50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்!

மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் வெற்றி. இன்று அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,மந்திரிகள், மாவட்ட செயலாளர்கள் ,தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார்கள்.

இவர்கள் எதற்காக அந்த கட்சியில் இருந்து, குறிப்பாக அதிமுகவிலிருந்து இன்று கூடாரமே காலியாகும் அளவுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. எம்ஜிஆருக்கு பிறகு ,ஜெயலலிதாவிற்கு பிறகு, எடப்பாடியின் தலைமை மக்களுக்காக இல்லை .அவரது ஆட்சியில் தனிநபர் உயர்வுக்கும், தனிநபர் ஊழலுக்கும், ஆட்சி செய்தார்கள்.

இவருடைய ஆட்சி தான் இப்படி இருக்கிறது என்று மக்கள் மாற்றி ,திமுகவின் தலைமையான ஸ்டாலின் ஆட்சிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த வாய்ப்பை ஸ்டாலின் தக்கவைத்துக் கொள்ளாமல் அரசியல் கட்சியினரும் இவர்கள் குடும்பமும் முன்னேற்றுவதற்கு ஊழல் செய்து சொத்துக்களை கொள்ளை அடிப்பதற்கு மிக மோசமான ஆட்சியை நடத்தினார்கள்.

அதனால் மக்கள் தூக்கி எறிந்தார்கள். இனி திராவிட கட்சிகளின் சாம்ராஜ்யம் அழியப் போகிறது என்பதை தெளிவாக புரிந்துக் கொண்டவர்கள், தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். மேலும்,

கூட்டணி கட்சிகளின் எதிர்பார்ப்புகள், மற்றும் பல கட்சிகளில் இருந்து வரும் முக்கிய புள்ளிகள், நிர்வாகிகள், இவர்களுடைய எதிர்பார்ப்புக்கு அரசியல் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நினைத்தால் ,அது மக்களின் எதிர்ப்புக்கு, தமிழக வெற்றிக்கழகம் ஆளாக நேரிடும்.

அதனால், இவர்கள் இருவரும் ,செய்த தவறை தமிழக வெற்றிக்கழகம் செய்யக்கூடாது. தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிர, அரசியல் கட்சியினரை வலுப்படுத்தும் நோக்கத்திற்கான ஆட்சியாக ,அது இருக்கக் கூடாது.

மேலும்,இவர்கள் இருவரும் ,அரசியல் கட்சியினரின் நோக்கத்திற்காக ஆட்சியை நடத்தினார்கள். இப்போதும் தமிழக வெற்றி கழகத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் அதே போல் தான் ,இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் .

ஆனால், அதற்கு விஜய் ஒத்து வர மாட்டார் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது. மேலும் விஜய் தமிழக மக்களின் பல்ஸ் தெரிந்து கொண்டார். திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? என்பதையும் தெரிந்து கொண்டார். எதனால் அவர்களுக்கான வீழ்ச்சி ?என்பது இன்னும் அவர்களே புரிந்து கொள்ள முடியாத நிலையில் விஜய் அதை புரிந்து கொண்டார்.

அதனால்தான், ஊழல் விஷயத்தில் அனைத்து துறைகளிலும், மிகக் கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்து உள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும்,மக்கள் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஊழலை சகித்துக் கொள்ள முடியாமல் தான், வேறு வழி இல்லாமல், மாறி, மாறி வாக்களித்து கொண்டிருந்தார்கள்.

சரியான நேரத்தில் விஜய் அரசியலுக்கு வரவே, இவர்கள் ஒழிந்தால் போதும், என்று வாக்களித்திருக்கிறார்கள். மேலும், அங்கிருந்து ஊழல் வழக்குகளும், கிரிமினல் வழக்குகளும், உள்ளவர்கள் இணைந்து கொண்டாலும், அதையெல்லாம் அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சி.டி நிர்மல் குமார் என்று வெளிப்படையாகவே பேசி விட்டார்.

இங்கே ஊழல் செய்துவிட்டு, தவெகவில் இணைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தால், அது நடக்காது. விஜய் நிச்சயம் அதற்கெல்லாம் முட்டுக் கொடுக்க மாட்டார்.

அதற்கெல்லாம் முட்டுக் கொடுப்பவர்கள் பழனிசாமியும், ஸ்டாலினும் தான் ,முட்டுக் கொடுப்பார்கள். மேலும் ,கார்ப்பரேட் ஊடகங்கள் முட்டுக் கொடுப்பார்கள். வேறு யாரும் முட்டு கொடுக்க மாட்டார்கள்.

எனவே , இன்று மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் , அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு பெரிய கூட்டம் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு தமிழக முதல்வர் விஜய் வருவாரா ?என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. எனவே, விஜய் அவர் கட்சியினர் தவறு செய்தாலும், அவர்களை காப்பாற்ற மாட்டார். அதனால், மற்ற கட்சியிலிருந்து வந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அவர்களுடைய நினைப்பு ஏமாற்றம் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *