தமிழக முதல்வர் விஜய் எந்தெந்த துறைக்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்து நியமித்தால்! ஆட்சிக்கு நற் பெயரை ஏற்படுத்துவார்கள் – மக்கள் அதிகாரம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையிலும், அந்தத் துறையை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்றால், அந்தந்த துறையின் இயக்குனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் . மேலும்,

அவர்கள் கொடுக்கின்ற சிறப்பான நிர்வாகத்தால் ,ஆட்சிக்கு அதன் மூலம் நற்பெயர் கிடைக்கிறது. அதனால் ,ஒவ்வொரு ஐஏஎஸ் அதிகாரிகளையும், யார்? யார்? எந்தெந்த துறைக்கு தகுதியானவர்கள் ?என்பதை தேர்வு செய்து ,நியமிப்பது ஆட்சிக்கு நற்பெயரை அது வலுப்படுத்தும்.

மேலும்,ஒரு சிலர் எந்த துறையாக இருந்தாலும், அதில் வந்து அதை தெரிந்து கொள்ள குறைந்தபட்சம் மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும். அது யாராக இருந்தாலும், அந்த கால அளவு என்பது அவசியமானது. அதை தவிர்க்கும் பொருட்டு தான் ,இந்த செய்தியை தமிழக முதல்வர் கவனத்திற்கு மக்கள் அதிகாரம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.மேலும்,

கடந்த காலங்களில் நடந்த உண்மை அது என்ன என்றால்? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்தித் துறையில், பாஸ்கர பாண்டியன் இயக்குனராக இருந்தபோது, மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று முதல்வரிடம் கோப்புகளை சமூக நலன் பத்திரிகைகளுக்காக ஏற்படுத்தியவர். ஆனால், அந்த கோப்புகள் எடப்பாடி பழனிசாமியின் டேபிளுக்கு செல்லும் முன் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது.

மேலும், நாட்டில்,எத்தனையோ துறைகள் இருந்தாலும்,எல்லாத் துறைகளிலும் ,பத்திரிக்கை துறை! ஒரு சிக்கலான துறை. அதற்கு காரணம், இங்கே போலிகள், அதிகம். தகுதி இல்லாமல், அரசியல் கட்சியினர் போல், வாய் ஜால வித்தைகளை எல்லாம் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு துறை பத்திரிகைத் துறை! அதை சரி செய்ய முடியுமா? முடியும்.

காரணம்,கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள்,ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, இது நாள் வரை,சலுகை ,விளம்பரங்கள் இவர்களுக்கு மட்டுமே என்பதை அனுபவித்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எப்படி என்றால் 30% கமிஷன் கொடுத்து தான் அதை பெறுகிறார்கள், ‌என்பதை தமிழக முதல்வர் விஜய் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இதையெல்லாம் மாற்றாமல் செய்து துறையில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. கடந்த ஆட்சியில் எவ்வளவோ செய்திகள் கட்டுரைகள் மக்கள் அதிகாரம் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் தினந்தோறும் இணையதளத்திலும் வெளியிட்டு அதற்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. அதுபோல் இந்த ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் ஒரு நம்பிக்கை. அதற்கு காரணம்,

திமுக ஆட்சி! ஊழல் ஆட்சி ! அராஜக ஆட்சி நடைபெற்றது .அது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. முதலில் ஆட்சியில் இருப்பவர்கள், தகுதியுடன் ,ஒழுங்காக இருந்தால் தானே ,தவறு செய்பவர்களை இவர்கள் கேட்பார்கள் . மேலும்,

இவர்களே தவறு என்று சொல்லும்போது, தவறை எங்கே இவர்கள் கேட்பார்கள்? அதனால்,இவர்கள் தவறுகளை பாராட்டுபவர்கள் தான் , பத்திரிக்கை யாகவும் , பத்திரிகையாளர்களாகவும், இருந்தார்கள். ஒருவேளை அதன் காரணமாகத் தான், நக்கீரன் கோபாலுக்கு, பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதோ,

மேலும்,ஒருவேளை!திமுக ஆட்சியில்,அவருடைய மீசையை பார்த்து கொடுத்தார்களா? அல்லது அவருடைய பேச்சுத் திறமையை பார்த்து கொடுத்தார்களா? அரசியல் கட்சி பேச்சாளர்களுக்கும் ,இவருக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அதனால் கொடுத்திருப்பார்கள்.

மேலும், அது போன்ற தவறுகளை இந்த ஆட்சியில் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இச்செய்தியை தமிழக முதல்வர் விஜய்க்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பத்திரிக்கை துறை நாட்டுக்கு சமூகத்திற்கு முக்கியத்துவம் ஆன துறை. இந்தத் துறையில் போலிகளை களை யெடுத்து, தகுதியான பத்திரிகைகளுக்கும் ,பத்திரிகையாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இதற்கு,மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் கொடுக்கப்பட்டு வரும் செய்திகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலே, இந்தத் துறையை சீர் செய்ய முடியும். தவிர, செய்தித் துறையில் பணியாற்ற கூடிய தற்போதைய பி.ஆர்.ஓ க்கள் ,சோசியல் மீடியாவுக்கும், இணையதள பத்திரிகைக்கும், அர்த்தம் தெரியாமல் இருக்கிறார்கள்.

சில பேர் அரசியல் கட்சிக்காரர்களைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒவ்வொரு மாவட்டத்திலும் , அதிக ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு என்ன வேலை? இவர்கள் செய்கிறார்கள்?என்பதும் தெரியவில்லை .

இது தவிர,திமுக ஆட்சியில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சியின் மறைமுக ஏஜென்ட்களாகவே செயல்பட்டார்கள். ஒருவேளை இப்போது தவெக, அரசியல் கட்சி ஏஜென்ட்டுகளாக மாறிவிடுவார்களா? என்ற சந்தேகம் எங்களை போன்றவருக்கு எழுந்துள்ளது.

எனவே, இது பற்றி விரைவில் இயக்குனரை சந்தித்து பேச இருக்கிறேன். மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கும் முக்கிய துறைகளில் செய்தித்துறை ! மிகவும் முக்கிய இடத்தில் இருக்கிறது. புதிய அரசு இந்த மாற்றத்தை விரைவில் கொண்டு வருமா? – சமூக நலன் பத்திரிக்கைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *