
தமிழ்நாட்டில்!அரசியலில் நல்லவர்களாக டிராமா போடும் அரசியல் கட்சிகளிலே திமுக சாதனை படைத்துள்ளது.

மேலும், திமுகவின் ஆட்சி எப்போதெல்லாம் வந்துள்ளதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தவிர,போகும் போது கஜானாவை காலி ஆக்கி,கடைசியாக துடைத்து எறிந்து விட்டு தான், போவார்கள். மேலும், இவர்களுடைய ஒரே மூலதனம் என்னவென்றால், பேச்சும், கார்ப்பரேட் மைக்குகளும் மட்டுமே, அடித்தட்டு மக்களை ,அதாவது வறுமையில் கஷ்டப் படுபவர்களை கட்சிக்கு கொண்டு வந்து, அவர்களை வைத்து அரசியல் செய்து இருக்கிறார்கள்.

சொல்லப்போனால், ஆரம்பத்தில் இவர்கள் அனைவரும், ஒரு வெத்து வெட்டு கூட்டங்கள், இன்று தமிழ்நாட்டின் கோடீஸ்வரர்கள். இவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள், தமிழக மக்களுக்கு அது நன்றாக புரியும்.
மேலும், இந்த கொள்ளையடித்த பணத்தை அதிமுக ,திமுக என மாறி, மாறி அவர்களுடைய அரசியல் இருப்பு இருக்கும், அதுவும் புரட்டிப் பாருங்கள். அதனால்தான், இப்போது தமிழக வெற்றி கழகத்திற்கு படையெடுக்கிறார்கள். இதை விஜய் புரிந்து கொள்வாரா?

மேலும், இவர்கள் அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி கடனை அடைக்க வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வர் விஜய்க்கு மக்களின் முக்கிய கோரிக்கை.
மேலும், திமுகவின் குடும்பம் மக்கள் சொத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இதற்கு அரசியல் தான் கொள்ளையடிக்கும் பணத்தை காப்பாற்றக்கூடிய ஒரே தளம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான், அரசியல் மக்கள் சக்தியை வைத்து மக்களை அழித்துக் கொண்டிருக்கும் ஒரு தீய சக்தி திமுக.

மேலும்,யாரெல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக, திமுகவின் அதிகார பதவி மூலம் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது? என்பதை கணக்கீடு செய்து ,அவர்களுடைய சொத்துக்களில் மற்றும் பினாமி சொத்துக்களில் ,இந்த 10 லட்சம் கோடி கடனை அடைக்க வேண்டும். அதாவது,மக்கள் பணத்தை மக்களிடமே சேர்ப்பது தான் உண்மையான, நேர்மையான ஆட்சிக்கு சான்று. அதை தமிழக முதல்வர் விஜய் செய்வாரா?
