
தமிழக முதல்வர் விஜய் பொறுப் பேற்ற சில நாட்களிலே e – டெண்டர் முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.
மேலும்,இது அரசியல் தலையீடு இன்றி நேர்மையான நிர்வாகத்தை இதன் மூலம் கொண்டு வர முடியும். அதாவது இந்த e – tenders முறையில், விண்ணப்பங்கள் தனி நபரோ அல்லது கம்பெனியோ டெண்டர்களை கோரும் போது, அரசின் விதிமுறைகளில் யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியும்.

தவிர,இதுவரையில் மந்திரிகள் யாருக்கு? இந்த டெண்டர்களை சிபாரிசு செய்கிறார்களோ ,அவர்கள் முதலிலே கமிஷன் தொகையை மந்திரிக்கு கொடுத்த பிறகு தான், திமுக ஆட்சியில் அந்தந்த டெண்டர் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
மேலும்,தற்போது இணையதளத்தில் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றி அதன் மூலம் யார் ?அதற்கு தகுதியான நபர்கள்? யார் குறைந்த அளவில் அந்த வேலையை செய்ய முன் வந்துள்ளார்கள்? இப்படி அரசின் விதிமுறைகளில் தகுதியான நபர்களுக்கு இந்த டெண்டர்கள் போய் சேர வாய்ப்புகள் அதிகம்.

மேலும்,இதில் அரசியல் தலையீடு இல்லாத பட்சத்தில், இதை எப்படி வெளிப்படையாக நடத்தப் போகிறார்கள்? ஏனென்றால், ஒருவருக்கு கொடுத்தால் அவர் எவ்வளவு கோட் பண்ணி இருக்கிறார்? அவருடைய அமௌன்ட் (amount)?எந்த தேதி? எந்த நேரம்? எல்லாமே e – டெண்டர் மூலம் வெளிப்படையாக அது தெரிந்து விடும்.
அது மட்டுமல்ல, அவருடைய விண்ணப்பத்தில்,பெரும்பாலும் இந்த டெண்டர் விவகாரங்களில் ஊழல் நடப்பது, மிகவும் கஷ்டம் தான். அதிலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் ,இந்த முறையை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று.
அதாவது நகராட்சி ,பேரூராட்சி, பஞ்சாயத்து, இந்த மூன்றிலும், இந்த டெண்டர் விஷயத்தில் மிகவும் ஊழல்கள் மலிந்து கிடைக்கிறது. அதாவது நகராட்சி பொருத்த அளவில் செலவு செய்து விட்டு ,கணக்கு எழுத வேண்டிய நிலையில் நகராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது.
மேலும், நகராட்சி நிர்வாகத்தில்,ஸ்ரீபெருமந்தூர் பேரூராட்சியாக இருந்து, நகராட்சியாக மாறி உள்ள நிலையில் ,இங்கு திமுக கட்சியின் சேர்மன் சாந்தி தான், இந்த நகராட்சியை நிர்வாகித்து வருகிறார்.

மேலும்,இவருடைய நிர்வாகத்தை இங்கு இதனுடைய ஆடிட்டிங் கணக்கு எப்படி சரி செய்யப்படுகிறது? என்பது ஒவ்வொரு நகராட்சி நிர்வாகத்தின் கணக்கு, வழக்குகள் சரி செய்து எப்படி (account tally) டேலியாகிறது? ஆய்வு செய்தால், போலி பில்கள் போட்டு, பணம் எடுத்தது எத்தனை கோடி? வேலை செய்யாமலே செய்தது போல், கணக்கு காட்டியது எத்தனை கோடி ? மேலும், இதில் எவ்வளவு பேர் மாட்டுவார்கள் ?என்பது இந்த நகராட்சி மட்டுமல்ல, தமிழக முழுதும் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில்,இப்போது சொல்ல முடியாது ,ஆய்வு செய்தால் தெரியவரும்.
மேலும்,குப்பைக்கு கூட இந்த நகராட்சியில் வாரம் ஐம்பது ரூபாய் ஒரு வீட்டுக்கு வரி கட்டுறோம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தவிர,அந்தப் பணம் குப்பை எடுப்பவர்களுக்கும் சரியாக போய் சேர வில்லை என்பதுதான் ஸ்ரீ பெருமந்தூர் நகராட்சி மக்கள் தெரிவிக்கும் உண்மை. அது மட்டுமல்ல,
இதை எதிர்த்து கேட்ட ஒருவருக்கு, நான்காயிரம் ரூபாய் வீட்டு வரியை 8000 ரூபாயாக உயர்த்தி போட்டு இருக்கிறார்கள் என்கிறார். தவிர, பக்கத்து வீடும், என் வீடும் ஒரே அளவு, எனக்கு மட்டும் எப்படி 8000 போட்டார்கள்?
இந்த லட்சணத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், இருக்கின்றன. இதையெல்லாம் புதியதாக தேர்வு செய்யப்பட்ட அரசு சரி செய்யுமா? என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு .

மேலும்,இவர்கள் பத்திரிக்கைக்கு கொடுக்கக்கூடிய விளம்பரத்தால் ,அந்த நகராட்சி நிர்வாகமே ,ஏதோ நஷ்டம் அடைந்து விடுவது போல பேசும் இவர்கள், திமுக ஆட்சியில் செய்த ஊழல் நிர்வாகத்தின் செயல்பாடுகளை சரியான முறையில் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தால், எத்தனை ஆணையர்கள்? சேர்மங்கள் ?பொறியாளர்கள் ?ஊழலில் சிக்குவார்கள்?
மேலும்,புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களை அனுபவமுள்ள ஆடிட்டர்களை நியமித்து, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தால், எத்தனை கோடி போலி கணக்குகள் மூலம் பில் போட்டு எடுத்து சாப்பிட்டது, தெரியவரும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
