
ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது.

இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா?
இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு காரணமும் இருக்கிறது பெரும்பான்மை இல்லாத ஆட்சியாக 108 எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி நடத்தி வருவது மிகப்பெரிய ஒரு கஷ்டமான சூழ்நிலை. அதிலும், இந்த அளவுக்கு மக்களுக்கான ஆட்சியை ஜோசப் விஜய் நடத்தி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.
இதில் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை 118 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து காய்களை நகர்த்தி வருகிறார்.
அப்படி நகர்த்தி வந்தாலும், ஒரு பக்கம் நீதிமன்றம் இடைத் தேர்தலுக்கு தடை விதித்துள்ளது. அடுத்தது ,குதிரை பேரம் என்று கவர்னரிடம் எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்து அந்த விசாரணையை மேற்கொள்கிறார்கள். இப்படி பல நெருக்கடிகளுக்கு இடையில் ஆட்சியை நடத்துவது மிகப்பெரிய போராட்டம் தான்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து மக்கள் ஏமாறுவார்கள் என்று கற்பனையில் இருப்பதுதான் மிகப்பெரிய வேதனை. ஏனென்றால், அவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும், அதை உண்மை என்று மக்களிடம் சொல்ல கார்ப்பரேட் ஊடகங்கள், நம்முடைய அரசியல் வியாபாரத்திற்கும் ,அவர்களுடைய பத்திரிகை வியாபாரத்திற்கும் ஒத்துழைப்பார்கள் என்று இவர்களை நம்பி தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் ஆட்சிக்கு வருவோம் என்று புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.

மேலும்,நீங்கள் எத்தனை கார்ப்பரேட் பத்திரிகைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் ,youtube களிலும்,புலம்பினாலும், இனி மக்கள் ஏமாற தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டால் சரி.
