லாம் இங்கே விட்டு,விட்டு செல்வதுதான். ஆனால், இறைவனுடைய அருளை ஞானத்தின் மூலம் பெறும் போது, அது நாம் எடுத்துச் செல்லும் ஒரு சொத்து. இந்த சொத்தை சேர்ப்பவர்கள் தான்,உலகில் பாக்கியசாலிகள். அதில் அவர்கள் ஏழையாகவும் இருக்கலாம், பணக்காரனாகவும் இருக்கலாம், பிச்சைக்காரனாகவும் இருக்கலாம், கோடீஸ்வரனாகவும் இருக்கலாம், ஆனால், இறைவனுடைய அருளை ஒருவன் சம்பாதிப்பதற்காகத் தான் பிறவியின் நோக்கமே இருக்கிறது .

ஆனால், கல்வியில் தான் தேர்ச்சி பெறவில்லை. அது எனக்கு அவமானமாக இருக்கிறது என்று வாலாஜாபேட்டை மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி, மாதவி ஒரு பாடப் பிரிவில் தோல்வி அடைந்ததற்காக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அது போல், ஊத்துக்கோட்டை தாலுக்கா ,பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், படித்து வந்த மாணவன் லத்தேஷ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் வேறு சில பள்ளிகளில் தோல்வியுற்ற மாணவி ஷாலினி, மற்றும் மாணவன் கேசவன் என்பவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்விக்காக, உயிரை மாய்த்துக் கொண்டனர்.

மேலும்,உயிரை மாய்த்துக் கொள்வதற்காக, ஒவ்வொரு உயிரும் பிறப்பெடுக்கவில்லை. போராடியாவது வெற்றி பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள். மேலும், இப்போதெல்லாம் எந்த சப்ஜெக்ட் போயிருக்கிறதோ, அந்த சப்ஜெக்ட் எழுதினால் போதுமானது. கடந்த காலங்களில் ஆவது ஒரு சப்ஜெக்ட் போனாலும், மொத்தமாக எழுத வேண்டும். இப்போது அது எல்லாம் இல்லை. அப்படி இருக்கும் போது, மாணவ மாணவிகள் ஏன் ?தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்.

மேலும்,மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாமே, மார்க் குறைவாக இருந்தாலும், மீண்டும் அந்த மார்க்கை உயர்த்தக்கூட தேர்வு எழுதலாமே, இது எல்லாவற்றையும் அரசாங்கம் இப்போது ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், மாணவர்கள் தேர்வின் தோல்விக்காக தற்கொலை செய்து கொள்வது, உங்களுடைய அறியாமை. அறிவை வளர்த்துக் கொள்வதற்காக தான் கல்வியே தவிர, அறிவு இல்லாமல் தற்கொலை செய்து கொள்வது, நீங்கள் படித்ததற்கே அர்த்தம் இல்லை.

எனவே, இனி ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ ,மாணவிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள், அந்தந்த பள்ளிகளில் உள்ள முக்கிய ஆசிரியர்கள்! இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு பாடம் நடத்த வேண்டும் என்பது பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வைக்கும் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *