
மக்களுக்காக போராடுகிறோம் என்ற பெயரில் பல சமூக விரோத கும்பல், மே 17 இயக்கம் , மக்கள் அதிகாரம் இயக்கம், இப்படி பல இயக்கங்கள், அமைப்புகள்,இவர்கள் அத்தனை பேரையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், இப்போது புதிதாக வந்துள்ள (காக்ரோச் )கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இது போன்ற அமைப்புகள்! இதற்கு பின்னால் அரசியல் ?இது போராட்டம் என்ற பெயரில் ஜனநாயகத்தையே சீர்குலைய வைக்கிறது.

இவர்களுக்கு பின்னால் பைனான்ஸ் செய்யக்கூடிய அந்நிய சக்திகள், அதாவது வெளிநாட்டு பணம் இவர்களுக்கு எப்படி வருகிறது? ஏன் இவர்களுக்கு வெளிநாட்டு பணம் வருகிறது? இவர்கள் என்ன செய்கிறார்கள்? நாங்கள் சமூக சீர்திருத்தங்களை செய்கிறோம், மக்களுக்கு இதை செய்கிறோம், அதை செய்கிறோம், என்று நாட்டில் குழப்பத்தை விளைவிக்க கூடிய சமூக விரோத கும்பல் தொடர்ந்து மத்திய ,மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இதில் தமிழ்நாட்டில் ஏறக்குறைய திமுக பின்னணியில் ஒரு 200 அமைப்புகள் இருக்கலாம். அதனால் தான் அவர்கள் இப்போதும் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அதிகார இயக்கத்தில், டாஸ்மாக் மூட வேண்டும் என்று ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, பாட்டு பாடி மேளம் அடித்துக் கொண்டிருப்பான், அவன் எல்லாம் திமுக ஆட்சியில் எங்கே போனான்? என்று கூட தெரியவில்லை.

மேலும், இந்த சமூக விரோத சக்திகள் என்ன சொல்லுவார்கள்? என்றால் பிஜேபி பாசிச ஆட்சி! பாசிச ஆட்சிக்கு என்ன அர்த்தம்? என்று கூட தெரியாதவன் எல்லாம், பாசிசம் பேசிக் கொண்டிருக்கிறான் .அதைக் கேட்டுக் கொண்டிருப்பவனுக்கும், அதற்கும் அர்த்தம் தெரியாது. ஏன் ? பல பத்திரிகை ஊடகங்களுக்கு கூட தெரியாது.

பாசிச ஆட்சி பிஜேபி நடத்தி இருந்தால், உங்களை எல்லாம் எப்போதோ கைது செய்து இருக்க வேண்டும் .சிறையில் அடைத்திருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி நடப்பதால் தான் ,பேசிக் கொண்டிருக்கிறீர்கள் .இங்கு என்ன ஹிட்லர் ஆட்சியா நடக்கிறது? அதுதான் பாசிச ஆட்சிக்கு எடுத்துக்காட்டு.
இப்போதாவது மக்களுக்கு இந்த உண்மை புரிய வைக்க வேண்டும் என்று தான் மக்கள் அதிகாரம் மக்களிடம் இப்படிப்பட்ட அரசியல், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,போராட்டம் என்பது சட்ட போராட்டம் ,வீதியில் இறங்கி போராடுவது, உரிமைகளுக்காக போராடுவது தவறு இல்லை .ஆனால், அவதூறு பேசிக்கொண்டு ,மக்களிடம் தவறான கருத்துக்களை பேசிக்கொண்டு ,சமூக விரோத செயல்களை செய்து கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டம் என்ற பெயரில், ஒவ்வொரு அமைப்புகளையும் ,ஆய்வு செய்ய வேண்டிய கட்டத்தில் நாடு உள்ளது.

மேலும்,இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இதுவரை எதற்காக இவர்கள் இந்த அமைப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இவர்களுக்காக நடத்துகிறார்களா? இல்லை மக்களுக்காக நடத்துகிறார்கள்? இந்த இரண்டே கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். இதுவரையில் இவர்கள் செய்தது என்ன? இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? யாரெல்லாம் டொனேஷன் கொடுத்தவர்கள்? இங்கே தான் சமூக விரோத செயல்களின் முக்கிய அங்கமே உள்ளே நிற்கிறது.

மேலும்,எப்படி காக்ரோச் ஜனதா கட்சி இளைஞர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்தது? வெளிநாட்டில் இருந்து உணவு வந்தது ?எப்படி வந்தது? உணவு ,இந்த நாட்டில் இருந்து தான் வரவேண்டும். ஆனால், வெளிநாட்டில் இருந்து எதற்காக வருகிறது? இது பற்றி விரிவான ஆய்வறிக்கை மத்திய, மாநில அரசின் உளவுத்துறை ,அரசாங்கத்திற்கு கொண்டு செல்ல சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .
