
திமுக ஆட்சியில் தான் மருத்துவமனைகளில் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவத்தை அலட்சியம் செய்து அரசு மருத்துவமனைகளில் எந்தவித அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களின் மருத்துவத்திற்கு பயனில்லாமல் ஆக்கிவிட்டார்கள்.

அதே நிலைமை, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் இது தொடர்வதாக தேனி மாவட்ட போடிநாயக்கனூர் மருத்துவமனையில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையை உடனடியாக மாற்றப்பட வேண்டும்.
மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் சார்பிலும் ,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,ஏழை ,எளிய நடுத்தர மக்களுக்கு மருத்துவத்தையும், கல்வியையும் உயர்த்தி கொடுங்கள் என்று அரசுக்கு அப்போதும் கோரிக்கை வைத்தோம். இப்போதும் கோரிக்கை வைக்கிறோம்.
இங்கே பல் மருத்துவர்கள் இல்லை. இ .என் .டி (ENT) மருத்துவர்கள் இல்லை. நியூராலஜி (neurology doctors)டாக்டர்ஸ் இல்லை. பேருக்கு போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே செவிலியர்களும் இல்லை. இப்படி டாக்டர்களே இல்லாமல் இருந்தால், தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நன்றாக காசு சம்பாதிப்பார்கள் மக்கள் வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய உழைப்பால் கிடைத்த ஊதியத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு, குடும்பத்தில் பொருளாதார இழப்பை சந்திக்கிறார்கள். மேலும் ,கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பி. எச்.(Public primary Health centre) . சென்டர்களில் ,நாய்கடி ,பாம்பு கடி ,உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் சிகிச்சை பெற வேண்டி இருப்பதால், அங்கும் டாக்டர்கள் சரியாக வருவதில்லை.தவிர, டாக்டர்கள் குறித்த நேரங்களில் இல்லாமல் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய கழிப்பறைகள் மிக ,மிக ,சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். எங்கு சுத்தமும், சுகாதாரமும் கடைபிடிக்க வேண்டியதோ, அங்கே கடைப்பிடிக்கவில்லை என்றால் ,நோய் தொற்று, அடுத்த நோயாளிக்கு விரைவில் பரவும் .இது டாக்டர்களுக்கு நன்றாக தெரியும்.

தெரிந்தும் மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக ஏன் வைத்திருக்கவில்லை? அப்படி இருந்தால் ,எப்படி நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவார்கள் ?நோய் சிகிச்சை செய்து கொள்வார்கள் ? அதேபோல், அங்கு இருக்கக்கூடிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம், மிக பழமையானதாக இருப்பதால் ,அதையெல்லாம் அப்புறப்படுத்தி, புதிய மெஷின்கள் மருத்துவமனையில் ஏற்படுத்தி, சுகாதாரமான மருத்துவமனையாக மாற்றித் தர பொதுமக்கள் கோரிக்கை.
அதிலும், டாக்டர்கள் பயிற்சி டாக்டர்களாக இல்லாமல், பயிற்சி பெற்ற டாக்டர்களாக, அங்கே பணி நியமனம் தேவை என்று தமிழக முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் சார்பாக ,தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளனர்.
