
தற்போதைய ஹோட்டல்களில் பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஓட்டல்கள் வரை 90% சுத்தமான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதில்லை.

மேலும்,சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கேண்டின்களில் கூட தரமான உணவுகள் ,சுத்தமான உணவு பொருட்கள் சுவையாக கொடுப்பதில்லை.
இவர்கள்,பணத்திற்காக மட்டுமே ஹோட்டல் உணவகங்கள் நடத்துகிறார்கள். யாரும் உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதில்லை. இருப்பினும்,

மக்களின் பணத்திற்கு ஏற்ப, தரமான உணவு பொருட்களை கொடுத்தால் போதும். பணமும் கொடுத்து ,இவர்கள் தயாரித்து கொடுக்கின்ற உணவுகளால், மக்களுக்கு இன்று ஏற்படுகின்ற 99 சதவீத நோய்களுக்கு முக்கிய காரணம்.
மேலும்,பஜ்ஜி, போண்டா சுட்ட எண்ணெய்களிலே தாளிப்பு செய்வார்கள் .அது குருடு எண்ணெய் அளவுக்கு ஆனாலும், அதிலே போண்டா, பஜ்ஜி போட்டுக் கொடுப்பார்கள். அது மட்டுமல்ல, ,பரோட்டா , சப்பாத்தி,கூட பெரிய ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கேட்டால், உடனே போட்டு தர வேண்டும்.

ஆனால் காலையில் போட்ட பரோட்டாவையும் ,சப்பாத்தியும் மாலையில் இரவு 10 மணி வரை அதையே கொடுத்துக் கொண்டிருப்பார்கள். கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை, என்கிறார்கள்.மேலும்,
பணம் மட்டும் குறைக்கிறீர்களா? அது குறைப்பதில்லையே! இப்படி இது ஒரு புறம் என்றால், இது தவிர, அசைவ உணவுகளில் அதிகமான கலப்படங்கள் செய்கிறார்கள் .தற்போது மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி கலந்து ,செய்ததை பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,
எந்தளவுக்கு உணவு கலப்படத்தை செய்கிறார்கள்? என்றால்,தான் சாப்பிடப் போவதில்லை .எவனோ ஒருவன் சாப்பிடுகிறான் .அவன் உடலுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. எங்களுக்கு பணம் வந்தால் போதும் ,இவர்களை கண்காணிக்க உணவு துறை அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஏரியாக்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் கண்ணிலும் இவர்கள் மண்ணை தூவி விடுகிறார்களா? இல்லை ,அரசியல் செல்வாக்கால், இதையெல்லாம் காசு கொடுத்து விலைக்கு வாங்கி விடுகிறார்களா?

மேலும்,மக்கள் சாப்பிடும் உணவு மனசாட்சியுடன் கொடுக்க வேண்டும். சும்மாவா கொடுக்கிறீர்கள்? அவர்கள் பணம் கொடுத்த பிறகு தானே உணவு கொடுக்கிறீர்கள்? அது உங்களுடைய தயாரிப்புக்கு ஒரு சாப்பாட்டுக்கு இவ்வளவு கிடைத்தால் போதும் ,ஒரு உணவுக்கு இவ்வளவு கிடைத்தால் போதும், என்று ஒரு கணக்கு வைத்துக்கொண்டு கூட, நீங்கள் நல்ல உணவை மக்களுக்கு கொடுங்கள்.
ஆனால்,பசிக்கு வருபவர்கள், வேறு விதி இல்லை, இது நம்ம தலையெழுத்து என்று சாப்பிட்டுவிட்டு, போகிறார்கள். ஆனால், அந்த ஆத்மா! உங்கள் சாப்பாட்டால், நோய்வாய்ப்பட்டால் அந்தப் பாவம் உங்களை சும்மா விடாது. அதை நீங்கள் குடும்பத்தோடு சேர்ந்து ,அனுபவிக்க வேண்டி வரும்.
மேலும்,நானும் எவ்வளவோ ஹோட்டல்களில் சென்று ,சாப்பிட்டு பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் இருந்த உணவு ருசி, தற்போது இல்லை. ஏதோ ஒரு சில ஹோட்டல்களில் தான் தரமானதாக ,சுவையானதாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ஓட்டல்களை ஒவ்வொரு மாவட்டம் தோறும், சென்னையிலும் தேடி ,தேடி ,சாப்பிட வேண்டி இருக்கிறது. அந்த நிலைமைக்கு ஹோட்டல் உணவகங்கள் மாறிவிட்டது. அது மட்டுமல்ல ,
அசைவ உணவு பிரியர்கள் எங்கு டபராவில் பிரியாணி செய்தாலும், வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் அதனுடைய பின் விளைவு யோசிப்பதில்லை. அதேபோல், இறைச்சியில் கலப்படம் செய்து ,மக்கள், கவலைப்படாமல் வாங்கி சாப்பிடுகிறார்கள் .அதனுடைய விளைவு இன்று டாக்டர்கள் நன்றாக வளமாக்கிக் கொள்கிறார்கள்.
மேலும் ,மக்கள் அசைவ உணவுகளையும் சைவ உணவுகளையும் தரம் பார்த்து சாப்பிடுவது நோயிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
