
அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை.
மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக சொல்கிறது .இதை எத்தனை பத்திரிகையாளர்கள் வேண்டுமானாலும் ,ஆய்வு செய்து பார்க்கட்டும், எது உண்மை? எது பொய்?

மேலும்,1965 க்கு முன் உள்ள அரசியலில் இப்படிப்பட்ட அரசியல் கட்சியும் இல்லை. அரசியல் கட்சியினரும் இல்லை .கட்சித் தலைவர்களும் இல்லை. கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தார்கள்.இன்று பதவிக்காக அலைபவர்களும், பணத்துக்கு அலைபவர்களும், போட்டி ,போட்டு ஓடி வருகிறார்கள்.

அதனால் ,மக்கள் எந்த அரசியல் கட்சியும், தமிழ்நாட்டில் நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை. மக்கள் நலனில், அக்கறை காட்டுபவர்கள் பேசி ,நடித்துவிட்டு, போபவர்களாக தான் இருக்கிறார்கள்.
இன்னும் இந்த வருங்கால இளைய தலைமுறை, எப்படிப்பட்ட கேவலமான அரசியலை பார்க்கப் போகிறதோ, என்பதுதான் எனக்குள்ள வேதனை.

மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் தலைவர்கள், மக்களுக்காக வாழ்ந்து விட்டு, போயிருக்கிறார்கள். ஆனால், இப்போது சினிமாவில் இருந்து தான் அரசியலுக்கு வருகிறார்கள். அது மட்டுமல்ல,
இவர்களுடன் இவர்களுடைய ரசிகர் கூட்டமும் வருகிறது. இது எல்லாம் ஒரு பேசிக்கான( Basic)அடிப்படை அரசியல் அறிவு அல்லது அடுத்தவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் .அல்லது அந்த பரம்பரையாவிலாயாவது வந்திருக்க வேண்டும் .

அவர்களுடைய blood ல் அது இருந்தால்தான், அவர்களால் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முடியும் .அல்லது அரசியலில் ஒரு நேர்மையான நல்லாட்சி, நிர்வாக திறமை, 10 பேருக்கு பயன்படும் அளவில், அவர்களுக்கு அதை செய்து தர முடியும்.
மேலும்,நேராக சினிமாவில் கைதட்டி விட்டு, போஸ்டர் ஒட்டி விட்டு, கொடி பிடித்துக் கொண்டு, கத்திக் கொண்டு, இது எல்லாம் எப்படி இவர்களுக்கு இந்த எண்ணங்கள் மனதில் இருந்து வரும் ?நிச்சயமாக வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதனால்தான் அரசியல் தவறாக போய்க்கொண்டே இருக்கிறது.

திமுகவின் அரசியல் எதனால் தவறாக போனது? அந்த உண்மை தெரியுமா? கிரிமினல்ஸ் அத்தனை பேரையும் கட்சியில் சேர்த்தார்கள். அதனுடைய பலனை தமிழக மக்கள் அனுபவித்தார்கள்.இப்போது விஜய்யால் ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இது கூட இவருக்கு அடிப்படை அரசியல் நான்வெஜ் (political knowledge)குறைவுதான். தமிழ்நாட்டில் மூன்று அரசியல் தலைவர்களுக்கு பின்னால், எம்ஜிஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி அடுத்து வந்த அரசியல் தலைவர்கள், இவர்கள் எடுக்கின்ற முடிவுகள் ,பேசுகின்ற பேச்சுக்கள் ,அரசியலில் நடந்த ஊழல்கள் ,எதுவுமே சரியான அரசியலை தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லை . இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை. மேலும்,

ஜெயலலிதா இறந்த பிறகு ,தமிழ்நாட்டு மக்களுக்கு வந்த அரசியல்! ஒரு இருண்ட காலம் .மக்கள் அதில் சொல்லொனா துயரங்களை அனுபவித்து, சகித்துக் கொள்ள முடியாமல், வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இப்போது விஜயின் ஆட்சியில் ஊழல்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மற்றபடி இவர் மதம், ஜாதி இல்லாத ஒரு அரசியலை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு , இப்போது பாட்டியல் இன மக்களுக்கு பதவி பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இங்கேயும் ஆரம்பித்துவிட்டது .ஜாதி அரசியல். மக்கள்! அதிகாரம் கையிலே கொடுத்து விட்டால் ,இவர்கள் பேசியதை எல்லாம் மறந்து விடுகிறார்கள்.
மேலும்,ஏற்கனவே கரூர் விஷயத்தில் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்ட செய்தி படிதான் நடந்தது. அவர்களுக்கு வேலை கொடுத்தால், நிச்சயம் இந்த பிரச்சனை நீதிமன்ற வரை செல்லும் என்றும் , சொல்லியிருந்தோம் அதேபோல், இந்த பிரச்சனை தற்போது நீதிமன்றத்திற்கும் போய்விட்டது.

அங்கே நீதிபதிகளின் தீர்ப்பு தற்காலிகமான பணி நியமனம் மட்டுமே என்று குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். இது போன்று ,பல பேர் பல இடத்தில் இறந்திருக்கிறார்கள். நடிகராக இருந்தபோது அல்லது பதவியில் இல்லாத போது, உங்களை பார்க்க வந்து இருந்தவர்கள்.
இது ஒரு பக்கம் மனிதபிமானம் என்று நீங்கள் சொன்னாலும், அடுத்து, அடுத்து இதேபோல் நிகழ்வுகள் நடந்தால்! அல்லது ஏற்கனவே நடந்திருக்கலாம், அவர்களுக்கு எல்லாம் அரசு வேலை வாய்ப்பு போட்டுக் கொடுத்தால், அரசு வேலைக்காக படித்து காத்திருப்பவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் தான்.

மேலும், இன்று அரசு வேலை என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. அதற்கான போட்டி கடுமையாக்கப் பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, தகுதி இருப்பவர்களுக்கே வேலை கிடைக்கவில்லை. அரசு வேலைக்காக படித்து கஷ்டப்பட்டு ,வந்தவர்களை கேட்டுப்பாருங்கள் .அவர்கள் எவ்வளவு சொல்கிறார்கள்? அப்போதுதான் இந்த உண்மை தெரியும். மேலும்,
இவர் இந்த தவறை செய்திருக்கிறார் என்பது தெரிந்த உண்மைதான். தவிர, மக்களால் பேசத்தான் முடியும். எங்களைப் போன்ற பத்திரிகைகள் எழுத தான் முடியும். அதிகாரம் இல்லையே !நீதிமன்றம் தற்போது கையில் எடுத்திருக்கிறது. இந்த தீர்ப்பு கூட உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்போடு நின்று விடுமா? அல்லது அது உச்ச நீதிமன்றம் வரை செல்லுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திருமாவளவனை சேர்த்தது எப்படியும் இது விஜய் ஆட்சிக்கு ஆபத்து தான். அன்று திமுகவிடம் போட்டிகளை வாங்கிக் கொண்டு ,நண்பனாக பேசினார். இன்று வேறு மாதிரியாக பேசுகிறார். இது எல்லாம் தகுதியான அரசியல்வாதிக்கு அழகு அல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி.
